விஜய்சேதுபதி மகன் தான் அடுத்த தளபதி, நயன்தாரா திரிஷாவை கூட ட்ரோல் செய்தார்கள் - வனிதா விஜயகுமார் ஆவேசம்
Mrs & Mr பட செய்தியாளர் சந்திப்பில் வனிதா விஜயகுமார் பேசியிருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீப காலமாக சோசியல் மீடியாவில் பிரபலமான நபர்களில் ஒருவராக வனிதா விஜயகுமார் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மகள் ஆவார். ஆரம்பத்தில் சில படங்களில் வனிதா நடித்து இருந்தாலும், இடையில் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். அதற்கு பின் குடும்ப ப்ரச்சனை காரணமாக வனிதா தன் தந்தையுடன் சண்டை போட்டு வீட்டை விட்டு வெளியே வந்து விட்டார்.
தற்போது வனிதா தன் மகள்களுடன் தனியாக தான் இருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பின் வனிதா பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். இதன் மூலம் வனிதா வாழ்க்கை மாறியது என்றே சொல்லலாம். மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், சீரியல்கள், படங்கள் என எதையும் விட்டு வைக்காமல் ஏதாவது ஒரு வேலையை செய்து கொண்டு இருக்கிறார். அதோடு இவர் நடிப்பைத் தாண்டி சொந்த பிசினஸ், யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார்.
வனிதா குறித்த தகவல்:
இதில் இவரை எக்கச்சக்கமான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள். இதுமட்டுமில்லாமல் இவர் நிறைய படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது வனிதா விஜயகுமார், ராபர்ட் மாஸ்டருடன் இணைந்து ‘மிஸ்டர் & மிஸஸ் ‘ என்ற படத்தை இயக்கி நடித்து இருக்கிறார். இந்த படத்தில் நடிகை சகிலா, கணேஷ், ஆர்த்தி கணேஷ், பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன், ஸ்ரீமன், செஃப் தாமு உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
இந்த படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசை அமைத்திருக்கிறார்.
படம் குறித்த தகவல்:
இந்த படத்தை வனிதாவின் மூத்த மகள் ஜோவிகா விஜயகுமார் தான் தயாரித்திருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த பணத்தை வைத்து படம் தயாரித்ததாக ஜோவிகா ஏற்கனவே பேட்டியில் சொல்லி இருந்தார். இந்த படம் இன்று ரிலீஸ் ஆகி இருக்கிறது. அதோடு இந்த படத்தினுடைய சிறப்பு காட்சி திரையிடப்பட்டது.இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த வனிதா விஜயகுமார், ரொம்ப எமோஷனலாகவும் டென்ஷன் ஆகவும் இருக்கிறது.
வனிதா பேட்டி:
ரொம்ப கஷ்டப்பட்டு தான் இந்த படத்தை தயாரித்து இயக்கி நடித்து இருக்கிறேன். ஏற்கனவே நிறைய பிரச்சனைகளை சந்தித்து இருக்கிறேன். எல்லாம் பார்த்துக் கொள்ளலாம் என்ற ஒரு தைரியம் இருக்கு. இன்றைய தலைமுறைக்கு இந்த படம் பிடிக்கும் என்று நம்புகிறேன். படத்தில் அப்பா படம் சம்பந்தப்பட்ட
ஒரு காட்சி வருகிறது. அவர் என்னிடம் எதுவுமே கேட்க மாட்டார். நானே அவரின் காப்பிரைட் தானே. என் மகள் தெலுங்கில் நடிக்க போகிறார், அடுத்து தமிழில் நடிப்பார் என் நிறைய ட்ரோல் செய்கிறார்கள். விஜய் சேதுபதி மகன் சூர்யாவையும் பீனிக்ஸ் பட விஷயத்தில் கடுமையாக விமர்சனம் கிண்டலாம் செய்திருக்கிறார்கள்.
விமர்சனங்களுக்கு பதிலடி:
நாளைய தீர்ப்பு படத்தில் விஜய்க்கும் இதுதான் நடந்தது. அதை மீறி அவரின் கடின உழைப்பால் தான்
வெற்றி பெற்று இன்று நாளைய முதல்வராகும் அளவிற்கு வளர்ந்திருக்கிறார். விஜய் சேதுபதி மகனும் விஜய் மாதிரி வருவார். என் மகளும் ஜெயிப்பார். ஆரம்பத்தில் நயன்தாரா திரிஷாவுக்கும் கூட இந்த மாதிரி பிரச்சனை இருந்தது. வந்தவரை வாழவைக்கும் தமிழ்நாடு என்பதில் பெருமை தான். ஆனால், இங்கு இருப்பவர்களையும் வாழ வைக்க வேண்டும் என்பதை மட்டும் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார்.