வஞ்சகர் உலகம் பட நடிகைக்கு டும் டும் டும்.! மாப்பிள்ளை இவர் தான்.!

By Rajkumar · 25/1/2019

தமிழில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ’வஞ்சகர் உலகம்’ படத்தில் நடித்தவர் நடிகை அனிஷா அம்புரோஸ். தெலுங்கில் இவர், கோபாலா கோபாலா, ரன், மனமந்தா உட்பட பல படங்களில் நடித்துள்ளார். மலையாளப் படங்களிலும் நடித்திருக்கிறார்.

இவர் தெலுங்கு நடிகர் ஒரு வரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்துவருவதாகவும் அவரை விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் கூறப்பட்டது.இந்நிலையில் குணா ஜக்கா என்பவருடன் அவருக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். சினிமா துறையில் இருந்து அனிஷா யாரையும் அழைக்கவில்லை. ஆனால் குணா, சினிமா துறையில் வேலை செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் திருமணம் இன்னும் இரண்டு மாதத்தில் நடக்க இருக்கிறது. திருமணத்துக்குப் பிறகும் அனிஷா தொடர்ந்து நடிப்பார்’’ என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full