என்னை தேவயானி உடன் ஒப்பிட்டு பேசாதீர்கள், அதேபோல் என் மகளை - வனிதா விஜயகுமார் ஆவேசம்

By subhashini · 24/6/2025

சமீப காலமாக சோசியல் மீடியாவில் பிரபலமான நபர்களில் ஒருவராக வனிதா விஜயகுமார் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மகள் ஆவார். ஆரம்பத்தில் சில படங்களில் வனிதா நடித்து இருந்தாலும், சினிமாவில் இருந்து விலகி இருந்தார். அதற்கு பின் குடும்ப ப்ரச்சனை காரணமாக வனிதா தன் தந்தையுடன் சண்டை போட்டு வீட்டை விட்டு வெளியே வந்து விட்டார். வனிதா தன் மகள்களுடன் தனியாக தான் இருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பின் வனிதா பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.

இதன் மூலம் வனிதா வாழ்க்கை மாறியது என்றே சொல்லலாம். மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், சீரியல்கள், படங்கள் என எதையும் விட்டு வைக்காமல் ஏதாவது ஒரு வேலையை செய்து கொண்டு இருக்கிறார். அதோடு இவர் நடிப்பைத் தாண்டி யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். இதில் இவரை எக்கச்சக்கமான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள். இதுமட்டுமில்லாமல் இவர் சொந்தமாக பிசினஸ் செய்து வருகிறார். இதைத் தொடர்ந்தும் இவர் நிறைய படங்களில் நடித்தும் வருகிறார். அந்த வகையில் தற்போது வனிதா விஜயகுமார், ராபர்ட் மாஸ்டருடன் இணைந்து ‘மிஸஸ் & மிஸ்டர் ‘ என்ற படத்தை இயக்கி நடித்து இருக்கிறார்.

வனிதா குறித்த தகவல்:

இந்த படத்தில் நடிகை சகிலா, கணேஷ், ஆர்த்தி கணேஷ், பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன், ஸ்ரீமன், செஃப் தாமு உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசை அமைத்திருக்கிறார். இந்த படத்தை வனிதாவின் மூத்த மகள் ஜோவிகா விஜயகுமார் தான் தயாரித்திருக்கிறார். இந்த படம் ஜூலை நான்காம் தேதி வெளியாகியிருக்கிறது. இந்நிலையில் தற்போது இந்த படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் வனிதா, இந்த படத்தினுடைய ட்ரெயிலில் ஆபாசமான காட்சிகள் இருப்பதாக பலர் சொல்கிறார்கள். ஆனால், இதில் எந்த ஆபாசமும் கிடையாது.

வனிதா பேட்டி:

பாக்யராஜ் படங்களில் வருவது போல எதார்த்தமான கதையை தான் இந்த படத்தில் வைத்திருக்கிறேன். இது ஒரு மாடர்ன் பாக்யராஜ் படம். பாக்யராஜ் படங்களில் பெரும்பாலும் வெகுளித்தனம் இருக்கும். முந்தானை முடிச்சு படத்தில் கூட ஒரு குடும்பத்தில் குழந்தை பிறப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை தான் காட்டியிருப்பார்கள். அதேபோலத்தான் நானும் இந்த படத்தில் காட்டி இருக்கிறேன். முந்தானை முடிச்சு படங்கள் வெளியான காலத்தில் சோசியல் மீடியாக்கள் எல்லாம் இல்லை. இந்த காலத்தில் சோசியல் மீடியாக்கள் இருப்பதால் எதை எடுத்தாலும் ட்ரோல் செய்து விடுகிறார்கள். சமீபத்தில் கூட ஒரு நிகழ்ச்சியில் நான் கலந்து இருந்தேன். அந்த நிகழ்ச்சியில் நடிகை தேவயானி கலந்திருந்தார். தேவயானி எனக்கு நல்ல நண்பர். நாங்கள் இருவருமே ஒரே வயது கொண்டவர்கள்.

https://www.youtube.com/watch?v=AB_XPdhcAMo

தேவையானி பற்றி சொன்னது:

நாங்கள் ஒரே சமயத்தில் தான் திரைத்துறைக்கு வந்தோம். நான் தேவயானி உடைய மிகப்பெரிய ஃபேன். அந்த படத்தில் முக்கிய கதாநாயகி என்பதால் தேவயானி மற்றவர்களுக்கு மரியாதை கொடுக்கும் விதமாக எனக்கு பின்னால் நின்று கொண்டிருந்தார். நான் அவரை அழைத்து என் பக்கத்தில் உட்கார வைத்தேன். ஆனால், அவர் வேண்டாம் என்று மறுத்தார். அதற்கு நான், இப்படி நீ நின்று இருந்தால் பலரும் என்னை கமெண்டுகளில் திட்டுவார்கள். என் பக்கத்தில் உட்காரு என்று சொன்னேன். அவர் என் பின்னால் அமர்ந்து கொண்டார். ஆனால், சோசியல் மீடியாவில் தேவயானி முன்பு திமிராக அமர்ந்த வனிதா என்றெல்லாம் கமெண்ட்ஸ் வந்தது. அவருக்கும் எனக்கும் இருக்கும் நட்பு குறித்து உங்களுக்கு என்ன தெரியும்? நான் தேவயானி இடம் என்ன பேசினேன் என்பது யாராவது பார்த்தீர்களா? எங்கள் இதுவரையும் ஒப்பிட்டு பேசாதீர்கள்.

https://youtu.be/EKYbrBc-2u0?si=tls9o2-xU1nCfgB

விமர்சனங்களுக்கு பதிலடி:

தேவயானி வேறு, நான் வேறு. அதேபோல் என் மகளையும் தேவயானி மகளையும் ஒப்பிட்டு பேசாதீர்கள். யார் யாரையும் ஒப்பிட்டு பேசாதீர்கள். அதற்கு யாருக்கும் உரிமை கிடையாது. என் மகளாகவே இருந்தாலும் நான் ஜோவிகாவை யார் கூடவும் ஒப்பிட்டு பேசுவது கிடையாது. அந்த காலத்தில் ஜோவிகா இடுப்பை காட்டி நடித்ததால் அனைவரும் அந்தப் படத்தை கொண்டாடுகிறார்கள். இப்போது என் மகள் ஜோவிகாவின் இடுப்பிலேயே கேமரா வைத்து புகைப்படம் எடுத்து அதை ட்ரெண்ட் ஆக்குகிறார்கள், விமர்சனமும் செய்கிறார்கள். அதை நான் தவறாக சொல்லவில்லை. அவர் அழகாக இருக்கிறார். அதனால் அப்படி செய்கிறார்கள். ஆனால், இவர்களுக்கு எல்லாம் நான் ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நீங்கள் எல்லாம் கமெண்டில் எழுதும் இடத்தில் இருக்கிறீர்கள். நாங்கள் அந்த கமெண்டை உருவாக்கும் இடத்தில் இருக்கிறோம் என்று கூறி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full