இளையராஜா பாடலின் காப்புரிமையை வாங்கியிருக்கும் வனிதா விஜயகுமார், எந்தப் படத்தின் பாடல் தெரியுமா?
நடிகை வனிதா விஜயகுமார் உலகநாயகன் கமல் படத்தின் பாடல் உரிமையை வாங்கி இருக்கும் விஷயம்தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. நடிகை வனிதா விஜயகுமார் தற்போது ராபர்ட் மாஸ்டருடன் இணைந்து 'மிஸஸ் & மிஸ்டர் ' படத்தில் நடித்து வருவது நாம் அறிந்ததே. இந்த படத்தின் அறிவிப்பை கடந்த அக்டோபர் ஐந்தாம் தேதி ராபர்ட் மாஸ்டருடன் இணைந்து வனிதா வெளியிட்டு இருந்தார். இந்தப் படத்தை வனிதாவே எழுதி இயக்கியும் இருக்கிறார்.
மேலும், இப்படத்தின் மூலம் வனிதா விஜயகுமார் தனது மகள் ஜோவிகா விஜயகுமாரை திரைத்துறைக்குள் கொண்டு வந்திருக்கிறார் . அதாவது படத்தின் தயாரிப்பு பொறுப்பை ஜோவிகா கவனித்துக் கொள்வதாகக் கூறப்படுகிறது. இந்த படத்தின் பூஜை சில மாதங்களுக்கு முன் பாங்காக்கில் போடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் வனிதா மற்றும் ராபர்ட் மாஸ்டருடன் இணைந்து ஷகிலா, பிரேம்ஜி, ரவிகாந்த், தெலுங்கு நடிகர் சுனில் என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்திருக்கிறார்கள்.
மிஸஸ் & மிஸ்டர் படம்:
தற்போது இந்த படத்தின் சூட்டிங் கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில், இந்த படத்தில் ஒரு கிளுகிளுப்பூட்டும் பாடல் இடம் பெற்றால் நன்றாக இருக்கும் என்று வனிதா விஜயகுமார் நினைத்தாராம். அதனால், அவருக்கு உடனே ஞாபகம் வந்தது கமல்ஹாசன் நடித்த 'மைக்கேல் மதன காமராஜன்' படத்தில் வரும் ஒரு பாடல் தானாம். உடனே அந்தப் படத்தின் இசை அமைப்பாளர் ஆன இளையராஜா கிட்டப் பேசி அந்தப் பாடலின் உரிமையை வனிதா வாங்கி இருக்கிறாராம்.
https://www.youtube.com/watch?v=O2d8xvNvq1o
ரீமேக் பாடல்:
மேலும், அந்த ரீமேக் பாடல் காட்சியில் நடிக்கப் போவது நடிகை கிரண் என்று கூறப்படுகிறது. தற்போது இந்தப் பாடலை ரீமேக் செய்வதற்காக வனிதா, ராபர்ட் மாஸ்டர் உள்ளிட்ட படக்குழு துபாயில் இருக்கிறார்களாம். ஏற்கனவே மைக்கேல் மதன காமராஜன் படத்தில் இடம்பெற்ற 'பேர் வச்சாலும் வைக்காமப் போனாலும்' பாடலை யுவன் 'டிக்கிலோனா' படத்தில் பயன்படுத்தி இருந்தது நாம் அறிந்ததே. தற்போது நடிகை கிரண் கிளாமராக வரவிருக்கும் அந்தப் படத்தின் பாடல் எதுவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
வனிதா குறித்து :
தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான தம்பதிகளான விஜயகுமார்-மஞ்சுளா ஆகியோரின் மகள் தான் வனிதா. ஆரம்பத்தில் இவர் சினிமாவில் சில படங்களில் மட்டும் நடித்திருந்தார். திருமணத்திற்கு பின்னர் வனிதா படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார். முதலில் நடிகர் ஆகாஷை திருமணம் செய்து கொண்ட நடிகை வனிதா. பிறகு சில காரணங்களால் விவாகரத்து பெற்றார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள். அதன் பிறகு, ஆந்திராவைச் சேர்ந்த ராஜன் என்பவரை திருமணம் செய்து கொண்டு, சில ஆண்டுகளில் அவரிடமிருந்தும் விவாகரத்து பெற்றார் வனிதா.
பிக் பாஸ் நிகழ்ச்சி :
வனிதா விஜயகுமாருக்கும் ராஜன் என்பவருக்கும் ஒரு மகள் இருக்கிறார். பின், நடன இயக்குனர் ராபர்ட் உடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கடைசியாக வனிதா பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், அந்தத் திருமண வாழ்க்கையும் சரியாக இல்லாததால் அதிலிருந்து வெளியே வந்தார். இதற்கிடையில் தன் தந்தையுடன் ஏற்பட்ட பிரச்சனையால் தற்போது தனது இரண்டு மகள்களையும் தனியாக வளர்த்து வரும் வனிதா, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தார். அதற்குப் பிறகுதான் அவர் மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.