வனிதா விஜயகுமார் மற்றும் ராபர்ட் மாஸ்டர் சொன்ன குட் நியூஸ்- வைரல் வீடியோ இதோ
வனிதா விஜயகுமார் மற்றும் ராபர்ட் மாஸ்டர் சேர்ந்து நடிக்கும் படத்தின் ப்ரோமோஷன் வீடியோ தான் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. சமீப காலமாகவே சோசியல் மீடியாவில் சர்ச்சை நாயகியாக இருப்பவர் தான் வனிதா விஜயகுமார். தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான தம்பதிகளான விஜயகுமார்-மஞ்சுளா ஆகியோரின் மகள் தான் வனிதா. ஆரம்பத்தில் இவர் சினிமாவில் சில படங்களில் மட்டும் நடித்திருந்தார். திருமணத்திற்கு பின்னர் வனிதா படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார்.
முதலில் நடிகர் ஆகாஷை திருமணம் செய்து கொண்ட நடிகை வனிதா. பிறகு சில காரணங்களால் விவாகரத்து பெற்றார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள். அதன் பிறகு, ஆந்திராவைச் சேர்ந்த ராஜன் என்பவரை திருமணம் செய்து கொண்டு, சில ஆண்டுகளில் அவரிடமிருந்தும் விவாகரத்து பெற்றார் வனிதா. வனிதா விஜயகுமாருக்கும் ராஜன் என்பவருக்கும் ஒரு மகள் இருக்கிறார். பின் நடன இயக்குனர் ராபர்ட் உடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கடைசியாக வனிதா பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், அந்தத் திருமண வாழ்க்கையும் சரியாக இல்லாததால் அதிலிருந்து வெளியே வந்தார்.
வனிதா விஜயகுமார் குறித்து:
அதுமட்டுமில்லாமல் தன் தந்தையுடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக தன்னுடைய இரண்டு மகள்களுடன் வனிதா தனியாக வசித்து வருகிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் வனிதா கலந்து கொண்டிருந்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் தான் வனிதா மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார். பிக் பாஸ் டைட்டிலை அவர் வெல்லா விட்டாலும் போட்டியிலிருந்து வெளியேறிய பிறகு பட வாய்ப்புகள் வனிதாவுக்கு குவிந்து வருகின்றன. இதுவரை 17 படங்களில் நடித்திருப்பதாக வனிதா கூறி இருக்கிறார்.
வனிதா நடிக்கும் படங்கள்:
பிக் பாஸுக்கு சென்று வந்த பிறகு வனிதா வசந்த பாலனின் 'அநீதி' படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் ஓரளவு வரவேற்பை பெற்றது. அதை அடுத்து, பிரசாந்த் ஹீரோவாக ரீ என்ட்ரி கொடுத்த 'அந்தகன் ' திரைப்படத்தில் முக்கியமான ரோலில் வனிதா விஜயகுமார் நடித்திருந்தார். மேலும், அவரது நடிப்பில் சில படங்கள் வெளியாக இருக்கிறது. இதற்கிடையே வனிதாவின் மூத்த மகள் ஜோவிகாவும் திரைத்துறையில் தனக்கான இடத்தை பிடிப்பதற்கு கடுமையாக உழைத்து வருகிறார்.
வைரல் புகைப்படம்:
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் புகைப்படம் ஒன்று சமீபத்தில் வைரலாகி இருந்தது. அதாவது கடற்கரை ஒன்றில் ராபர்ட் மாஸ்டரின் கையை காதலோடு பிடித்தபடி வனிதா விஜயகுமார் அமர்ந்திருக்கிறார். அதில், 'Save The Date October 5' என்று குறிப்பிட்டு இருக்கிறது. அதனைப் பார்த்த ரசிகர்களோ, அக்டோபர் ஐந்தாம் தேதி என்னவாக இருக்கும். ஒருவேளை இரண்டு பேருக்கும் திருமணம் நடக்கவிருக்கிறது என்று அறிவிப்பார்களா இல்லை அன்றைய தினமே திருமணம் செய்ய போகிறார்களா என்ற கேள்வி எழுப்பி வந்தார்கள்.
https://www.youtube.com/watch?v=O2d8xvNvq1o
திருமணம் இல்லை பிரமோஷன்:
இந்நிலையில், திருமணம் இல்லை படத்தின் பிரமோஷன் என்று தற்போது நடிகை வனிதா வெளியிட்டு இருக்கும் வீடியோ மூலம் உறுதியாக இருக்கிறது. அக்டோபர் ஐந்தாம் தேதி, சரியாக 12: 00 மணிக்கு ராபர்ட் மற்றும் வனிதா, 'Mr & Mrs' என்னும் படத்தில் நடிப்பதாக அறிவித்துள்ளார்கள் இந்த படத்தை வனிதாவே எழுதி இயக்கும் நிலையில், அவரது மகள் ஜோவிகா தயாரிக்க உள்ளார். தற்போது வனிதாவின் இந்த வீடியோ தான் சோசியல் மீடியா முழுவதும் ட்ரெண்டிங் ஆகி வருகிறது