'பலே பாண்டியா' அதை சொல்ல ரொம்ப துணிச்சல் வேண்டும் - சூரியை புகழ்ந்து தள்ளிய கவிஞர் வைரமுத்து
நடிகர் சூரியின் செயலை பாராட்டி கவிஞர் வைரமுத்து போட்டு இருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் காமெடி நடிகனாக இருந்து ஹீரோவாக கலக்கி கொண்டிருப்பவர் சூரி. இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் தற்போது இவருடைய நடிப்பில் உருவாகி இருக்கும் படம் மாமன். இந்த படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி, ராஜ்கிரண், பாபா பாஸ்கர், விஜி சந்திரசேகர் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கியிருக்கிறார். இந்த படம் தாய்மாமன் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது. பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், இந்த படம் வெற்றியடைய வேண்டும் என்று சூரி உ டைய ரசிகர்கள் சில பேர் மண் சோறு எல்லாம் சாப்பிட்டு இருந்தார்கள். இதனால் இதை கண்டித்து சூரி அளித்த பேட்டியில், இந்த படம் வெற்றி அடைய வேண்டும் என்று என்னுடைய ரசிகர்கள் மனசோறு சாப்பிட்டு இருந்தார்கள்.
சூரி பேட்டி:
இது ரொம்ப முட்டாள்தனமானது. என்னை ஆச்சரியப்படுத்தனும், என் படம் நல்லா ஓடணும் என்று ஒரு விஷயத்தை செய்கிறீர்கள். ஒரு படத்தோட கதை நன்றாக இருந்தால் அந்த படம் கண்டிப்பாக நன்றாக ஓடும். மண்சோறு சாப்பிட்டால் படம் ஓட போகுதா? இந்த காசுக்கு நீங்கள், சிலருக்கு தண்ணீர் வாங்கி கொடுத்திருக்கலாம், சாப்பாடு கொடுத்திருக்கலாம். இந்த மாதிரியான விஷயங்கள் செய்பவர்கள் என்னுடைய ரசிகர்களாக இருப்பதற்கு தகுதியே இல்லாதவர்கள்.
ரசிகர்கள் செய்த வேலை:
நான் உணவை ரொம்ப மதிப்பவன். நான் உணவுக்காக ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கிறேன். கடினமாக உழைப்புக்கு பிறகுதான் மக்கள் என்னை இங்கு கொண்டு வந்து உட்கார வைத்திருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது அந்த சாப்பாட்டுக்கு மரியாதை கொடுக்கவே இல்லை. தவறான செயலைப் பண்ணி என்னை கஷ்டப்படுத்தாதீர்கள். நல்ல படங்களை பாருங்க, கொண்டாடுங்க. உங்களுக்கும் வாழ்க்கை இருக்கு, அதையும் பாருங்க. இந்த படத்தை பார்த்த மக்கள் ரொம்ப நன்றாக இருக்கிறது என்று சொன்னார்கள்.
https://www.youtube.com/watch?v=aS_wyCjPE94
சூரி கண்டனம்:
நிறைய பேர் அழுதார்கள். படம் முடித்து எல்லோரும் கைதட்டினால் அதுதான் படத்திற்கான மரியாதை என்று நினைக்கிறேன். அந்த வகையில் மாமன் படத்தை பார்த்த மக்களும் கைத்தட்டினார்கள். பெண்கள் ஒவ்வொருத்தரும் அவர்களை இந்த படத்தோடு கனெக்ட் செய்து கொண்டார்கள். எதற்காக இந்த படத்தை இயக்குனர் எடுத்தாரோ அது சேர வேண்டியவர்களுக்கு சரியாக சேர்ந்து விட்டது. இன்னும் எல்லா உறவுகளும் குடும்பங்களும் இந்த படத்தை கொண்டாடுவார்கள் என்று நினைக்கிறேன் என்று எமோஷனலாக பேசியிருந்தார்.
திரைக்கலைஞர்
— வைரமுத்து (@Vairamuthu) May 17, 2025
தம்பி சூரியைப்
பாராட்டுகிறேன்
தனது திரைப்பட வெற்றிக்காக
மண்சோறு தின்ற ரசிகர்களைப்
பகிரங்கமாகச் சாடியிருக்கிறார்
மண்ணிலிருந்து தானியம் வரும்;
தானியம் சோறாகும்.
ஆனால், மண்ணே
சோறாக முடியாது
இந்த அடிப்படைப்
பகுத்தறிவு இல்லாதவர்கள்
தன் ரசிகர்களாக இருக்கமுடியாது
என்று… pic.twitter.com/PF7rEDPDY0
வைரமுத்து பதிவு:
இந்நிலையில் சூரியின் செயலை பாராட்டி கவிஞர் வைரமுத்து போட்ட பதிவில், திரைக்கலைஞர் தம்பி சூரியை பாராட்டுகிறேன். தன்னுடைய திரைப்பட வெற்றிக்காக மண் சோறு சாப்பிட்ட ரசிகர்களை பகிரங்கமாக சாடியிருக்கிறார். மண்ணிலிருந்து தானியம் வரும், தானியம் சோறாகும். ஆனால், மண்ணே சோறாக முடியாது. இந்த அடிப்படை பகுத்தறிவு இல்லாதவர்கள் தன் ரசிகர்களாக இருக்க முடியாது என்று சொல்வதற்கே மிகப்பெரிய துணிச்சல் வேண்டும். கதாநாயகர்கள் ஒவ்வொருவரும் தங்கள் ரசிகர்கள் கூட்டத்தை இப்படி நெறிப்படுத்தி வைத்திருந்தால் கலையும் கலாச்சாரமும் மேலும் மேலும் வளரும். மண் சோறு தின்றால் ஓடாது, மக்களுக்கு பிடித்தால் மாமன் படம் ஓடும். பகுத்தறிவு காத்திருக்கும் சூரி, பலே பாண்டியா என பாராட்டுகிறேன் என்று கூறியிருக்கிறார்.