பெரிய ஸ்டாரான வாணி போஜனின் குடும்பத்தில் இருந்து வந்தவர் - மேடையில் அறிமுகம் செய்து வைத்த அஞ்சனா.

By Rajkumar · 17/11/2022

நடிகை வாணி போஜனின் நெருங்கிய உறவுக்கார மகன் 5678 என்ற வெப் தொடரில் நடித்து இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகையாக திகழ்ந்து கொண்டு இருப்பவர் வாணி போஜன். இவர் முதலில் கிங்பிஷர் ஏர்லைன்ஸ்யில் தான் பணிபுரிந்தார். அதனைத் தொடர்ந்து வடிவமைப்பு விளம்பர வேலைகளையும் செய்து இருந்தார். அதன் மூலமாகத்தான் சின்னத்திரையில் உள்ள தொடர்களில் நடிக்க வாணி போஜனுக்கு வாய்ப்பு கிடைத்தது.

அதன் பிறகு தெய்வமகள், லட்சுமி வந்தாச்சு போன்ற பல தொடர்களில் வாணி போஜன் நடித்து இருக்கிறார். இருந்தாலும், சன் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த தெய்வமகள் சீரியல் மூலம் தான் வாணி போஜனுக்கு ஒரு ரசிகர் பட்டாளமே சேர்ந்தது என்று கூட சொல்லலாம். அந்த அளவிற்குஇந்த சீரியல் மூலம் வாணி போஜன் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் மனதிலும் இடம் பிடித்து இருந்தார்.

வாணி போஜன் திரைப்பயணம்:

மேலும், இவரை சின்னத்திரை ரசிகர்கள் பலரும் சின்னத்திரை நயன்தாரா என்று அழைப்பதும் உண்டு. இதனைத்தொடர்ந்து வாணி போஜன் அவர்கள் சினிமா திரையில் கலக்கி வருகிறார். தமிழில் இவர் நடித்த ஓ மை கடவுளே படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதனை தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு என பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். ஜெய்யுடன் ட்ரிபில்ஸ் என்ற வெப் தொடரில் வாணி போஜன் நடித்தார்.

https://www.youtube.com/shorts/GT1yCQl87K8

5678 வெப் தொடர்:

இதனை தொடர்ந்து இவர் சில வெப் தொடரில் கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வாணி போஜனுக்கு நெருங்கிய உறவினரின் மகன் 5678 என்ற வெப் தொடரில் நடித்து இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நடனத்தை மையமாக கொண்டது தான் 5678 ஒரிஜினல் என்ற வெப் தொடர். இந்த தொடர் நவம்பர் 18ம் தேதி g5 தளத்தில் வெளியாக இருக்கிறது. விஜய் ,பிரசன்னா ஜேகே, மிருதுளா ஸ்ரீதரன் ஆகியோரின் இயக்கத்தில் உருவாகி இருக்கிறது.

அக்ஷித் அளித்த பேட்டி:

ஏ எல் அழகப்பன் ஹிதேஷ் தாக்கூர் இந்த தொடரை தயாரித்திருக்கிறார். மேலும், இந்த தொடரில் நடன கலைஞராக வாணி போஜனின் நெருங்கிய உறவினரின் மகன் அக்ஷித் நடித்திருக்கிறார். இந்நிலையில் இந்த படத்தின் பிரமோஷன் நடந்திருக்கிறது. அதில் அக்ஷித் கூறியிருப்பது, இந்த படத்தில் பணியாற்றியது ரொம்ப சந்தோஷமாகவும், பெருமையாகவும் இருக்கிறது. அந்த வாய்ப்பை தந்த அனைவருக்கும் நன்றி என்று கூறியிருக்கிறார்.

https://www.youtube.com/watch?v=mevzETGsVIw&feature=youtu.be

வாணி போஜன்-அக்ஷித்:

இவரை அடுத்து தொகுப்பாளரும், பெரிய ஸ்டாரான வாணி போஜனின் குடும்பத்தில் இருந்து வந்தவர் என்று அவரை அறிமுகப்படுத்தி இருக்கிறார். தற்போது இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.
அது மட்டும் இல்லாமல் வாணி போஜன் சினிமா துறைக்குள் நுழைவதற்கு முன்பு நிறைய ரீல்ஸ் வீடியோக்களை அக்ஷித்துடன் செய்து இருக்கிறார் என்பது குறிப்பிட்டத்தக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full