மீடியாவில் இருக்கும் யாரும் அழைப்பு விடுங்கம்மால் திடீர் திருமணத்தை முடித்த சீரியல் நடிகை - காரணம் இது தானாம்.

By subhashini · 11/12/2021

சமீப காலமாகவே வெள்ளித்திரை நடிகர்களுக்கு இணையாக சின்னதிரை நடிகர்களுக்கும் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைக்கிறது. அதிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சி பிரபலங்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டமே உருவாகி வருகிறது. பொதுவாகவே பிரபலங்களின் திருமணங்கள் ரசிகர்களுக்கு எப்போதுமே ஒரு மகிழ்ச்சியான, ஸ்பெசலான செய்தி. அப்படி தான் சமீபகாலமாக தொலைக்காட்சி பிரபலங்களுக்கு திருமணம் நடைபெற்று வருகிறது.

மேலும், மதன் -ரேஷ்மா, சபானா- ஆர்யன், ஸ்ரேயா-சித்து ஆகியோருக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. அதே போல் நேற்று பாலிவுட்டின் டாப் நடிகை கத்ரீனா கைஃப் திருமணமும் பிரம்மாண்டமாக ராஜஸ்தானில் நடந்தது. இது குறித்து சோசியல் மீடியா முழுவதும் அவருக்கு வாழ்த்து மழை பொழிந்தது. அதே போல் பிரபல தொகுப்பாளினியும், நடிகையுமான நக்ஷ்த்ராவுக்கு நேற்று தான் திருமணம் நடந்து முடிந்தது. இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள்.

இதையும் பாருங்க : பிகினி உடையில் போஸ் கொடுத்துள்ள வெந்து தணிந்தது காடு ஹீரோயின் (சிம்பு பட நடிகைகள் எப்போதும் தரம் தான்)

அந்த வகையில் சன் மியூசிக் தொகுப்பாளினியும் சீரியல் நடிகையுமான அனன்யாவிற்கு திருமணம் முடிந்துள்ளது. இந்த சன் மியூசிக் நிகழ்ச்சிக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இதில் பல தொகுப்பாளர்கள் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார்கள். அந்த வகையில் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் தான் அனன்யா.

சன் மியூசிக்கில் ஒளிபரப்பான கட்டம் என்ன சொல்லுது என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக இருந்த அனன்யா பின்னர் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் துவங்கப்பட்ட வந்தாள் மஹாலட்ஸ்மியே என்ற தொடரின் மூலம் சீரியலில் அறிமுகமானார். இவரது திருமணம் நேற்று நடைபெற்று இருக்கிறது.

அனன்யாவின் கணவர் தமிழ், ஆஸ்திரேலியாவில் ஐடி துறையில் பணியாற்றி வருகிறார். லவ் கம் அரேஜ் திருமணமாக நடைபெற்ற இந்த திருமணம் மாப்பிள்ளையின் சொந்த ஊரான கள்ளக்குறிச்சியில் நடைபெற்று இருக்கிறது. திருமணத்திற்கு பின்னர் இருவரும் ஆஸ்திரேலியா சென்று விடுவார்களாம்.மீடியா பின்புலம் இல்லாத ஃபேமிலி என்பதாலும், கள்ளக்குறிச்சியில் திருமணம் நடத்த முடிவு செய்திருந்ததாலும், மீடியா சார்ந்த நண்பர்கள் யாருக்கும் அழைப்பிதழ் கொடுக்கவில்லையாம்

Tamil Behind Talkies AMP · Quick view
View full