வள்ளுவன் : திருக்குறளின் அடிப்படையில் உருவாகிய கமர்சியல் சஸ்பென்ஸ் திரில்லர் படம்

வள்ளுவன் கமர்சியல் சஸ்பென்ஸ் திரில்லர் படம்

By subhashini · 5/6/2026

"வள்ளுவன்" திரைப்படம் ஆறுபடை புரொடக்‌ஷன் நிறுவனம் தயாரித்து இருக்கின்றது. இந்தப்படம் திருக்குறளோட பேஸ்ல Screenplay கமர்சியல் சஸ்பென்ஸ் நிரைந்த திரில்லர் படமாக காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்காங்க. கதையோட கண்டென்ட் என்னன்னா மக்களோட நலனிற்காகவும் பாதுகாப்பிற்காகவும் இயற்றப்பட்ட சட்டங்கள் இன்னைக்கு மக்கள் பாதுகாப்பிற்காக இல்லாமல் "நிதி எந்தப் பக்கம் சாய்கின்றதோ அந்தப் பக்கம்தான் நீதியும் சாய்கின்றது" என்ற அடிப்படையில்.

நாட்டை பாதுகாக்க சட்ட திட்டங்களை யாரிடம் ஒப்படைத்து இருக்கின்றதோ அவர்கள் தான் சட்டங்களை தனக்கு சாதகமாக்கி பணத்திற்காக நாட்டையே நாசம் செய்கின்றனர். அப்படியாப்பட்ட சமூக குற்றவாளிகளால் பாதிக்கப்பட்டு சீரழியும் ஒரு குடும்பத்தின் கதையை தான் வலிகள் நிறைந்த வாழ்க்கையை படமாக்கி உள்ளனர்.

இப்பட சூட்டிங் சென்னை மற்றும் பாண்டிச்சேரி மைசூர் போன்ற பகுதிகளில் பெரும் பொருட்செலவில் படமாக்கி உள்ளனர்.

இதில் சேத்தன் சீனு ஆசனா சவேரி மனோபாலா பிரேம்குமார் சாய்தீனா தீபாஅக்கா ராஜசிம்மன் கராத்தே ராஜா மீசை ராஜேந்திரன், சிங்கம் ஜெயவேல் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி உள்ளார் சங்கர் சாரதி ஒளிப்பதிவு சுரேஷ் பாலா இசை அஸ்வத் எடிட்டிங் சான் லோகேஷ் ஷைல்குமார் ராஜேந்திரன் இப்படத்தை தயாரித்துள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full