நான் இளையராஜா வீட்டுக்கு மருமகளா போக வேண்டியவள், உண்மையை சொன்னால் - வனிதா விஜயகுமார் ஆதங்கம்

By subhashini · 12/7/2025

தன் படத்தின் மீது இளையராஜா வழக்கு தொடர்ந்த சம்பவம் பற்றி நடிகை வனிதா விஜயகுமார் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக வனிதா விஜயகுமார் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். தற்போது இவர் சினிமா, சீரியல், நிகழ்ச்சிகள், பிசினஸ் என்று பிசியாக இருக்கிறார்.

தற்போது இவர் 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஹீரோயினாக நடித்திருக்கும் படம் மிஸஸ் அண்ட் மிஸ்டர். இந்த படத்தை இவரே இயக்கி நடித்தும் இருக்கிறார். இந்த படத்தில் வனிதாவுக்கு ஜோடியாக ராபர்ட் மாஸ்டர் நடித்திருக்கிறார். வனிதாவின் மகள் ஜோவிகா தான் இந்த படத்தை தயாரித்திருக்கிறார். இந்த படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் ஷகிலா, பவர் ஸ்டார் சீனிவாசன், கிரண், ஆர்த்தி கணேஷ், கணேஷ், தாமு உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

மிஸஸ் அண்ட் மிஸ்டர்:

மேலும், நேற்று வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தையும் ட்ரோல் செய்யப்பட்டும் வருகிறது. அதோடு இந்த படத்தில் சிவராத்திரி தூக்கம் ஏது என்ற பாடல் இடம் பெற்றிருக்கிறது. இந்த பாடல் வெளியான போது இளையராஜாவுடன் வனிதா ஜோவிகா இருவருமே சேர்ந்து எடுத்த ஒரு புகைப்படமும் வெளியிட்டு இருந்தார்கள். தற்போது இந்த படம் வெளியானபோது இளையராஜா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

இளையராஜா வழக்கு:

அதில், மிஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்தில் சிவராத்திரி தூக்கம் ஏது என்ற பாடல் இடம் பெற்றிருக்கிறது. இந்த பாடலை படத்திலிருந்து நீக்க வேண்டும். என்னுடைய அனுமதி இல்லாமல் இந்த பாடலை பயன்படுத்தி இருக்கிறார்கள் என்று இளையராஜா கூறியிருக்கிறார். இந்நிலையில் இந்த இந்த விவகாரம் தொடர்பாக அளித்த பேட்டியில் வனிதா விஜயகுமார், மக்கள் என்னுடைய படத்தை வந்து பார்க்க வேண்டும். நானும் அந்த விஷயத்தை பார்த்தேன்.

https://youtube.com/shorts/Gb8jdfOBeCM?si=xhwZteZ30NNYET4N

இளையராஜா பற்றி சொன்னது:

இளையராஜா எனக்கு கடவுள் மாதிரி. அந்த கடவுளை கோபித்துக் கொண்டால் எவ்வளவு கஷ்டமாக இருக்கும். சம்பந்தப்பட்ட இசை நிறுவனத்திடம் இந்த பாடலுக்கான உரிமையை வாங்கி இருக்கிறோம். அவர் வழக்கு தொடர்வதாக இருந்தால் அந்த நிறுவனத்தின் மீது தான் தொடர வேண்டும்., சில விஷயங்களை இங்கு பேச முடியாது. உண்மையை சொன்னால் தப்பாகிவிடும். ஒரு பேட்டியில் இளையராஜா, என்னிடம் முறையாக அனுமதி வாங்கினால் காசு கூட கேட்காமல் நான் பாடலை பயன்படுத்த ஒத்துக் கொள்வேன் என்று கூறியிருந்தார். அதனால் நானும் என்னுடைய மகளும் அவருடைய வீட்டிற்கு சென்று அவரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி அதற்கு பிறகு தான் இந்த பாடலை வெளியிட்டோம்.

https://www.youtube.com/live/B_prxyStpVU

இளையராஜா வீட்டு மருமகள்:

இருந்தும் அவர் ஏன் இப்படி செய்தார்? என்று தெரியவில்லை. சின்ன வயதில் இருந்தே நான் அவருடைய வீட்டில் வளர்ந்து இருக்கிறேன். இளையராஜாவின் மனைவி ஜீவா அம்மாவிடம் லாக்கர் சாவி வாங்கி அங்கிருந்த நகைகள் எல்லாம் எடுத்து அம்மனுக்கு பூஜை எல்லாம் செய்திருக்கிறேன். அந்த வீட்டில் ஒருவராக தான் நான் இருந்தேன். சொல்லப்போனால் நான் அந்த வீட்டிற்கு மருமகளாக போக வேண்டியவள். இதற்கு மேல் நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை என்று கண்ணீர் மல்க அழுது விட்டு சென்றிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full