“அப்பா எனக்கு தவறான அறிவுரையை வழங்கினார். அதனால் தான் அவர் பேச்சை கேட்கவில்லை ” – வனிதா விஜயகுமார்.

By Dhilip Kumar · 27/8/2023

என் அப்பா தான் எனது வாழ்க்கையை நாசமாக்கினர் என்று கூறியுள்ளார். கடந்த சில வருடமாக சோசியல் மீடியாவில் சர்ச்சை நாயகியாக இருந்த வனிதா விஜயகுமார் தற்போது தொழிலதிபராக கலக்கி கொண்டு வருகிறார். தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான ஜோடிகளான விஜயகுமார் – மஞ்சுளா ஆகியோரின் மகள் தான் வனிதா. ஆரம்பத்தில் இவர் சினிமாவில் சில படங்களில் மட்டும் நடித்தார்.

திருமணத்துக்கு பின்னர் வனிதா படங்களில் நடிப்பதை நிறுத்தி கொண்டார். இதையடுத்து குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக வனிதாவிற்கு இரண்டு முறை விவாகரத்து ஏற்பட்டது. அது மட்டுமில்லாமல் தன் தந்தையுடன் பிரச்சனை காரணமாக தன்னுடைய இரண்டு மகள்களுடன் வனிதா தனித்தனியாக வசித்து வருகிறார். மேலும், நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் வனிதா கலந்து கொண்டிருந்தார்.

வனிதா நடிக்கும் படங்கள்:

இந்த நிகழ்ச்சியின் மூலம் தான் வனிதா மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு வனிதா அவர்கள் பல நிகழ்ச்சிகளில் கலந்து இருக்கிறார். தற்போது இவர் படங்கள், சீரியல்கள் என எதையும் விட்டு வைக்காமல் ஏதாவது ஒரு வேலையை செய்து கொண்டு இருக்கிறார். அந்த வகையில் இவர் காத்து என்ற படத்தில் நடனம் ஆடி இருக்கிறார்.

இதனை தொடர்ந்து இவர் அனல்காற்று, அந்த கண், சிவப்பு மனிதர்கள், கொடூரன், தில்லிருந்தா போராடு, பிக் கப் டிராப் உட்பட பல படங்களில் வனிதா பிசியாக நடித்து வருகிறார்.

வனிதா விஜயகுமார் கூறியது:

இது கூறித்து அவர் கூறுகையில் “ மனதளவில் தற்போது நான் மிகவும் பலமாக இருக்கிறேன். என்னுடைய இந்த மாற்றத்திற்கு தனது தந்தை விஜயகுமார் தான். சமீபத்தில் என் அப்பா ஒரு வீடியோவில் குழந்தைகளை பற்றி அவர் கூறுகையில் என் குழைந்தைகள் அனைவரும் நான் சொல்வதை கேட்டு தான் வளர்ந்தார்கள்.  கவிதா, அனிதா, அருண், ப்ரீதா ஸ்ரீதேவி போன்றோர் குறிப்பிடப்பட்டிருந்தாலும் நடுவில் என்னுடைய பெயர் மட்டும் சொல்லாமல் கடந்து சென்றார். அந்த வீடியோவை யாரோ அனுப்ப நன் அந்த வீடியோவை பார்த்தேன்.

குறைந்த பட்சம் 15 முறையாவது அந்த வீடியோவை நான் பார்த்து இருப்பேன். அதில் அப்பா பிள்ளைகளை பற்றி பேசியதை பார்த்தேன். அந்த வீடியோ பார்த்த போது எல்லாம் எனக்கு கோபம் தான் வந்தது. கோபத்தில் அந்த வீடியோவை பார்த்து அழுது கொண்டு இருந்தேன். என்னுடைய வாழக்கை அப்பா சொல்வதை கேட்டதால் தான் இது போன்று குழப்பமாகிவிட்டது.

என் குழந்தைகளில் பெண் குழந்தை மட்டும் என் பேச்சை கேக்க வில்லை என்று கூறியிருந்தால் அதை நான் விட்டுவிடுவேன் என்னென்றால் சிறிது காலம் நான் அவர்களின் கீழ்படியாமல் இருந்தேன்.

எனது அப்பா எனக்கு தவறான அறிவுரையை வழங்கினார். நான் அதை உணர்ந்ததில் இருந்து நான் அவருக்கு கீழ் படியவில்லை. அப்போது அவர் சொல்வதை கேட்டு இருந்தால் எனது வாழக்கை குலைந்து விட்டு இருக்கும். தன்னம்பிக்கை தான் எனக்கு தற்போது பலமாக இருக்கிறது. விஜயகுமார் என் அப்பா இல்லை என்று அவர் கூற முடியாது.அப்பாவின் பெயருடன் எனது பெயரும் திரும்ப திரும்ப வந்தால் அது அவர்களுக்கு நான் செய்யும் பழிவாங்குதல். அந்த பெயரை நான் மாற்ற மாட்டேன்" என்று அவர் கூறினார்.  

Tamil Behind Talkies AMP · Quick view
View full