தவெக தலைவர் விஜய் மீது போலீசில் புகார் கொடுத்த இன்ஸ்டா பிரபலம் வைஷ்ணவி - நடந்தது என்ன?
தவெக தலைவர் விஜய் மீது இன்ஸ்ட்டா பிரபலம் வைஷ்ணவி புகார் அளித்து இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருக்கிறது. தற்போது இவர் ஜனநாயகன் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இது தான் இவருடைய கடைசி படம்.
இதை அடுத்து இவர் முழுநேர அரசியலில் ஈடுபட இருக்கிறார். கடந்த ஆண்டு தான் இவர் தன்னுடைய கட்சியையும், கட்சி கொடியையும் அறிமுகப்படுத்தியிருந்தார். இவர் தமிழக வெற்றிக் கழகம் என்று தன்னுடைய கட்சிக்கு பெயர் வைத்து இருக்கிறார். கடந்த ஆண்டு தன்னுடைய கட்சியின் முதல் மாநாட்டை சிறப்பாகவும் நடத்தி இருந்தார் விஜய். தற்போது கட்சி பணிகளும் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதாகவும் விஜய் கூறி இருக்கிறார்.
வைஷ்ணவி குறித்த தகவல்:
இது ஒரு பக்கம் இருக்க, விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து விலகி திமுகவில் இணைந்த இன்ஸ்டா பிரபலம் வைஷ்ணவி பற்றி பலருக்குமே தெரியும். இவர் கோவையை சேர்ந்தவர். இவருக்கு தற்போது 20 வயது தான். இவர் instagram போன்ற சோசியல் மீடியாவில் தன்னுடைய கருத்துக்களை கூறுவதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டார். இவர் தவெக கட்சி தொடங்கியவுடன் உறுப்பினராக சேர்ந்தார்.
தவெகவில் விலக காரணம்:
பின் இவர் மூன்று மாதங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகத்திலிருந்து வெளியேறி திமுகவில் சேர்ந்தார். இது தொடர்பாக பல விமர்சனங்கள், கேள்விகள் எழுந்த வண்ணம் இருந்தது. திமுகவில் சேர்ந்த உடனே இவர் தமிழக வெற்றிக் கழகத்தை பற்றியும் விஜய் பற்றியும் தாறுமாறாக பேசியிருக்கிறார். அதோடு சோசியல் மீடியாவில் பேசக்கூடாது, போஸ்ட் போடக்கூடாது போன்று சில காரணங்களை கட்சியில் போட்டதால் தான் நான் தவெகவில் இருந்து விலகி விட்டேன் என்றெல்லாம் கூறி இருந்தார்.
https://www.youtube.com/watch?v=dpDcxQ6hTiU
விஜய் மீது புகார்:
இப்படி இருக்கும் நிலையில் வைஷ்ணவி தவெக தலைவர் விஜய், கட்சி தொண்டர்களான Virtual Warriors மீதும் கோவை மாநகர காவல் ஆணையத்தில் புகார் அளித்திருக்கிறார். அதில் அவர், நான் தவெகவில் இருந்து வெளியேறிய முதல் நாள் என்னைப்பற்றி சோசியல் மீடியாவில் தவறாகவும், ஆபாசமாகவும், அவதூறு கருத்துகளையும் பதிவிட்டு வருகிறார்கள். என்னுடைய புகைப்படங்களை மார்பிங் செய்து ஆபாசமாக மீம்ஸ்களை பதிவிட்டும், முகம் சுளிக்கும் வகையில் செய்கிறார்கள்.
https://youtube.com/shorts/xqP4sSAqcLA?si=HWSLVJcdhW0fC9rs
புகாரில் கூறியது:
இதற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் வாயை திறந்தோ, கண்டனம் தெரிவிக்கும் வகையில் அறிக்கையோ கொடுக்கவில்லை. இனிமேலும் விஜய் உரிய நடவடிக்கை எடுப்பார் என்பதில் எனக்கு நம்பிக்கையும் இல்லை. அதனால்தான் நான் புகார் அளித்திருக்கிறேன். அதோடு அநாகரீகமான அரசியலை எவ்வாறு செய்யலாம் என்பதை தமிழக வெற்றிக் கழகத்திடம் தான் கற்றுக்கொள்ள வேண்டும். நாங்கள் கருத்தியல் ரீதியான கேள்விகளை தவெகவினரிடம் முன்வைத்தாலும் கூட அவதூறான கருத்துக்கள் தான் சொல்கிறார்கள் என்று கூறியிருக்கிறார்.