வம்சம் சீரியலில் மலைவாசி பெண்ணாக நடித்த பூமிகாவா இது? இப்போ எந்த தொடரில் நடித்து வருகிறார் தெரியுமா?

By Rajkumar · 3/12/2023

வம்சம் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் சந்தியா ஜகர்லமுடி. இவர் ஹைதராபாத்தில் பிறந்தார். இவர் செல்லமடி நீ எனக்கு என்ற சீரியல் மூலம் தான் சின்னத்திரைக்கு அறிமுகமானார். பின் சன் டிவி-யில் ஒளிபரப்பான அத்திப்பூக்கள் என்ற சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பரிச்சயமானார்.அதன் பிறகு ரம்யா கிருஷ்ணன் நடித்த வம்சம் சீரியலில் பூமிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார் சந்தியா. இந்த சீரியலில் மலைவாழ் பெண் கதாபாத்திரத்தில் சந்தியா வாழ்ந்து இருந்தார் என்றே சொல்லலாம்.

அதோடு இவர் வம்சம் சீரியலில் ரம்யா கிருஷ்ணனுக்கு அடுத்ததாக மக்கள் மத்தியில் பிரபலமானார். அந்த அளவுக்கு வம்சம் சீரியல் சந்தியாவுக்கு பெயரும், புகழும் வாங்கிக் கொடுத்தது. அதனை தொடர்ந்து இவர் தமிழ் மற்றும் தெலுங்கு தொலைக்காட்சி தொடர்களிலும், சில தெலுங்கு சினிமாவிலும் நடித்து இருக்கிறார்.கடைசியாக இவர் தமிழில் பல ஆண்டுகளாக சன் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்த சந்திரலேகா சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இது தவிர இவர் தெரு நாய்களை பாதுகாப்பதையும் பகுதி நேரம் தனியாகவே செய்து வருகிறார்.

அதாவது ஜீ தமிழில் ஒளிபரப்பாக இருக்கும் புது தொடர் சந்தியா ராகம். இந்த தொடரில் ஜானகி -சந்தியா என்ற இரு சகோதரிகள் இருக்கிறார்கள். இதில் தன்னுடைய அக்கா ஜானகிக்கு பார்க்கும் மாப்பிள்ளையை தங்கை சந்தியா திருமணம் செய்து கொள்கிறார். இதனால் வீட்டில் உள்ள அனைவருமே அதிர்ச்சி அடைகிறார்கள். பின் சந்தியாவை அவமானப்படுத்தி அவருடைய அப்பா வீட்டை விட்டு துரத்தி விடுகிறார்.

அதற்கு பிறகு சந்தியா தன்னுடைய குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டில் ஆகி இருக்கிறார். இருந்தாலும் தன்னுடைய சகோதரி ஜானகியை நினைத்து வருத்தப்பட்டு இருக்கிறார். இன்னொரு பக்கம் ஜானகி தன் தங்கை சந்தியாவை நினைத்து வருத்தப்படுகிறார். பின் சந்தியா- ஜானகி இருவரும் சந்திப்பார்களா? அடுத்து என்ன நடக்கும் என்பது தான் சீரியலின் கதை. இந்த தொடரில் ஜானகி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் ஆர்யாவின் கலாப காதலன் படத்தில் நடித்து இருப்பார்.

அந்த படத்தில் நாயகியின் தங்கையாக ஒரு வில்லி ரோலில் நடித்து இருப்பார் அக்ஷயா ராவ். இவர் பிரபல நடிகை சாயாதேவியின் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது. இவர் முதன்முதலில் 2003 ஆம் ஆண்டு கோவில்பட்டி வீரலட்சுமி என்ற படத்தில் ஒரு துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து இவர் பார்த்திபன் கனவு, சகா, மனசுக்குள்ளே, மதராசி, கலாபக் காதலன், பழனியப்பா கல்லூரி, கஜா, எங்கள் ஆசான் போன்ற பல படங்களில் நடித்திருந்தார்.

இருந்தாலும் இவருக்கு பெரிய பெயரை எடுத்து தந்தது ஆர்யாவின் கலாபக் காதலன் படம் தான். அதற்குப்பின் இவருக்கு பெரிதாக படங்களில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றவுடன் தற்போது இவர் சின்னத்திரை சீரியலில் களமிருக்கிறார். கலாப காதலன் படத்திற்கு பின்னர் இந்த தொடரில் சந்தியா கதாபாத்திரத்தில் தான் நடிகை அக்ஷயா ராவ் நடித்திருந்தார். மேலும், அவரது அக்கா கதாபாத்திரத்தில் தான் தற்போது சந்தியா நடித்து வருகிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full