சிம்புவின் 'வந்தா ராஜாவாதான் வருவேன் 'பொங்கலுக்கு வருவதில் சிக்கல்..!என்னனு பாருங்க..!

By Rajkumar · 8/12/2018

`காலா’ படத்துக்குப் பிறகு ரஜினி நடிக்கும் திரைப்படம் `பேட்ட. `கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில், பொங்கலுக்கு படம் ரிலீஸாக இருக்கிறது.மேலும், இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி இருந்தது.

அதே போல இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடித்து இருக்கும் விஸ்வாசம் திரைப்படமும் பொங்கலுக்கு வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.  இரண்டு பெரிய நடிகர்களின் திரைப்படம் வெளியாக உள்ளதால் நடிகர் சிம்பு-சுந்தர் சி திரைப்படம் பொங்கலுக்கு வெளிவருவது கடினம் என்று பேச்சுக்கள் கிளம்பியது.

நடிகர் சிம்பு தற்போது  தொடர்ந்து சுந்தர் சிவயுடன் ‘வந்தா ராஜா வாதான் வருவேன்’ என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படம் பொங்கல் அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கபட்டது. ஆனால், விஸ்வாசம் படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளை நெருங்கிவிட்டது. அதே போல பேட்ட படத்தின் படபிடிப்புகளும் மும்மரமாக நடைபெற்று வருகிறது.

ஆனால், சிம்புவின் படம் மட்டும் தற்போது தான் முதற்கட்ட படப்பிடிப்புகளையே முடித்துள்ளனர். எப்போது ஷூட்டிங் முடியும் எனத் தெரியாமல், இனிமேல் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளைத் தொடங்கி பொங்கலுக்குப் படத்தை வெளியிடுவது என்பது கஷ்டமான விஷயம். இதனால் சிம்பு பொங்கல் முடிந்து  ராஜாவாக தனியாக தான் வர வேண்டும் என்பது மட்டும் உறுதி என்கிறாரர்கள் சினிமா பஸ்ஸர்கள்  

Tamil Behind Talkies AMP · Quick view
View full