வாய மூடு, வெளிய வந்து மேடைல பேசுறாரு, உள்ள என்ன பண்ண- அர்னவை லெப்ட் ரைட் வாங்கிய வனிதா
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அர்னவ்வை , வனிதா வெளுத்து வாங்கி இருக்கும் வீடியோ தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கி இன்று 19ஆவது நாள். இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்குகிறார். இந்த சீசன்னில் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா நமிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளனர்.
இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு ட்விஸ்ட்களுடன் பிக் பாஸ் சீசன் 8 ஆரம்பமாகியுள்ளது. அதோட முதல் நாளே பிக் பாஸ் வீட்டுக்கு நடுவே கோடு போடப்பட்டு ஆண்கள் ஒரு புறம், பெண்கள் ஒருபுறம் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. பின் 24 மணி நேர எலிமினேஷனில் அதிக நாமினேஷன்களை சாச்சனா பெற்று பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி, மீண்டும் வந்து இருந்தார். பின் முதல் வாரத்திற்கான நாமினேஷனில் ரவீந்தர் வெளியேறி இருந்தார்.
பிக் பாஸ் சீசன் 8:
மேலும், இந்த நிகழ்ச்சியில் மக்களுக்கு பரிச்சயமான நபர்களில் ஒருவராக அர்னவ் இருந்தார். இவர் நிகழ்ச்சி ஆரம்பத்திலிருந்து அன்ஷிதாவிற்காக சப்போர்ட் செய்து பேசிக்கொண்டிருந்தார். இவர் டாஸ்க்கில் கலந்து கொள்ளும் போது கூட, அன்ஷிதா உடன் தான் கூட்டணி வைத்திருந்தார். மேலும், இரண்டாவது வார நாமினேஷனில் அர்னவ் இருந்தார். இரண்டாவது வாரத்தின் இறுதியில் விஜய் சேதுபதி, தர்ஷா - அர்னவ் பேசிய விஷயங்களை பேசி இருந்தார்.
வெளியேறிய அர்னவ்:
அதோடு, இரண்டாவது வாரத்தில் பிபி அவார்டுகள் டாஸ்க் நடத்தப்பட்டது. அதில் ஆண்கள் எல்லா பட்டத்தையும் அர்னவுகே கொடுத்திருந்தார்கள். இதைப் பற்றி விஜய் சேதுபதி கேட்டதற்கு பெருமையாக இருக்கிறது என்று அர்னவ் சொல்ல, இதில் என்ன உங்களுக்கு பெருமை என்று விஜய் சேதுபதி நக்கலாக பதில் அளித்து இருந்தார். கடைசியாக நிகழ்ச்சியிலிருந்து அர்னவ் தான் வெளியேறி இருந்தார். அப்போது அன்ஷிதா பயங்கரமாக கதறி கதறி அழுதிருந்தார்.
அர்னவ் பேசிய வார்த்தை:
பின் விஜய் சேதுபதி, உங்களுக்கு தோன்றிய கருத்தை housematesக்கு கொடுங்கள் என்று சொன்னதற்கு அர்னவ், ஜால்ரா பாய்ஸ். சத்யா, விஷால், தீபக் எல்லாருமே ஜால்ரா பாய்ஸ். டேய், என்னடா பண்ணிட்டு இருக்கீங்க. உங்களோட நான் பேசவில்லை என்பதற்காக நீங்கள் ஒரு டீம் சேர்த்து என்னை ஒதுக்கி விட்டீர்கள் என்று பேசிக் கொண்டிருந்தார். உடனே விஜய் சேதுபதி குறுக்கிட்டு, எதற்காக அநாகரிகமாக பேசுகிறீர்கள். உங்களுடைய கருத்தை சொல்லுங்கள், வன்மத்தை கொட்டாதீர்கள். இப்படி எல்லாம் பேசக்கூடாது என்று கூறியிருந்தார்.
https://www.youtube.com/watch?v=lLzAm82YgMQ
ஃபன் அன்லிமிடெட்:
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் பிக் பாஸ் சீசன் 8 ஃபன் அன்லிமிடெட் நிகழ்ச்சி ப்ரொமோவில், அர்னவ் பங்கேற்றுள்ளார். அதில் விஜயகுமாரும் அர்னவை கேள்வி கேட்பதற்காக பங்கேற்று இருந்தார். அப்போது வனிதா, அர்னவ் வேஸ்ட், நாங்க எதிர்பார்த்ததை நீ பண்ணல, வெளியில வந்துட்டு மேடையில் பேசுவாரு, அப்போ உள்ள என்ன பண்ண, நான் அந்த கேம்ல இருந்தா பளார்னு ஒன்னு விட்டிருப்பேன் என்று கூற, அர்னவ் டென்ஷன் ஆகிறார்.