இது என்ன Fan made-ஆ, வலிமை பட மோஷன் போஸ்டர் - ரசிகர்கள் அதிருப்தி.

By Rajkumar · 11/7/2021

சமீபத்தில் வெளியான அஜித்தின் வலிமை பட மோஷன் போஸ்டரால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர். விஸ்வாசம் படத்தை தொடர்ந்து எச் வினோத் இயக்கத்தில் 'வலிமை' படத்தில் நடித்துள்ளார் நடிகர் அஜித். நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து அதே டீம் தற்போது இந்த படத்தின் மூலம் இணைந்துள்ளது. இந்த படத்தின் பணிகள் துவங்கி ஓராண்டுக்கு மேல் ஆன நிலையில் படத்தின் பெயரை தவிர வேறு எந்த ஒரு அப்டேட்டும் இது நாள் வரை வரவில்லை. நீண்ட மாதமாக வலிமை அப்டேட் வராததால் அஜித் ரசிகர்கள் யாரை பார்த்தாலும் வலிமை அப்டேட்டை கேட்க ஆரம்பித்தனர்.

நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலுக்கு முன்னர் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனி சாமியிடம் 'வலிமை' அப்டேட் எப்போது வரும் என்று கேட்டு இருந்தனர். அதே போல சமீபத்தில் நடைபெற்ற இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக்கு இடையிலான டெஸ்ட் போட்டியின் போது பீல்டிங் செய்து கொண்டு இருந்த இங்கிலாந்து வீரர் மொயின் அலியை அழைத்து அவரிடம் வலிமை அப்டேட்டை கேட்டு இருந்தனர் அஜித் ரசிகர்கள்.

அவ்வளவு ஏன் பல்வேறு திட்டங்களை துவங்கி வைப்பதற்காக கடந்த பிப்ரவரி 14 தமிழ் நாட்டிற்கு வந்த பிரதமர் மோடியிடமே அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட்டை கேட்டனர். அந்த வீடியோவும் வைரலானது.இப்படி ஒரு நிலையில் வரமுறை இல்லாமல் தேவையில்லாத இடத்தில் எல்லாம் அப்டேட் கேட்கும் ரசிகர்களால் கடுப்பான அஜித் தனது ரசிகர்களின் செய்யல்பாட்டால் வருந்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டு, தக்க நேரத்தில் வலிமை அப்டேட் வரும் என்று கூறினார் அஜித்.

கடந்த மே 1 ஆம் தேதி அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வரும் என்று கூறப்பட்டு இருந்தது. ஆனால், கொரோனா பிரச்சனை காரணமாக அதுவும் தள்ளிப்போனது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் 25 ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது யாரும் எதிர்பாராத இன்ப அதிர்ச்சியாக இன்று இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கிறது.

ஆனால், இந்த போஸ்டர் ஏதோ Fan made போல உள்ளது என்றும் இந்த போஸ்டருக்கு இரண்டு வருடங்களாக பில்ட் அப் கொடுத்தார்களா என்றெல்லாம் பலரும் கேலி செய்து வருகின்றனர். அதே போல இந்த படத்தின் போஸ்டரை பிகில், தசாவதாரம் துவங்கி அக்சய் குமார் நடிப்பில் வெளியான கிராக் படத்தின் போஸ்டர்களுடனும் இந்த படத்தின் போஸ்டரை ஒப்பிட்டு கலாய்த்து வருகின்றனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full