தனது மகன் சினிமாவில் அறிமுகமாக இருக்கும் நிலையில், நடிகை வனிதா விஜயகுமாரின் எமோஷனல் பதிவு
தனது மகன் ஹீரோவாக அறிமுகம் ஆக இருப்பதைப் பற்றி வனிதா விஜயகுமார் எமோஷனலாக பேசியிருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபல நட்சத்திர தம்பதிகளாக இருந்த விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மகள் தான் வனிதா விஜயகுமார். இவர் ஆரம்பத்தில் சில படங்களில் நடித்து சில காலம் விலகி இருந்தார். பின் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தற்போது சீரியல், படங்கள், பிசினஸ் என கலக்கிக் கொண்டிருக்கிறார்.
இதனிடையே வனிதா அவர்கள் கடந்த 2000 ஆம் ஆண்டு நடிகர் ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஸ்ரீஹரி, ஜோவிகா என்று இரண்டு பிள்ளைகள் பிறந்தார்கள். நன்றாக சென்ற இவர்களது திருமண வாழ்க்கை கடந்த 2005 ஆம் ஆண்டு விவாகரத்தில் முடிந்தது. அதன் பின்னர் தனது மகனை தன்னுடன் அனுப்பி விட வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் ஆகாஷ். ஆனால், வனிதா சம்மதிக்கவில்லை. கடைசியில் இவர்களின் குடும்ப விவகாரம் அனைவரும் அறிந்ததே.
வனிதா மகன் குறித்த தகவல்:
பின் வனிதா மகன் விஜய் ஸ்ரீஹரி அவரின் தந்தை ஆகாஷ் உடன் வளர வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதற்குப் பின் தனது அப்பாவின் வளர்ப்பில் இருக்கும் ஸ்ரீஹரி, தனது தாத்தா விஜயகுமார் குடும்பத்துடன் நல்ல தொடர்பில் இருந்து வருகிறார். இவர் வெளிநாட்டில் சினிமா சம்பந்தப்பட்ட படிப்பை முடித்து இருக்கிறார். தற்போது ஸ்ரீஹரி தமிழ் சினிமாவில் ஹீரோவாக கிளம்பிறங்கி இருக்கிறார். இவர் ஹீரோவாக நடிக்கும் முதல் படத்தை இயக்குனர் பிரபு சாலமன் இயக்குகிறார்.
ஸ்ரீ ஹரி நடிக்கும் படம்:
இப்படத்தில் இயக்குனர் பிரபு சாலமன் மகள் ஹேசல் ஷைனி கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். சிங்கத்தை மயமாக வைத்து படத்தை எடுப்பதாக கூறப்படுகிறது. இந்தப் படத்திற்கு Mambo என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இந்தப் படத்தினுடைய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட நடிகர் விஜயகுமார், தனது பேரன் ஸ்ரீ ஹரி குறித்து நிறைய பேசியிருந்தார். அதில், ஸ்ரீஹரி சினிமாவை நன்று படித்து முடித்தவர். முதலில் யாருடைய உதவி வேண்டாம் என்று பல இயக்குனர்களிடம் ஏறி இறங்கினார்.
நடிகர் விஜயகுமார் பேசியது:
பின் ஸ்ரீஹரி சினிமாவை நன்று படித்து முடித்தவர். முதலில் யாருடைய உதவி வேண்டாம் என்று பல இயக்குனர்களிடம் ஏறி இறங்கினார். ஆனால், வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதற்குப் பிறகுதான் ரஜினியிடம் எல்லாவற்றையும் சொன்னேன். பின்பு அவர்தான், ஸ்ரீஹரியுடன் பேசி அவருக்கு நடிக்க விருப்பம் இருக்கிறது. நல்ல இயக்குனர், நல்ல தயாரிப்பு நிறுவனத்தை பார்த்து பண்ணுங்கள் என்று எனக்கு சொன்னார். அவருக்கு நன்றி என்று பேசி இருந்தார். இந்நிலையில் வனிதா விஜயகுமார் மிகவும் எமோஷனலாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு போட்டுள்ளார்.
வனிதா விஜயகுமார் பதிவு:
அதில், இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆகப் போகிற எனது மகன் விஜய் ஸ்ரீஹரிக்கு என்னுடைய வாழ்த்துக்கள். அவனுக்கு குருவாக இருந்து வழிநடத்துற ரஜினி அங்கிளுக்கு எனது நன்றி. என்னோட முழு அன்பு மற்றும் பிரார்த்தனையோட அழுதுகிட்டே தான் நான் இதை டைப் பண்றேன். என்னோட குழந்தை ஹீரோவாக போகிறான். எனக்கு கொடுக்கிற அன்பையும் ஆதரவையும் என்னுடைய மகனுக்கும் கொடுங்கள் என்று பதிவிட்டுள்ளார். இதற்கு நிறைய பேர் உங்கள் மகன் தான் உங்களை மதிக்க மாட்டேங்கிறானே, அவனுக்கு எதுக்கு நீங்க வாழ்த்து சொல்லி இருக்கீங்க என்றும். இதுதான் தாயுடைய அன்பு என்றும் வனிதாவிற்கு ஆறுதலாக கமெண்ட் போடுகிறார்கள். இன்னும் சிலர் உங்கள் மகன் உங்கள் அன்பை புரிந்துகொண்டு கூடிய விரைவில் உங்களிடம் வருவான் என்றும் பதிவிட்டுள்ளனர்.