3 முறை அந்த நோய் வந்தது ஆனா அவர் நிறுத்தல, இறக்கும் போது மஞ்சுளா சொன்ன ரகசியம்- மனம் திறந்த வனிதா விஜயகுமார்

By subhashini · 13/6/2024

இறக்கும் நேரத்தில் தன்னுடைய தாய் மஞ்சுளா சொன்ன ரகசியம் குறித்து வனிதா அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீப காலமாக சோசியல் மீடியாவில் மிக பிரபலமான நாயகியாக வலம் வருபவர் வனிதா விஜயகுமார். தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நட்சத்திர தம்பதிகளான விஜயகுமார் – மஞ்சுளா ஆகியோரின் மகள் தான் வனிதா. இவர் விஜய் நடித்த சந்திரலேகா படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து இவர் சில படங்களில் மட்டும் நடித்தார். பின் இவர் சினிமாவில் இருந்து சில காலம் விலகி இருந்தார். திருமணத்துக்கு பின்னர் வனிதா படங்களில் நடிப்பதை நிறுத்தி கொண்டார். இதையடுத்து குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக வனிதாவிற்கு இரண்டு முறை விவாகரத்து ஏற்பட்டது. அதற்கு பிறகு வனிதாவுக்கும் அவருடைய தந்தைக்கும் இடையே நிறைய கருத்து வேறுபாடு ஏற்பட்டு மிகப்பெரிய சண்டே நடந்தது.

வனிதா பேட்டி:

இதனால் வனிதாவை அவருடைய தந்தை வீட்டை விட்டே வெளியே அனுப்பி விட்டார். பின் தன்னுடைய மகன் தனக்கே வேண்டும் என்று ஏர்போட்டில் வனிதா மிகப்பெரிய அளவில் கலவரத்தை செய்திருந்தார். இப்படி வனிதாவுக்கும் அவருடைய குடும்பத்திற்கும் இடையே பல பிரச்சனைகள் ஏற்பட்டிருந்தது. ஒரு கட்டத்தில் மஞ்சுளாவே பேட்டியில், வனிதா என்னுடைய மகளே கிடையாது. அவள் ஒரு ராட்சசி. இந்த வயிற்றில் பெற்றதை நினைத்து வருத்தப்படுகிறேன் என்றெல்லாம் பேசி இருந்தார். அதற்குப் பிறகு வனிதா தன்னுடைய இரண்டு மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார்.

மஞ்சுளா குறித்து சொன்னது:

தற்போது சினிமா, சீரியல், நிகழ்ச்சி, தொழில் என்று பிசியாக வனிதா கலக்கிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் வனிதா, ஏர்போர்ட்டில் நடந்த சம்பவத்திற்கு பிறகு என்னை என்னுடைய அம்மா மஞ்சுளா வீட்டிற்கு வரச் சொன்னார். வீட்டிற்கு சென்று நான் என்னுடைய தந்தையின் காலில் விழுது அழுது மன்னிப்பு கேட்டேன். அதற்கு பின் ஆலப்பாக்கம் வீட்டின் மாடியில் என்னுடைய அம்மா இருந்தார். நான் அதே வீட்டில் கீழ் தளத்தில் என் மகன், மகள்களோடு இருந்தேன். என்னுடைய அம்மாவிற்கு குடிப்பழக்கம் இருந்தது. அவருக்கு மூன்று முறை மஞ்சள் காமாலையும் வந்தது. இருந்தாலும் அவர் அந்த குடிப்பழக்கத்தையே நிறுத்தவே இல்லை.

மஞ்சுளா உடல்நிலை:

அம்மா ரொம்ப கிரிட்டிக்கல் நிலையில் தான் ஐசியூவில் இருந்தார். மருத்துவர்களும் 72 மணி நேரத்தில் அம்மா இறந்து விடுவார் என்று சொல்லிவிட்டார்கள். இந்த சூழ்நிலையில் அவர் என்னிடம் சில விஷயங்களை சொன்னார். மேலும், இந்தியாவின் தலைசிறந்த வழக்கறிஞராக இருக்கும் ராம்ஜெத்மலானியை அழைத்து அனைத்து சொத்து பத்திரங்களிலும் என்னுடைய பெயரை சேர்க்க வேண்டும் என்றும் கூறினார். பின் என்னுடைய தந்தை விஜயகுமாரிடம் வனிதாவை விட்டு விடாதீர்கள் என்று சொன்னார். அதற்குப்பின் என்னுடைய அம்மா இறந்துவிட்டார். ஆனால், அவருடைய இறுதி சடங்கை கூட செய்ய என்னை அனுமதிக்கவில்லை.

சொத்து விவகாரம் குறித்து சொன்னது:

பின் சரத்குமாரும், ராதாரவியும் தான் என்னை முன்னாள் அழைத்து இறுதி சடங்குகளை செய்ய வைத்தனர். அவர்கள் இல்லை என்றால் என்னுடைய அம்மாவிற்கு என்னால் இறுதி சடங்கு கூட செய்திருக்க முடியாது. தற்போது அந்த வீட்டை என்னுடைய அம்மா ப்ரீத்தா மற்றும் ஸ்ரீதேவிக்கு எழுதி வைத்துவிட்டதாக கூறுகின்றனர். எனக்கு இந்த சொத்தில் உரிமை இல்லை என்று மஞ்சுளா எழுதி வைத்துவிட்டதாகவும் சொல்கின்றனர். ஆனால், அதில் எனக்கு நம்பிக்கை இல்லை. நான் அந்த சொத்தில் எதையும் எதிர்பார்க்கவில்லை. அவர்களுக்கும் பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள். சொத்து பிரித்தால் என் மகள்களுக்கு ஒரு பங்கு கொடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full