வி ஜே பிரியங்காவை கிண்டல் செய்தேனா ? சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த வனிதா

By subhashini · 23/8/2024

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் தான் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் நான்கு சீசன்களை கடந்து வந்த ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று இருக்கிறது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது ஐந்தாவது சீசனும் ஒளிபரப்பாகி வருகிறது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான்.

மேலும், இந்த நிகழ்ச்சியில் வெங்கடேஷ் பட், தாமு தான் நடுவர்களாக இருந்தார்கள். ஆனால், இந்த ஐந்தாவது சீசனில் இருந்து நடுவர் வெங்கடேஷ் பட், நிகழ்ச்சியை வழங்கி இருந்த நிறுவனம் Media Masons 10, நிகழ்ச்சியின் இயக்குனர் ஆகியோர் விலகி இருந்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியும், சோகத்தையும் ஏற்படுத்தி இருந்தது. பின் இந்த நிகழ்ச்சியில் தாமுடன் மற்றொரு நடுவராக மாதம்பட்டி ரங்கராஜ் களம் இறங்கி இருக்கிறார். இந்த சீசனை ரக்ஷன் மற்றும் மணிமேகலை தொகுத்து வழங்கி வருகிறார்கள்.

நிகழ்ச்சியில் வனிதா சொன்னது:

இந்த சீசனில் பழைய கோமாளிகளுடன் புதிய கோமாளிகளாக ராமர், ஷப்பனம், அன்ஷிதா, kpy வினோத் ஆகியோர் இணைந்துள்ளனர். இந்த சீசன் தொடங்கி தற்போது வரை நன்றாக சென்று கொண்டு இருக்கிறது. மேலும், இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து ஸ்ரீகாந்த் தேவா, வசந்த் வசி, ஜோயா,பூஜா ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் ஒரு முறை வனிதா சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். அப்போது அவர் பிரியங்காவை பார்த்து, யார் சமைத்தாலும் அது டேபிளுக்கு கொண்டு வரும் வரை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள்.

https://www.youtube.com/watch?v=ApOex9JX50c

வனிதா அளித்த பேட்டி:

பிரியங்கா சாப்பிட்டு விடுவாள் என்று கிண்டல் அடித்து பேசி இருந்தார். இதனால் கடுப்பான பிரியங்கா, நீங்க எப்ப கல்யாண சோறு போடுவீங்க என்று பேசி இருந்தார். மொக்க வாங்கிய வனிதா எதுவும் பேச முடியாமல் திக்குமுக்காடி நின்று இருந்தார். இந்த வீடியோ இணையத்தில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி இருந்தது. இந்நிலையில் இது தொடர்பாக சமீபத்தில் அளித்த பேட்டியில் வனிதா, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நான் பிரியங்காவை கிண்டலாக பேசவில்லை.

பிரியங்கா குறித்து சொன்னது:

அது உரிமையில் பேசியது. ஒரு அக்கா- தங்கை உறவு எந்த அளவிற்கு உறவு இருக்குமோ அந்த அளவு தான் நாங்கள் இருக்கிறோம். நாங்கள் சமீபத்தில் கூட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து இருந்தோம். அப்போது நிறைய விஷயங்களை மனது விட்டு பேசியிருந்தோம். நமக்காக ஒரு துணை இருக்கும் போது நம்முடைய மனசு சந்தோசமாக இருக்கும். அப்படிதான் நாங்கள் இருவருமே. எங்கள் இருவருக்கும் இடையே எந்த ஒரு சண்டையோ, ஈகோ, பொறாமையோ கிடையாது. எங்களுக்குள் அக்கா- தங்கை ரிலேஷன்ஷிப் தான் இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

வனிதா குறித்த தகவல்:

சமீப காலமாக சோசியல் மீடியாவில் பிரபலமான நபர்களில் ஒருவராக வனிதா விஜயகுமார் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபல நட்சத்திர தம்பதிகளாக இருந்த விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மகள் ஆவார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் வனிதா வாழ்க்கை மாறியது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், சீரியல்கள், படங்கள், பிசினஸ் என எதையும் விட்டு வைக்காமல் ஏதாவது ஒரு வேலையை செய்து கொண்டு இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full