நடிகர் மோகனின் படத்தில் வனிதா விஜயகுமார் இணைந்து இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் 80,90 காலகட்டங்களில் மிகவும் பிரபலமான நடிகராக திகழ்ந்து வந்தவர் மோகன். தமிழ் சினிமாவில் ரஜினி ,கமல், விஜயகாந்த் என்று பல முன்னணி நடிகர்கள் பட்டைய கிளப்பி கொண்டு இருந்த கால கட்டத்தில் இவர்களுக்கு எல்லாம் செம்ம காம்படீசன் கொடுத்தவர் மோகன். 80களில் இவரது நடிப்பின் மூலம் தனெக்கென்ற ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்தவர்.

எந்த ஊரு சினிமா பின்னணியும் இல்லாமல் சினிமாவுலகில் கொடி கட்டி பறந்தவர் நடிகர் மோகன். இவர் 1982 ஆம் ஆண்டு பயணங்கள் முடிவதில்லை என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். பின் இவருடைய எல்லா படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட். மேலும், வருடம் வருடம் சிறந்த நடிகர் விருதையும் இவர் தான் பெறுவார். அதன் பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகலும் சக்கை போடு போட்டு கொண்டு நடித்தார். இவரை எல்லோரும் மைக் மோகன் என்று தான் அழைப்பார்கள்.

Advertisement

மோகன் திரைப்பயணம்:

அதோடு இவர் ஒரு நாளிற்கு 18 மணி நேரம் நடிப்பிலேய நேரத்தை செலவிட்டார். இவர் கிட்டத்தட்ட 70 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் இவருடைய படம் எல்லாமே வித்தியாசமான கதை களம், சூப்பர் ஹிட் பாடல்கள் என்று சொல்லிக் கொண்டே போகலாம். கமலஹாசனுக்கு அடுத்த படியாக காதல் மன்னனாக வலம் வந்த நடிகர் மோகன் சில பொய்யான வதந்தியால் அப்படியே அவருடைய வாழ்க்கை பாதையை மாறிவிட்டது.

மோகன் நடித்த கடைசி படம்:

இறுதியாக தமிழில் 2008ஆம் ஆண்டு வெளியான சுட்டபழம் என்ற படத்தின் மூலம் மோகன் ரீ என்ட்ரி கொடுத்தார். ஆனால், இந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இப்படி ஒரு நிலையில் கிட்டத்தட்ட தமிழ் சினிமாவில் 13 ஆண்டுகள் கழித்து மீண்டும் மோகன் ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறார். இந்த படத்தை இயக்குனர் விஜய்ஸ்ரீ இயக்கி வருகிறார். இவர் ஏற்கனவே ’தாதா 87’ ’பவுடர்’ உள்பட ஒருசில படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

ஹரா படம் குறித்த அப்டேட்:

இந்த படத்திற்கு ‘ஹரா’ என்று பெயரிடப்பட்டு இருக்கிறது. இப்படத்தின் மூலம் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் மோகன் மீண்டும் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்தில் சுரேஷ் மேனன் நடிக்கிறார். இவர்களுடன் இப்படத்தில் குஷ்பு, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், சிங்கம்புலி, தீபா, மைம் கோபி, சாம்ஸ், கௌஷிக், அனித்ரா நாயர், சந்தோஷ் பிரபாகர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த நிலையில் நடிகர் மோகனின் ஹரா படத்தில் வனிதா விஜயகுமார் நடித்திருக்கும் தகவல் வைரலாகி வருகிறது.

Advertisement

வனிதா ரோல்:

அதாவது, இந்தப் படத்தில் நடிகை வனிதா விஜயகுமார் அவர்கள் அரசியல்வாதியாக நடிக்கிறார். வனிதா படப்பிடிப்பு தளத்தில் மோகனுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார். மேலும், தற்போது இந்த படத்தினுடைய பணிகள் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது. சமீபத்தில் தான் இந்த படத்தினுடைய ஃபர்ஸ்ட் லுக், டைட்டில் டீசர், பாடல்களெல்லாம் வெளியாகி இருந்தது. கூடிய விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement