கார் தங்க காசு கொடுத்த உங்களுக்கு நேர்மை இருந்தால் - ஜெயிலர் படத்தை OTTயில் பார்த்துவிட்டு வன்னியரசு போட்ட பதிவு.

By subhashini · 12/9/2023

உங்களுக்கு நேர்மை இருக்கா? என்று ஜெயிலர் படத்தை வன்னி அரசு வெளுத்து வாங்கி இருக்கும் டீவ்ட் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மாஸ் காட்டி இருக்கிறது. அந்த வகையில் தற்போது இவர் ஜெயிலர் படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தை நெல்சன் இயக்கி இருக்கிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார். படத்தின் ஒவ்வொரும் பாடலும் பட்டைய கிளப்பி இருக்கிறது. மேலும், இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்னன், கன்னட ரெடின் கிங்ஸ்லி, வசந்த் ரவி, தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெரப், மோகன் லால், விநாயகம் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்து இருக்கிறார்கள். பல எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் கடந்த மாதம் 10 ஆம் தேதி ஜெயிலர் திரைப்படம் வெளியாகி இருக்கிறது.

ஜெயிலர் படம்:

இந்த படத்திற்கு யூடுயூப் விமர்சகர்களும், பிரபலங்கள், ரசிகர்கள் என எல்லோருமே பாசிட்டிவான கமெண்ட்களை கொடுத்து வருகிறார்கள். இந்த படத்தின் மூலம் நெல்சன் மீண்டும் கம்பேக் படத்தின் இருக்கிறார். இந்தப் படத்திற்காக நெல்சன் மெனக்கட்டிருப்பதை குறித்து பலருமே பாராட்டி இருந்தார்கள். மேலும், இந்த படம் இதுவரை 600 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதனை அடுத்து படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் அவர்கள் படத்தில் நடித்த நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் நெல்சன் ஆகியோரை நேரில் சந்தித்து தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார்.

படத்தின் வெற்றி விழா:

அது மட்டும் இல்லாமல் அவர்கள் அனைவருக்குமே காரை பரிசளித்திருக்கிறார். பின் ஜெயிலர் படத்தில் இருந்து தனக்கு வந்த லாபத்தில் மூலம் விருப்பப்பட்ட தொகையை அவர்களுக்கு காசோலையாகவும் கொடுத்து இருக்கிறார். பின் ஜெயிலர் படத்தின் வெற்றியடைந்து படக்குழுவினர் கொண்டாடி இருந்தார்கள். பிரபலங்கள், ரசிகர்கள் என பலருமே ஜெயிலர் படத்தை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். தற்போது இந்த படம் ஓடிடியிலும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

வன்னி அரசு டீவ்ட்:

இந்நிலையில் இந்த படத்தை பார்த்து விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த வன்னி அரசு டீவ்ட் ஒன்று போட்டிருக்கிறார் .அதில் அவர், சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படத்தை ஓடிடி தளத்தில் காண நேர்ந்தது. இப்படம் வெற்றி வெற்றி என தயாரிப்பு நிறுவனம் அறிவித்து கதாநாயகன்,இயக்குனர், இசை அமைப்பாளர் என மூன்று பேருக்கும் விலை உயர்ந்த காரை பரிசளித்தது.

ஜெயிலர் படம் குறித்து சொன்னதும்

இப்போது திரைப்படத்தில் பணியாற்றிய கலைஞர்களுக்கும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் தங்க காசு பரிசு அறிவித்துள்ளது. தயாரிப்பு நிறுவனத்துக்கு உண்மையிலேயே நேர்மை இருந்தால், சகிப்புத்தன்மையோடும் பொறுமையோடும் ஜெயிலர் திரைப்படம் பார்த்த ஒவ்வொருவருக்கும் தங்க காசு போன்ற ஏதாவது பரிசு அறிவித்திருக்க வேண்டும். எந்த வகையிலும் சுரண்டல் தடுக்கப்பட வேண்டும்.” என்று பதிவிட்டு இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full