தான் நடித்த ஒரு காட்சிகளை கூட வைக்காமல் சமாதானம் செய்ய படத்தில் படக்குழு செய்த செயல் - செம கடுப்பில் வாணி போஜன்.

By Sathya · 10/2/2022

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் விக்ரம். தற்போது விக்ரம் மற்றும் துருவ் நடிப்பில் வெளியாகி உள்ள படம் மகான். இந்த படத்தில் அப்பா-மகன் இருவருமே கதாநாயகர்களாக நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் இவர்களுடன் வாணிபோஜன், பாபி சிம்ஹா, சிம்ரன், தீபக் பரமேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்து இருக்கிறது. மேலும், இந்த படம் ஆக்ஷன் நிறைந்த கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி உள்ளது. படத்தில் சந்தோஷ் நாராயணன் இசை அமைப்பாளராக பணிபுரிந்துள்ளார்.

மூன்று மொழிகளில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கும் மகான் படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மதுவினால் ஏற்படும் பிரச்சினைகளையும் விளைவுகளையும் அழகாக காண்பித்திருக்கிறார்கள். நீண்ட இடைவெளிக்குப்பிறகு கார்த்திக் சுப்புராஜின் மகான் படம் ரசிக்க வைத்திருக்கிறது. இந்நிலையில் நடிகை வாணிபோஜன் மகான் படக்குழுவின் மீது அதிர்ப்த்தியாக இருக்கிற தகவல் தற்போது சோசியல் மீடியாவில் ஆகிவருகிறது.

வாணிபோஜன் திரை பயணம்:

சன் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் ஹிட் சீரியல்களில் “தெய்வமகள்” சீரியலும் ஒன்று. இந்த சீரியலில் “சத்யா” என்ற கதாபாத்திரத்தில் வாணி போஜன் நடித்து வந்தார். தெய்வமகள் சீரியல் மூலம் வாணி போஜனுக்கு ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது என்று கூட சொல்லலாம் .அந்த அளவிற்கு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். அதற்கு பிறகு இவர் சில சீரியல்களில் மட்டும் நடித்தார். பின் இவருக்கு சினிமா பட வாய்ப்பு கிடைத்தது. அதற்கு பிறகு தமிழ், தெலுங்கு என பல மொழியில் பிசியாக படம் நடித்து வருகிறார்.

மகான் படத்தில் வாணிபோஜன்:

அந்த வகையில் தற்போது வாணிபோஜன் அவர்கள் மகான் படத்தில் நடித்திருக்கிறார். அதற்கான புகைப்படங்கள் எல்லாமே வெளியாகி இருந்தது. இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். அது மட்டுமில்லாமல் வாணிபோஜன் அவர்கள் மகான் படத்தின் பாடல்கள், டீஸர், டிரைலர் வெளியாகுவதற்கு முன்பு சோசியல் மீடியாவில் பகிர்ந்திருந்தார். இந்த நிலையில் மகான் படம் நேற்றே வெளியாகி இருக்கிறது. படத்தில் ஒரு காட்சியில் கூட வாணி போஜன் வரவில்லை. ஆனால், படத்தின் படம் ஆரம்பிக்கும் முன்பு நன்றி என்று வாணிபோஜன் பெயரை குறிப்பிட்டு இருந்தார்கள்.

மகான் படத்தில் இருந்து வாணிபோஜன் காட்சிகள் நீக்கம்:

அதேபோல் படம் முடிந்த பிறகும் படத்தில் நடித்தவர்கள் கதாபாத்திரங்களின் பட்டியலில் வாணிபோஜன் பெயர் வந்தது. அதில் மங்கை கதாபாத்திரத்தில் வாணிபூஜன் நடித்து இருப்பது தெரியவருகிறது. இப்படி வாணிபோஜன் படத்தில் நடித்து இருந்தும் அவருடைய காட்சிகள் மட்டும் நீக்கப்பட்டிருக்கிறது. இது ரசிகர்கள் எல்லோருக்கும் அதிர்ச்சியாக இருக்கிறது. மேலும், இதற்கு காரணம் என்ன என்று தெரியவில்லை? மகான் படம் 2.42 மணி நேரம் செல்கிறது. இந்த படத்தின் நீளத்தின் காரணமாக தான் வாணி போஜன் காட்சிகளை மட்டும் நீக்கி இருக்கலாம் என்றும் கூறுகிறார்கள்.

அதிர்ப்தியில் வாணிபோஜன்:

அதுமட்டுமில்லாமல் வாணி போஜன் படத்திம் வெளியாகும் முன் எல்லா சமயங்களிலும் சோசியல் மீடியாவில் மகான் குறித்து தொடர்ந்து பதிவிட்டிருந்தார். ஆனால், மகான் படம் வெளியாகும்போதும் வெளியான பிறகும் மகான் படத்தை குறித்து அவர் எந்த ஒரு பதிவும் போடவில்லை. இதிலிருந்து வாணிபோஜன் படக்குழுவினர் மீது அதிருப்தியில் இருப்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. படத்தில் வாணி போஜன் நடித்த காட்சிகளை மட்டும் நீக்கியதற்கு உண்மையான காரணம் என்னவென்று இன்னும் வரை வெளியாகவில்லை? இதுகுறித்து படக்குழுவினரும் கூறவில்லை, வாணிபோஜனும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full