வித விதமான கெட்டப்பில் வனிதா நடத்திய ஃபோட்டோ ஷூட் - கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்

By Manikandan · 31/1/2023

சோசியல் மீடியாவில் மிக பிரபலமான நாயகியாக வலம் வருபவர் வனிதா விஜயகுமார். தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நட்சத்திர தம்பதிகளான விஜயகுமார் – மஞ்சுளா ஆகியோரின் மகள் தான் வனிதா. இவர் விஜய் நடித்த சந்திரலேகா படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து இவர் சில படங்களில் மட்டும் நடித்தார். பின் சினிமாவில் இருந்து சில காலம் விலகி இருந்த வனிதா திருமணத்துக்கு பின்னர் படங்களில் நடிப்பதை நிறுத்தி கொண்டார். இதையடுத்து குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக வனிதாவிற்கு இரண்டு முறை விவாகரத்து ஏற்பட்டது. அது மட்டுமில்லாமல் தன் தந்தையுடன் பிரச்சனை காரணமாக தன்னுடைய இரண்டு மகள்களுடன் தனித்தனியாக வசித்து வருகிறார் வனிதா.

வனிதா திரைப்பயணம்:

மேலும், நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் வனிதா கலந்து கொண்டிருந்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் தான் வனிதா மக்கள் மத்தியில் மீண்டும் பிரபலம் அடைந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு வனிதா அவர்கள் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்தார். தற்போது இவர் படங்கள், சீரியல்கள் என எதையும் விட்டு வைக்காமல் ஏதாவது ஒரு வேலையை செய்து கொண்டு இருக்கிறார். தற்போது இவர் காத்து என்ற படத்தில் நடனம் ஆடி இருக்கிறார்.

வனிதா நடிக்கும் படங்கள்:

இதனை தொடர்ந்து இவர் அனல்காற்று, அந்த கண், சிவப்பு மனிதர்கள், கொடூரன், தில்லிருந்தா போராடு, பிக் கப் டிராப் உட்பட பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். மேலும், இவர் நடிப்பைத் தாண்டி யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். இதில் இவரை எக்கச்சக்கமான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள். இதுமட்டுமில்லாமல் இவர் அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யும் அங்காடி ஒன்றை கடந்த ஆண்டு தொடங்கினார்.

இப்படி வனிதா அவர்கள் பல்வேறு தொழில்களில் கவனம் செலுத்தி வருகிறார்.சமீபத்தில் நடந்தது முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 6ல் தொடர்ந்து அசீமிற்கு ஆதரவு தெரிவித்து வந்தார் நடிகை வனிதா விஜயகுமார் தான். அதோடு பல செய்தி ஊடகங்களில் நடிகர்கள் பற்றியும் பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றியும் பேட்டி கொடுத்து வருகிறார். இதனால் இவருக்கு ரசிகர்களும் தொடர்ந்து அதிகமாகி கொண்டே வருகின்றனர்.

View this post on Instagram

A post shared by Vanitha Vijaykumar (@vanithavijaykumar)

வைரலாகும் இன்ஸ்டா பதிவு :

மேலும் இன்ஸ்டாகிராமில் படு ஆக்டிவாக இருக்கும் இவரை 3 லட்சத்திற்கும் மேலான ரசிகர்கள் பின்தொடர்கின்றனர். அதனால் வனிதா எது பதிவிட்டாலும் அந்த பதிவு சோசியல் மீடியாவில் படு பயங்கரமாக வைரலாகி வரும் நிலையில் தற்போது நடிகை வனிதா விஜயகுமார் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆங்கிலோ இந்தியன் ஸ்டைலில் உடையணிந்து பல புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

கலாய்க்கும் நெட்டிசன்கள் :

பொதுவாக இவர் செய்யும் ஒவ்வொரு செயலையும் கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள் இந்த புகைப்படங்களையும் விட்டு வைக்கவில்லை. இன்று முழுவதும் தொடர்ந்து பல உடைகளில் புகைப்படங்களை வெளியிட்டு வரும் வனிதாவை சிலர் பாராட்டியும், பலர் கடுமையான விமர்சனங்களை கூறி கலாய்த்தும் வருகின்றனர். இந்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் தீயாய் பரவி வைரலாகி வருகிறது.

behindtalkies AMP · Quick view
View full