இளையராஜாவுக்கு வேற வேலை இல்லையா - செய்தியாளர்களிடம் சீறிய வனிதா விஜயகுமார்
பாடல் சர்ச்சை விவகாரத்தில் இளையராஜாவை நடிகை வனிதா வெளுத்து வாங்கி இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக வனிதா விஜயகுமார் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். இவர் சினிமா, சீரியல், நிகழ்ச்சிகள், பிசினஸ் என்று பிசியாக இருக்கிறார்.
தற்போது இவர் 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஹீரோயினாக நடித்திருக்கும் படம் மிஸஸ் அண்ட் மிஸ்டர். இந்த படத்தை இவரே இயக்கி நடித்தும் இருக்கிறார்.
இந்த படத்தில் இயக்கி ஜோடியாக ராபர்ட் மாஸ்டர் நடித்திருக்கிறார். வனிதாவின் மகள் ஜோவிகா தான் இந்த படத்தை தயாரித்திருக்கிறார். இந்த படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் ஷகிலா, பவர் ஸ்டார் சீனிவாசன், கிரண், ஆர்த்தி கணேஷ், கணேஷ், தாமு உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
மேலும், சமீபத்தில் வெளிவந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தையும் ட்ரோல் செய்யப்பட்டும் இருந்தது. அதோடு இந்த படத்தில் சிவராத்திரி தூக்கம் ஏது என்ற பாடல் இடம் பெற்றிருக்கிறது. இந்த பாடல் வெளியான போது இளையராஜாவுடன் வனிதா, ஜோவிகா இருவருமே சேர்ந்து எடுத்த ஒரு புகைப்படமும் வெளியிட்டு இருந்தார்கள்.
மிஸஸ் அண்ட் மிஸ்டர்:
இந்த படம் வெளியானபோது இளையராஜா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், மிஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்தில் இடம் பெற்ற சிவராத்திரி தூக்கம் ஏது என்ற பாடலை நீக்க வேண்டும். என்னுடைய அனுமதி இல்லாமல் இந்த பாடலை பயன்படுத்தி இருக்கிறார்கள் என்று இளையராஜா கூறியிருந்தார். பின் இந்த விவகாரம் தொடர்பாக அளித்த பேட்டியில் வனிதா விஜயகுமார், இளையராஜா எனக்கு கடவுள் மாதிரி. அந்த கடவுளே கோபித்துக் கொண்டால் எவ்வளவு கஷ்டமாக இருக்கும். சம்பந்தப்பட்ட இசை நிறுவனத்திடம் இந்த பாடலுக்கான உரிமையை வாங்கி இருக்கிறோம் என்று கண்ணீர் மல்க பேசி இருந்தார். இதை அடுத்து இளையராஜா தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
https://www.youtube.com/watch?v=h0q57m64-j4
இளையராஜா வழக்கு:
அதில் இளையராஜா, தன்னுடைய பாடலை பயன்படுத்தியது மட்டும் இல்லாமல் தன்னுடைய பெயரை இந்த படத்தில் பயன்படுத்தி இருக்கிறார்கள். உடனடியாக நீக்கம் செய்ய வேண்டும் என்றெல்லாம் கூறி இருக்கிறார். இதற்கு வனிதா, நான் sony மியூசிக் நிறுவனத்திடம் முறையாக அனுமதி பெற்று தான் பாடலை பயன்படுத்தினேன். காப்புரிமை மீறல் இல்லை என்று கூறியிருந்தார். இந்நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்திருக்கிறது. விசாரணைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த வனிதா, இளையராஜா அப்பா மீது எனக்கு நிறைய மரியாதை இருக்கிறது. ஆனால், அவர் என் மீது கேஸ் போட்டதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. பொதுவாகவே ஒரு படம் உருவாகுவதற்கு உதவியாக இருந்தவர்களுக்கு நன்றி சொல்வார்கள். அதைப்போல தான் நான் இளையராஜாவிற்கு நன்றி சொல்லி என்னுடைய படத்தில் கார்டு போட்டு இருந்தேன்.
https://www.youtube.com/live/7hve-sAubwA?si=sQFex0PvuESHp_r_
வனிதா பேட்டி:
அது இளையராஜாவுக்கு மட்டுமல்ல படத்திற்காக உதவி செய்ய எல்லோருக்குமே போட்டிருந்தேன். ஆனால், அதை கூட அவர் பெரிதுபடுத்தி இருந்தார். அது அவருக்கு பிடிக்கவில்லை என்று சொல்லியிருந்தால் நான் உடனடியாக நீக்கி இருப்பேன். அதை அவர் எனக்கே போன் செய்து கேட்டிருக்கலாம். அதை விட்டு வழக்கு தொடர்ந்து என்னை கோர்ட்டுக்கு வர வைத்து அசிங்கப்படுத்தி விட்டார். அவர் என் மீது வழக்கு தொடர்ந்த பிறகு நான் அவரிடம் பேசவே இல்லை. அதே போல் ஏற்கனவே நான் பிரஸ்மீட்டில் கோபப்பட்ட காரணம், அவர் மீது நான் வைத்திருந்த நம்பிக்கை பொய்யாகி விட்டது என்று தான் கோபப்பட்டேன். நான் அவருடைய வீட்டில் ஒரு பிள்ளையாகவே வளர்ந்தேன். ஆனால், அவர் கேஸ் போட்டு பெரிய அதிர்ச்சியை கொடுத்தார். அதனால்தான் நான் அவர் பெயரை நீக்கி விட்டேன். என்னை திருடி மாதிரி நடத்துகிறார்கள்.
இளையராஜா பற்றி சொன்னது:
ராஜப்பா எனக்கு இது வருத்தமாக இருக்கு. நான் அவரிடம் சொல்லிவிட்டு தான் அந்த பாடலை பயன்படுத்தியிருந்தேன். என்னுடைய மகள் சோனி நிறுவனத்திடம் அக்ரிமெண்டில் கையெழுத்து போட்டு தான் உரிமையை வாங்கி இருக்கிறார். ராஜா அப்பாவுக்கு பிரச்சனை என்றால் சோனி நிறுவனம் மீது தான் வழக்கு தொடர வேண்டும். அதில் என்னை இழுக்க கூடாது. இந்த கேஸ் நடக்கும் போது கூட நான் கேப் புக் செய்து தான் வந்தேன். அப்போ வந்த ஒரு டிரைவர், இந்த இளையராஜாவுக்கு வேற வேலையே இல்லையா. எப்ப பார்த்தாலும் யாராவது மீது கேஸ் போடுவதையே ஒரு பொழப்பா வைத்திருக்கிறார் என்றெல்லாம் சொல்லி இருக்கிறார். இது அவருக்கு பெருமையை சேர்க்காது என்று கூறியிருக்கிறார்.