'வணங்கான்' படத்துல நான் நடிக்க போறேன்னு சூர்யா சார் கிட்ட அருண் விஜய் சொன்னப்ப - சுரேஷ் காமாட்சி சொன்ன சீக்ரெட்
'வணங்கான்' படம் குறித்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அளித்திருக்கும் பேட்டி தான் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனர்களில் பாலாவும் ஒருவர். இவர் பிரபலமான இயக்குனரான பாலு மகேந்திராவிடம் துணை இருக்குனாராக பணிபுரிந்தவர். அதுமட்டுமில்லாமல் பாலா சினிமா உலகில் இயக்குனர் ஆன முதல் படத்திலேயே தேசிய விருது பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாலா இயக்குனர் மட்டுமில்லாமல் தயாரிப்பாளரும் ஆவார். தற்போது இவர் 'வணங்கான்' என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் ஹீரோவாக அருண் விஜய் நடித்து இருக்கிறார். இந்த படத்தை சுரேஷ் காமாட்சி மற்றும் இயக்குனர் பாலாவும் இணைந்து தயாரித்து இருக்கிறார்கள். இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக ரோஷினி நடித்திருக்கிறார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்திற்கான பணிகள் எல்லாம் முடிந்து பிரமோஷன் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
சுரேஷ் காமாட்சி பேட்டி :
இந்நிலையில், இந்த படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி படம் குறித்து சமீபத்தில் பேட்டி அளித்திருக்கிறார். அதில், இந்த திரைப்படம் ரொம்ப இறுக்கமாக இருக்கும். மனசு பாரமாக இருக்கிற மாதிரியான உணர்வைத் திரைப்படம் கொடுக்கும். பாலா அண்ணன் தான் இந்த படம் குறித்து எனக்கு சொல்லிக் கொடுத்தார். நான் எப்போதும் என்னை மட்டும்தான் நம்புவேன். நான் பண்ற படங்களுக்கு எப்போதுமே சர்ச்சைகள் வரும். என்னை அழைத்து இந்தப் படத்தை பண்ணாதீங்க என்று சொல்லுவாங்க. ஆனால், நான் அதெல்லாம் எடுத்துக்க மாட்டேன்.
https://www.youtube.com/watch?v=7pZX5fSS5_8
அருண் விஜய் குறித்து :
நம்ம சரியா இருந்தால் எல்லாம் சரியாகத்தான் இருக்கும் என்று நம்புகிறேன். மேலும், அருண் விஜய்க்கு பாலா சார் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்று ரொம்ப நாள் கனவு. அதைப்போல் நடந்திருக்கிறதுனால அவருக்கு சந்தோஷமாகத்தான் இருக்கிறார். இந்தப் படத்திற்கு முதலில் சூர்யா சார் கமிட்டாகி விலகிய நிலையில், சூர்யா சார் கிட்ட சொல்லிட்டு தான் அருண் விஜய் நடிக்க வந்தார். சூர்யா சாரும் 'நல்லபடியாக படத்தை பண்ணுங்க' ன்னு அருண் விஜய் கிட்ட சொல்லி இருக்கார். அதேபோல் பாலா சார் ஒரு சிறந்த படைப்பாளி.
பாலா குறித்து :
அவர் நினைத்த விஷயங்களை நடத்துற வரைக்கும் விடமாட்டார். அந்தப் பிடிவாதம் எனக்கு பாலா சார்கிட்ட ரொம்ப பிடிக்கும். ஒரு படைப்பாளியாக அவரை நான் தூரத்தில் இருந்து ரசிப்பேன். ஒரு நல்ல படைப்பாளியை வாழ்த்துவதற்கு நான் எப்போதும் யோசிக்கவே மாட்டேன். கடந்த டிசம்பர் மாதம் பாலா அண்ணன் சினிமாவுல 25 ஆண்டுகள் நிறைவு செய்ததைக் கொண்டாட வேண்டும் என்று நினைத்தேன். நல்ல படைப்பாளியைக் கொண்டாடுவதற்கு இந்த விழா ஒரு முன்னுதாரணமாக இருக்கும் என்று நம்பினேன்.
பாலா 25 குறித்து :
மேலும், சூர்யா சார் விருப்பப்பட்டு இந்த நிகழ்ச்சிக்கு வந்தார். பாலா அண்ணன் சூர்யா சார் மேல அன்பு வச்சிருக்காரு. பாலா அண்ணன் கூட பயணித்த அனைவரையும் அழைத்து இருந்தோம். விஷாலை ரீச் பண்ணவே முடியவில்லை. அதர்வாவும் படப்பிடிப்பில் இருப்பதாகச் சொன்னாரு. மேலும்,'ஏழு கடல் ஏழு மலை' படம் ரொம்ப நல்லா வந்திருக்கு. வருகின்ற பிப்ரவரியில் படத்தை வெளியிட பிளான் பண்றோம். அந்தப் படத்தை ரோட்டர்டேம்ல எல்லாரும் என்ஜாய் பண்ணிப் பார்த்தாங்க. ரிலீசுக்கு முன்னாடியே இப்படியான வரவேற்பு எனக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது என்று கூறியிருக்கிறார்.