வம்சம் சீரியலில் பட்டிக்காடாக நடித்த நடிகையா இது. நிஜத்தில் அல்ட்ரா மாடர்ன்.

By Rajkumar · 25/5/2020

வம்சம் சீரியல் பூமிகாவை நினைவிருக்கிறதா? அவரை பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம். இவரின் முழுப் பெயர் சந்தியா ஜகர்லமுடி. சந்தியா 1985 ஏப்ரல் 15 ஆம் தேதி ஹைதராபாத்தில் பிறந்தார். சந்தியா தனது பள்ளிப்படிப்பை செயிண்ட் ஜோசப் பள்ளியில் படித்து முடித்தார். அதைத் தொடர்ந்து இவர் M.A ஆங்கில இலக்கியம், M.Sc உளவியல் ஆகிய முதுகலைப் பட்டங்களையும் பெற்று உள்ளார். செல்லமடி நீ எனக்கு என்ற சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார் சந்தியா. பின் சன் டிவி-யில் ஒளிபரப்பான அத்திப்பூக்கள் என்ற சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பரிச்சயமானவர் சந்தியா.

https://www.instagram.com/p/B_ypFPsJGY3/

அதன் பிறகு ரம்யா கிருஷ்ணன் நடித்த வம்சம் சீரியலில் பூமிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார் சந்தியா. இந்த சீரியலில் மலைவாழ் பெண் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். தனது கணவரை மச்சான் மச்சான் என்று அழைத்து நடித்து இவர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதோடு இவர் வம்சம் சீரியலில் ரம்யா கிருஷ்ணனுக்கு அடுத்ததாக மக்கள் மத்தியில் பிரபலமானார்.

அந்த அளவுக்கு வம்சம் சீரியல் சந்தியாவுக்கு பெயரும், புகழும் வாங்கிக் கொடுத்தது. இவர் தமிழ் மற்றும் தெலுங்கு தொலைக்காட்சி தொடர்களிலும், சில தெலுங்கு சினிமாவிலும் நடித்து வருகிறார். இவரின் சொந்த ஊர் ஹைதராபாத். ஆனால், இவர் சின்னத்திரையில் நடித்துக் கொண்டிருப்பதால் சென்னையில் வசித்து வருகிறார். நடிகை சந்தியா ஜகரலமுடிக்கு திருமணம் ஆனாலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

https://www.instagram.com/p/B_J41vrhsVT/

இவர் நடிப்பின் மீது கொண்டுள்ள ஆர்வத்தால் தொடர்ந்து நடிக்கிறார். இவர் தன்னுடைய ஓய்வு நேரங்களில் நடனமாடுவது, பாட்டு பாடுவது என பல வேலைகளை செய்து வருகிறார். அதோடு தான் வளர்க்கும் செல்லப் பறவைகளுடன் நேரத்தை செலவிடுகிறார். நடிகை சந்தியா அவர்கள் மெகா சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மிகப் பெரிய ரசிகை. சிரஞ்சீவி நடித்த ’மெக்கானிக் அல்லூட்’ என்ற திரைப்படம் தான் அவருக்கு எப்போதும் பிடித்த படம். சீரியலில் இவர் குடும்ப குத்து விளக்காக இருந்தாலும் நீஜ வாழ்க்கையில் செம்ம மாடன்.

behindtalkies AMP · Quick view
View full