விஜய்யை நேரில் சந்திக்கவும் தயங்கமாட்டேன் - கவிஞர் வைரமுத்து வைத்த கோரிக்கை

விஜய்யை நேரில் சந்திக்கவும் தயங்கமாட்டேன் - கவிஞர் வைரமுத்து வைத்த கோரிக்கை

By subhashini · 30/6/2026

தமிழ் சினிமாவில் உள்ள முக்கிய இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து இருந்தவர் பாரதிராஜா. இவரை இயக்கத்தின் இமயம் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு இவரது படைப்புகள் இருந்தது. இவர் தமிழ் சினிமாவில் சிறந்த காவியமாக திகழ்ந்து கொண்டு இருந்தார். இவர் இயக்குனர் மட்டும் இல்லாமல் நடிகரும், தயாரிப்பாளரும் ஆவார். இவர் 16 வயதினிலே என்ற படத்தின் மூலம் தான் இயக்குனராக தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார். முதல் படத்திலேயே இவர் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.

அதனைத் தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களை வைத்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து இருந்தார். அதுமட்டும் இல்லாமல் இவருடைய படங்கள் எல்லாமே கிராமத்து மண்வாசனை, உணர்வு நிறைந்த நாட்டுப்புறக் கதைகளை மையமாகக் கொண்டது. இதனிடையே பாரதிராஜாவின் மகன் மனோஜ் காலமானார். இவருடைய இறப்பு பாரதிராஜாவுக்கு மிகப்பெரிய துயரத்தை கொடுத்தது. தன்னுடைய மகனின் மரணத்திலிருந்து மீண்டு வர முடியாமல் மன வேதனையில் இருந்தார். அதற்கு பிறகு பாரதிராஜாவின் உடல்நிலை சரியில்லாமல் போனதால் சிகிச்சை எடுத்துக்கொண்டு வந்தார்.

பாரதிராஜா மறைவு:

குறிப்பாக, கடந்த சில மாதங்களாகவே இவர் ரொம்பவே அவஸ்தைப்பட்டு இருந்தார். பின் கடந்த ஜூன் 10ஆம் தேதி உடல்நல குறைவால் இயக்குனர் பாரதிராஜா காலமாகி இருந்தார். இவருடைய இழப்பு தமிழ் திரை உலகில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. திரை பிரபலங்கள் பலருமே நேரில் சென்று பாரதிராஜாவிற்கு இறுதி அஞ்சலி செலுத்திருந்தார்கள். மேலும் அவருடைய சொந்த ஊரான தேனி மாவட்டத்தில் உள்ள காட் ரோட்டில் அரசு மரியாதை உடன் பாரதிராஜாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

கவிஞர் வைரமுத்து பதிவு:

இந்நிலையில் இயக்குனர் பாரதிராஜாவின் சமாதிக்கு கவிஞர் வைரமுத்து சென்றிருக்கிறார். பின் தமிழக முதல்வர் விஜய்க்கு கோரிக்கை வைத்து இயக்குனர் வைரமுத்து அறிக்கை ஒன்று வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், இமயத்தைப் புதைத்த இடம் இதுதான். தூங்கு ராஜா தூங்கு, ஓடி ஓடிக் களைத்தவனே கலையாத உறக்கத்தில் கனவுகளற்ற உறக்கத்தில் ஓய்வுகொள். மண்ணை இழுத்துப் போர்த்துப்படுத்திருக்கும் உன்னை குளிரோ மழையோ வெயிலோ புயலோ ஒன்றும் செய்யாது. நலம் கேட்க வந்த நான் நல்லசெய்தி கொண்டுவரவில்லை.

முதல்வர் விஜய்க்கு கோரிக்கை:

இதே இடத்தில் என்னோடு நின்று இறுதி மரியாதை செலுத்திய உன் சீடன் உனைத்தேடி வந்துவிட்டான். ஜோடிக் குதிரைகளை இழந்து கவிழ்ந்து கிடக்கிறது கலைத்தேர். கடமை இருக்கிறது. இந்த மண்ணகத்தில் உனக்கொரு மணிமண்டபம்; அரசுக்குக் கோரிக்கை வைக்கிறேன். முதலமைச்சர் விஜயைச் சந்திக்கவும் தயங்கமாட்டேன். இந்த இடம் கலைக்கோயிலாக என்று கட்டப்படுமோ அன்று தேனி மாவட்டம் முழுக்க தேவர்கள் பூச்சொரிவர் என்று கூறியிருக்கிறார். இவருடைய கோரிக்கையை முதல்வர் விஜய் ஏற்று செய்து தருவாரா? என்பதை வரும் காலங்களில் தான் பொறுத்திருந்து பார்க்கலாம்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full