நடு ரோட்டில் ரவுடிகளிடம் தர்ம அடி வாங்கியுள்ள சின்னத்திரை தளபதி சஞ்சீவ்.

By subhashini · 2/3/2024

சீரியல் நடிகர் ஸ்ரீகுமாரை ரவுடி கும்பல் கத்தியால் வெட்டியும், சஞ்சீவை அடித்திருக்கும் உண்மை சம்பவம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் ஸ்ரீகுமார். இவர் பிரபல இசை இயக்குனர் சங்கர் கணேஷின் மகனாவார். இவர் 2001 ஆம் ஆண்டு மூலம் தன்னுடைய சின்னத்திரை பயணத்தை காவியாஞ்சலி என்ற தொடரின் மூலம் தொடங்கினார்.

அதனைத் தொடர்ந்து இவர் கண்மணி, அகல்யா, ஆனந்தம், மலர்கள், மேகலா, சிவசக்தி, உறவுகள், இதயம், கனா காணும் காலங்கள், பிள்ளைநிலா, தலையணை பூக்கள், யாரடி நீ மோகினி போன்ற பல சூப்பர் ஹிட் சீரியல்களில் நடித்து இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இவர் வெள்ளித்திரையிலும் சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார். பின் சினிமாவில் வரவேற்பு குறைந்தவுடன் இவர் சின்னத்திரை பக்கம் வந்து விட்டார்.

ஸ்ரீகுமார் குறித்த தகவல்:

மேலும், ஸ்ரீ குமார் சீரியல் மட்டுமில்லாமல் பல ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கு பெற்றிருக்கிறார். தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் வானத்தை போல சீரியலில் சின்ராசு கதாபாத்திரத்தில் ஸ்ரீகுமார் நடிக்கிறார்.இந்த சீரியல் அண்ணன்- தங்கை பாசத்தை மையமாக கொண்ட கதை. இந்த சீரியல் ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கின்றது.

https://www.youtube.com/watch?v=FOUNIQMyyRk

ஸ்ரீகுமார் பேட்டி:

பின் இந்த சீரியலில் நடிகர் சஞ்சீவ் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். இவர்கள் இருவருமே சிறு வயதிலிருந்தே நல்ல நெருங்கிய நண்பர்கள் ஆவார். இந்த நிலையில் நடிகர் ஸ்ரீகுமார்- சஞ்சீவை மர்ம நபர்கள் தாக்கியிருக்கும் சம்பவம் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதாவது, சமீபத்தில் நடிகர் ஸ்ரீகுமார் அளித்த பேட்டியில், ஒரு முறை சில ரவுடிகள் என்னை கத்தியால் வெட்ட வந்தார்கள்.

ரவுடிகள் தாக்கிய சம்பவம்:

அதற்குப் பின் அந்த இடத்திற்கு வந்த சஞ்சீவ் ரவுடிகளுடன் சண்டை போட்டார். அப்போது அவருக்கு நிறைய காயங்கள் ஏற்பட்டது. பின் என்னை சஞ்சீவ் மருத்துவமனைக்கு அழைத்து சென்று உதவி செய்திருந்தார். பின் இது தொடர்பாக புகார் அளித்தார். இது உண்மையிலேயே நடந்த சம்பவம் தான் என்று கூறி இருக்கிறார். சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் சஞ்சீவ். இவர் விஜயின் நெருங்கிய நண்பர் ஆவார்.

சஞ்சீவ் குறித்த தகவல்:

இவர் விஜயுடன் இணைந்து நிறைய படங்களில் நடித்திருக்கிறார். ஆனால், இவருக்கு சினிமாவில் பெரிய அளவு வரவேற்பு கிடைக்காதனால் இவர் சின்னத்திரை பக்கம் வந்து விட்டார். இவர் பல சீரியல்கள் நடித்திருக்கிறார். தற்போது சன் டிவியில் புதிதாக ஒளிபரப்பாக இருக்கும் லட்சுமி தொடரில் ஹீரோவாக சஞ்சீவ் நடிக்க இருக்கிறார். இதில் நடிகையாக ஸ்ருதி நடிக்கிறார். தற்போது இந்த சீரியல் ப்ரோமோ வீடியோ தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full