ஜோவிகா லவ் பண்ணறாளா? நல்ல வேளை காலேஜுக்கு அனுப்பல- வனிதா விஜயகுமார் ஓபன் டாக்
சமீப காலமாக சோசியல் மீடியாவில் பிரபலமான நபர்களில் ஒருவராக வனிதா விஜயகுமார் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மகள் ஆவார். ஆரம்பத்தில் சில படங்களில் வனிதா நடித்து இருந்தாலும், சினிமாவில் இருந்து விலகி இருந்தார். அதற்கு பின் குடும்ப ப்ரச்சனை காரணமாக வனிதா தன் தந்தையுடன் சண்டை போட்டு வீட்டை விட்டு வெளியே வந்து விட்டார். வனிதா தன் மகள்களுடன் தனியாக தான் இருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பின் வனிதா பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.
இதன் மூலம் வனிதா வாழ்க்கை மாறியது என்றே சொல்லலாம். மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், சீரியல்கள், படங்கள் என எதையும் விட்டு வைக்காமல் ஏதாவது ஒரு வேலையை செய்து கொண்டு இருக்கிறார். அதோடு இவர் நடிப்பைத் தாண்டி யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். இதில் இவரை எக்கச்சக்கமான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள். இதுமட்டுமில்லாமல் இவர் சொந்தமாக பிசினஸ் செய்து வருகிறார்.
வனிதா குறித்த தகவல்:
இதைத் தொடர்ந்தும் இவர் நிறைய படங்களில் நடித்தும் வருகிறார். அந்த வகையில் தற்போது வனிதா விஜயகுமார், ராபர்ட் மாஸ்டருடன் இணைந்து ‘மிஸஸ் & மிஸ்டர் ‘ என்ற படத்தை இயக்கி நடித்து இருக்கிறார். இந்த படத்தில் நடிகை சகிலா, கணேஷ், ஆர்த்தி கணேஷ், பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன், ஸ்ரீமன், செஃப் தாமு உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசை அமைத்திருக்கிறார். இந்த படத்தை வனிதாவின் மூத்த மகள் ஜோவிகா விஜயகுமார் தான் தயாரித்திருக்கிறார். இந்த படம் ஜூலை நான்காம் தேதி வெளியாகியிருக்கிறது.
வனிதா பேட்டி:
இந்நிலையில் தற்போது இந்த படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் வனிதா, இந்த படத்தினுடைய ட்ரெயிலில் ஆபாசமான காட்சிகள் இருப்பதாக பலர் சொல்கிறார்கள். ஆனால், இதில் எந்த ஆபாசமும் கிடையாது. பாக்யராஜ் படங்களில் வருவது போல எதார்த்தமான கதையை தான் இந்த படத்தில் வைத்திருக்கிறேன். இது ஒரு மாடர்ன் பாக்யராஜ் படம். பாக்யராஜ் படங்களில் பெரும்பாலும் வெகுளித்தனம் இருக்கும்.
ஜோவிகா காதல்:
முந்தானை முடிச்சு படத்தில் கூட ஒரு குடும்பத்தில் குழந்தை பிறப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை தான் காட்டியிருப்பார்கள். அதேபோலத்தான் நானும் இந்த படத்தில் காட்டி இருக்கிறேன். மேலும், என் மகள் லவ் பண்ணவே மாட்டாள். காதல் வலி எப்படி இருக்கும் என்று என்னுடைய வாழ்க்கையின் மூலமே அவள் கற்றுக் கொண்டாள். அதனால் தான் என் மகள் காதல் விஷயத்தில் ரொம்ப கவனமாக இருக்கிறாள். எப்போதுமே எனக்கு அட்வைஸ் செய்து கொண்டு இருப்பாள்.
https://www.youtube.com/watch?v=AB_XPdhcAMo
ஜோவிகா பற்றிய தகவல்:
நல்லவேளை என் மகளை நான் காலேஜுக்கு அனுப்பவில்லை என்று கூறி இருக்கிறார். ஜோவிகா பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டார். இவர் தனக்கு படிப்பு சரியாக வரவில்லை என்று மீடியாவிற்கு சென்று விட்டார். தற்போது இவர் மாடலிங் செய்து கொண்டிருக்கிறார். அதோடு சினிமா சம்பந்தப்பட்ட படிப்பை எல்லாம் முடித்து இருக்கிறார். தற்போது இவர் படங்களில் கவனம் செலுத்தியும் தயாரிப்பாளராகவும் பணியாற்றி வருகிறார்.