அந்த பாவம் தான் என்னபழி தீக்குதோனு நெனைக்கிறேன் - அறுவை சிகிச்சைக்கு பின் வாணி ராணி வேணு அரவிந்த் அளித்த முதல் பேட்டி.

By Siva · 22/11/2022

பிரபல சின்னத்திரை நடிகர் வேணு அரவிந்த் கோமா நிலைக்கு சென்றிருப்பதாகவும், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில் தற்போது தனது நிலை குறித்து அவரே பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார். இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் இயக்கிய காதல் பகடை, காசளவு நேசம், காதல் வாங்கி வந்தேன் போன்ற பல்வேறு தொடர்களில் நடித்தவர் சீரியல் நடிகர் வேணு அரவிந்த். மேலும், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செல்வி, வாணி ராணி, சந்திரகுமாரி ஆகிய நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.

சீரியல் மட்டுமல்லாது அலைபாயுதே, வல்லவன் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ள வேணு, ’சபாஷ் சரியான போட்டி’ என்ற படத்தையும் இயக்கியுள்ளார். இப்படி ஒரு நிலையில் இவர் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டிருப்பதாகவும் அவர் கோமா ஸ்டேஜில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியது. அதற்க்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பின்னர் குணமடைந்தார்.

கொரோனா தொற்ரில் இருந்து இவர் குணமடைந்த சில நாட்களிலேயே இவருக்கு நிமோனியா வந்துள்ளது. மேலும், இவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இவருக்கு மூளையில் கட்டி இருப்பதை கண்டறிந்து உள்ளனர். இதை தொடர்ந்து அறுவை சிகிச்சை மூலம் அந்த கட்டியை அகற்றியுள்ளனர். கொரோனா தாக்குதலுக்குப் பின்பு நிமோனியா வந்ததாலும், மூளையில் இருந்த கட்டியை அறுவை சிகிச்சை செய்து அகற்றியதாகவும் செய்திகள் வெளியானது.

https://twitter.com/chettyrajubhai/status/1421010238791159809

இதனை நீங்கள் கேட்ட பாடல் தொகுப்பாளர் விஜயசாரதி கூட உறுதிபடுத்தி இருந்தார்.ஆனால், வேனு அரவிந்த் உடல் நிலை குறைவால் மட்டும் தான் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும் அவர் கோமாவில் இல்லை என்று ராதிகா தெரிவித்து இருந்தார். இதை தொடர்ந்து வேனுவுடன் வாணி ராணி சீரியலில் நடித்த அருண் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், நான் வேனு சாரின் மனைவியிடம் பேசினேன்.

அவர் கோமாவில் இல்லை. கடந்த 8 மாதங்களாக அவருக்கு சில உடல் நல பிரச்சனைகள் இருந்தது. அவருக்கு அறுவை சிகிச்சையும் மேற்கொண்டார். தற்போது அவர் Icuவில் தான் இருக்கார். ஆனால், கோமாவில் இல்லை. விரைவில் அவர் நலமுடன் வீடு திரும்புவார். அதுவரை எந்த ஒரு வதந்தியும் பரப்பாதீர்கள் என்றும் கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் 4 மாதங்கள் கழித்து பேட்டி ஒன்றில் பங்கேற்று இருக்கிறார் வேணு.

https://www.youtube.com/watch?v=at1RQHmyLSw&t=25s

அதில் அவர் பேசி இருபதாவது 'கடந்தவை கடந்தவையாகவே இருக்கட்டும் நான் இப்போது உயிரோடு இருக்கிறேன். இனிமேல் என்ன நடக்கப் போகிறது என்பதை மட்டும் பார்க்கலாம். மேலும், எனக்கு பெரிதாக ஒன்றும் நடக்கவில்லை எனக்கு தலையில் ஒரு சிறிய கட்டி இருந்தது. அதை நீக்கி விட்டார்கள் இப்போது நான் முழுவதும் நலமாக இருக்கிறேன். மருத்துவர்கள் எனக்கு தொடர்ந்து சிகிச்சைகள் அளித்து வருகிறார்கள்' என்று கூறியுள்ளார். நான் வில்லனாக நடித்து பலரின் வாயில் விழுந்த பாவம் தான் எனக்கு இதெல்லாம் நடக்கிறதோ என்று கூட தோன்றுகிறது இதனால் இனி நான் வில்லனாக நடிக்கவே விரும்பவில்லை என்றும் கூறியிருக்கிறார்

Tamil Behind Talkies AMP · Quick view
View full