நண்பனையே கரம் பிடித்த வானத்தை போல சீரியல் நடிகை - திருமண புகைப்படங்கள் இதோ

By subhashini · 11/5/2024

சன் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அந்த வகையில் 2020 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பப்பட்ட தொடர் ஆண்டு வானத்தைப்போல. இந்த தொடர் அண்ணன்– தங்கை பாசத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட கதை. சீரியலில் அண்ணன் சின்ராசு மீது பாசத்தைப் பொழியும் தங்கையாக துளசி இருக்கிறார். இந்த தொடரில் முதலில் கதாநாயகியாக துளசி ரோலில் ஸ்வேதா நடித்து இருந்தார்.

சின்ராசு ரோலில் தமன் நடித்து இருந்தார். இப்படி இருக்கும் நிலையில் துளசி கதாபாத்திரத்தில் நடித்த ஸ்வேதா சீரியலில் இருந்து விலகி விட்டார். அதன் பின் துளசி கதாபாத்திரத்தில் நடிகை மன்யா ஆனந்த் நடித்து வருகிறார். பின் சீரியலில் ஸ்வேதாவை தொடர்ந்து சின்ராசுவாக நடித்து வந்த தமனும் விலகி விட்டார். அவருக்கு பதிலாக சீரியலில் நடிகர் ஸ்ரீகுமார் நடிக்கிறார்.

வானத்தைப்போல சீரியல்:

இவர்களை தொடர்ந்து வானத்தைப்போல சீரியலில் இருந்து பல நடிகர்கள் விலகிக் கொண்டு இருந்தார்கள். இருந்தாலும், சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. தற்போது இந்த சீரியலில் பரபரப்பான திருப்பங்களுடன் சென்று கொண்டிருக்கின்றது. மேலும், ஸ்வேதா உடல்நிலை சரியில்லாததாலும், தனிப்பட்ட காரணங்களுக்காக தான் சீரியலில் இருந்து விலகுவதாக கூறி இருந்தார்.

ஸ்வேதா குறித்த தகவல்:

அதற்கு பின் இவர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கண்ணெதிரே தோன்றினாள் என்ற தொடரில் நடித்து வருகிறார். இந்த சீரியலும் நன்றாக தான் சென்று கொண்டு இருக்கிறது. மேலும், ஸ்வேதா அவர்கள் பெங்களூரை சேர்ந்தவர். இவர் கர்நாடகவை சேர்ந்த மது ஷங்கர் கௌடா என்பவரை தான் பல ஆண்டுகளாக காதலித்து வந்தார்.

ஸ்வேதா திருமண நிச்சயதார்த்தம் :

இவர்கள் இருவரும் கல்லூரி படிக்கும் போது இருந்தே நல்ல நண்பர்கள். அதற்கு பின் இவர்கள் நட்பு காதலாக மாறியது. மேலும், இவர்கள் இருவருக்கும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் நிச்சயதார்த்தம் நடந்தது. நிச்சயதார்த்த புகைப்படங்கள் எல்லாம் வைரலானதைத் தொடர்ந்து ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். அது மட்டும் இல்லாமல் இவர்களுடைய திருமண நிச்சயதார்த்தத்திற்கு கண்ணெதிரே தோன்றினாள் மற்றும் வானத்தைப்போல சீரியல் நடிகர்கள் பலருமே நேரில் சென்று வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.

ஸ்வேதா திருமணம்:

இந்நிலையில் நடிகை ஸ்வேதாவிற்கும், விராந்திற்கும் பெற்றோர்கள் முன்னிலையில் நேற்று திருமணம் நடந்திருக்கிறது. ஸ்வேதா கணவர் மீடியா துறையை சேர்ந்தவர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் திருமணம் கர்நாடகவில் உள்ள தும்கூர் என்ற இடத்தில் கோலாகலமாக நடைபெற்று இருக்கிறது. இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து ரசிகர்கள் பலருமே வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் திருமணத்திற்கு பிறகும் ஸ்வேதா தொடர்ந்து நடிப்பார் என்றும் கூறப்படுகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full