என்னுடைய பர்ஸ்ட் லவ் பற்றி சொன்னால் தமிழ்நாடே அதிரும் - நடிகை வனிதா விஜயகுமார் சொன்ன விஷயம்

நடிகை வனிதா விஜயகுமாரின் முதல் காதல்

By subhashini · 18/6/2026

சமீப காலமாக சோசியல் மீடியாவில் பிரபலமான நபர்களில் ஒருவராக வனிதா விஜயகுமார் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மகள் ஆவார். ஆரம்பத்தில் சில படங்களில் வனிதா நடித்து இருந்தாலும், இடையில் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். அதற்கு பின் குடும்ப ப்ரச்சனை காரணமாக வனிதா தன் தந்தையுடன் சண்டை போட்டு வீட்டை விட்டு வெளியே வந்து விட்டார். தற்போது வனிதா தன் மகள்களுடன் தனியாக தான் இருக்கிறார்.

நீண்ட இடைவெளிக்கு பின் வனிதா பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். இதன் மூலம் வனிதா வாழ்க்கை மாறியது என்றே சொல்லலாம். மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், சீரியல்கள், படங்கள் என எதையும் விட்டு வைக்காமல் ஏதாவது ஒரு வேலையை செய்து கொண்டு இருக்கிறார். அதோடு இவர் நடிப்பைத் தாண்டி சொந்த பிசினஸ், யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். இதில் இவரை எக்கச்சக்கமான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள்.

வனிதா குறித்த தகவல்:

இதுமட்டுமில்லாமல் இவர் நிறைய படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு வனிதா விஜயகுமார், ராபர்ட் மாஸ்டருடன் இணைந்து ‘மிஸ்டர் & மிஸஸ் ‘ என்ற படத்தை இயக்கி நடித்து இருந்தார். இந்த படத்தில் நடிகை சகிலா, கணேஷ், ஆர்த்தி கணேஷ், பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன், ஸ்ரீமன், செஃப் தாமு உட்பட பலர் நடித்திருந்தார்கள். இந்த படத்தை வனிதாவின் மூத்த மகள் ஜோவிகா விஜயகுமார் தான் தயாரித்திருந்தார். ஆனால், இந்த படம் எதிர்பார்த்த அளவிற்க்கு வெற்றி பெறவில்லை. இதை அடுத்து வனிதா அவர்கள் லவ் ஓ லவ் என்ற படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

வனிதா பேட்டி:

இப்படி இருக்கும் நிலையில் இந்த படம் தொடர்பாக அளித்த பேட்டியில் தன்னுடைய முதல் காதல் குறித்து பேசிய வனிதா, என்னுடைய முதல் காதல் பற்றி பேச வேண்டும் என்றால் என்னால் இப்போதும் எதையும் வெளிப்படையாக பேச முடியாது. என்னை முதன் முதலாக காதலித்தது யார்? நான் யாரை முதல் முதலாக காதலித்தேன்? என்பதை என்னால் வெளியே சொல்லவே முடியாது. அப்படி நான் அந்த உண்மையை சொன்னால் ஒட்டுமொத்த தமிழ் நாடுமே அதிர்ந்து விடும்.

முதல் காதல் பற்றி சொன்னது:

அதனால அதை சொல்லாமல் நான் மௌனமாக இருப்பதே நல்லது. என்னுடைய முதல் காதலை சொல்லாமலே பல வருடங்களை நான் கடந்துவிட்டேன். என்னுடைய நினைவுகள் எப்போதும் எனக்குள் மட்டும் தான் இருக்கும். முதல் காதல் ரகசியம் எனக்கும் சம்பந்தப்பட்ட அந்த நபர் என இரண்டு பேருக்கும் மட்டும் தான் தெரியும். இப்படி வனிதா பேசியிருந்த விஷயம் தான் தற்போது சோசியல் மீடியாவில் விவாத பொருளாக மாறியிருக்கிறது. பலருமே மனிதாவின் முதல் காதலர்? அவரா? இவரா? என்றெல்லாம் யூகங்களாக பேசிக்கொண்டு வருகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full