வீடே மாற போகுது, மறக்க முடியாத நினைவுகள்- எமோஷனலாக வாணி ராணி சீரியல் நடிகை போட்ட பதிவு

By subhashini · 2/7/2024

'வாணி ராணி' சீரியலின் மறக்க முடியாத நினைவுகள் தொடர்பாக நீலிமா ராணி பகிர்ந்து இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக திகழ்பவர் நீலிமா ராணி. இவர் உலக நாயகன் கமல் நடித்த 'தேவர் மகன்' படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகிற்கு அறிமுமாகி பல படங்களில் நடித்து இருக்கிறார்.

அதோடு இவர் பல்வேறு திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்து இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் இவர் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து இருக்கிறார். மேலும், இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி தொடர்களிலும் நடித்து இருக்கிறார். கடைசியாக இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'அரண்மனை கிளி' என்ற தொடரில் நடித்து இருந்தார். பின் சிறிய இடைவெளிக்கு பின் இவர் '16 ஆகஸ்ட் 1947' என்ற படத்தில் நடித்திருந்தார்.

நீலிமா ராணி குறித்த தகவல்:

இந்த படத்தில் இவர் கௌதம் கார்த்திக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதுமட்டும் இல்லாமல் இவர் படங்களை தயாரித்தும் வருகிறார். தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'வானத்தைப் போல' தொடரில் நடித்து வருகிறார். இந்த சீரியல் ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் நடிகை நீலிமா ராணி இன்ஸ்டாவில் பதிவிட்டு இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

View this post on Instagram

A post shared by Neelima Rani (@neelimaesai)

நீலிமா ராணி பதிவு:

அதில் அவர், ஏழு வருடங்களுக்குப் பிறகு 'வாணி ராணி' சீரியல் படபிடிப்பு நடந்த வீட்டிற்கு 'வானத்தைப் போல' தொடர் ஷூட்டிங்கிற்காக வந்திருக்கிறேன். வாணி ராணி டிம்பிள் வீடு எவ்வளவு அழகாக இருக்கிறது பாருங்கள். இந்த வீட்டை பார்ப்பதற்கு ரொம்ப ஆச்சரியமாக இருக்கிறது. எனக்கு இதை பார்க்கும்போது பழைய ஞாபகங்கள் தான் வருகிறது. இந்த இடத்தில் நிறைய மறக்க முடியாத சம்பவங்கள் நடந்திருக்கிறது.

வாணி ராணி சீரியல்:

தற்போது இந்த வீடு மாறப்போகிறது. அதற்குள்ளே இந்த வீட்டிற்கு வந்து வீடியோ எடுத்து உங்களுக்காக பதிவிடுவதில் எனக்கு ரொம்ப சந்தோஷம் என்று எமோஷனலாக பதிவிட்டு இருக்கிறார். சன் டிவியில் ஒளிபரப்பாகி பிரபலமடைந்த சீரியல்களில் ஒன்று 'வாணி ராணி'. இந்த தொடர் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பப் பட்டிருந்தது. கிட்டத்தட்ட 1743 எபிசோடுகள் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி இருந்தது.

நீலிமா குடும்பம்:

இந்த தொடரில் ராதிகா அவர்கள் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். இந்த சீரியலை ராதிகாவின் ராடான் நிறுவனம் தான் தயாரித்திருந்தது. இந்த சீரியலின் மூலம் தான் நீலிமா ராணியும் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருந்தார். இதனிடையே நீலிமா அவர்கள் தன்னுடன் சீரியலில் நடித்த அஷ்வின் என்பவரை திருமணம் செய்துகொண்டார். தற்போது இவர்களுக்கு அழகான இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full