'Attention Seeking Uncle' - சிம்பு குறித்து அவதூறு பரப்பிய வலைப்ச்பேசுக்கு பத்து தல இயக்குனர் கொடுத்த செம பதிலடி.

By Arun · 13/8/2022

தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்பவர் சிம்பு. இவர் இயக்குனர், நடிகர் டி ராஜேந்திரன் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. சிம்பு குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டு இருக்கிறார். ஆரம்பத்தில் சிம்பு நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. பின் இடையில் இவரின் சில படங்கள் தோல்வி அடைந்தது.

இதன் காரணமாக சிம்பு சினிமாவில் இருந்து சிறிய பிரேக் எடுத்து கொண்டார். பின் சிம்பு நடிப்பில் வெளிவந்த ஈஸ்வர் படம் பெரிய அளவில் வெற்றி அடையவில்லை என்றாலும் சிம்பு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருந்தது. அதோடு சமீப காலமாகவே சிம்பு அவர்கள் தன்னுடயை படங்களை கவனமாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் பல போராட்டங்களுக்கு பிறகு சிம்பு நடித்த மாநாடு படம் சமீபத்தில் வெளியாகி இருந்தது.

மாநாடு படம்:

இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி இருந்தர். இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்திருந்தார். மேலும், இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ் ஜே. சூர்யா, பிரேம்ஜி உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். பல பிரச்சனைகளுக்கு பிறகு தான் மாநாடு படம் வெளியாகி இருந்தது. நீண்ட இடைவெளிக்கு பிறகு சிம்புவின் மாநாடு படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. ஒரு புத்தம் புதிய கதைக்களத்துடன் மீண்டும் என்ட்ரி கொடுத்திருந்தார் சிம்பு.

சிம்பு நடிக்கும் படம்:

இதை தொடர்ந்து சிம்பு நடிப்பில் அடுத்ததாக வெளியாகி இருந்த படம் மகா திரைப்படம் இந்த படத்தின் நாயகியாக ஹன்சிகா நடித்திருக்கிறார். சமீபத்தில் தான் இந்த படம் வெளியாகி இருந்தது. இதை அடுத்து ஆகஸ்ட் மாதம் சிம்புவின் வெந்து தணிந்தது காடு படம் வெளியாகிறது. கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் மீது ரசிகர்கள் பலரும் அதிக எதிர்பார்ப்புடன் இருக்கின்றன. அதேபோல் இந்த படத்தை தொடர்ந்து கிருஷ்ணா இயக்கத்தில் உருவாக உள்ள பத்து தல படத்தில் சிம்பு நடிக்கிறார்.

https://www.youtube.com/watch?time_continue=1&v=EM3WJmhGYww&feature=emb_title

பத்து தல படம்:

இந்த படம் கன்னடத்தில் வெளிவந்த மஃப்டி என்ற படத்தின் தமிழ் ரீமேக். இந்த படத்தை இயக்குனர் நார்தன் மற்றும் இயக்குனர் கிருஷ்ணன் இயக்குகிறார்கள். இந்தப் படத்தில் சிலம்பரசனுடன் கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர் நடிக்கிறார்கள். இந்த படத்தை ஞானவேல் ராஜா தன்னுடைய ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் தயாரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு நவீன் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பை சிம்பு நிறுத்திவிட்டு சென்னை கிளம்பி விட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

வலைப்பேச்சு கிளப்பிவிட்ட ரூமர் :

இது குறித்து வலைப்பேச்சு சேனலின் மூலம் வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் அவர்கள் கூறியிருந்தது, சிம்பு பத்துதல படத்தில் நடிக்கிறார். படப்பிடிப்பு கூடிய விரைவில் முடிவடைந்து படம் வெளியாக இருப்பதாக கூறி இருந்தார்கள். ஆனால், திடீரென்று சிம்பு கிளம்பி சென்னை வந்து விட்டதாக கூறப்படுகிறது. என்ன நடந்ததென்றால், படப்பிடிப்பு தளத்தில் ஒரு காட்சியில் சிம்பு காரிலிருந்து இறங்கி விமானத்தில் ஏற வேண்டும். அப்போது வரும் போது சிம்பு சட்டையை கழட்டி வர வேண்டும் என்று இயக்குனர் சொன்னார்.

https://twitter.com/Ashokkarthikey4/status/1558137671452868608

இயக்குனர் கொடுத்த பதிலடி :

ஆனால், சிம்பு திடீரென்று எனக்கு ஒரு மாதம் டைம் கொடுங்கள். அதற்குப் பிறகு இந்த காட்சியில் நடிக்கிறேன் என்று சொல்லிவிட்டார். உடனே இயக்குனர் அந்த மாதிரி எல்லாம் வேணாம் என்று சொன்னார். இருந்தாலும், சிம்பு இல்லை எனக்கு ஒரு மாதம் நேரம் கொடுங்கள் என்று கூறி இருக்கிறார். இப்படி இவர்கள் சிம்புவை கலாய்த்து இருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த பத்து தல படத்தின் இயக்குனர் 'தவறான செய்திகளை பரப்ப வேண்டாம், நாங்கள் எதிர்பார்த்ததை விட சிம்பு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார். கவனத்தை எதிர்பார்க்கும் வலைப்பேச்சு அங்கிள், எதை பற்றியும் தெரியாமல் பேச வேண்டாம்' என்று பதிலடி கொடுத்துள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full