11 மணிக்கு வர வேண்டிய டீஸர் எங்கே..!ஆரம்பத்திலேயே தடங்களை சந்தித்த சிம்பு..!

By ·
கடந்த சில காலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த சிம்பு செக்க சிவந்த வானம் படத்திற்கு பின்னர் வரிசையாக படத்தில் நடித்து வருகிறார்.வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு, சுந்தர் சி இயக்கத்தில் ‘வந்தா ராஜாவா தான் வருவேன்’ போன்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக மெகா ஆகாஷ் நடித்துள்ளார். மேலும் இந்த படத்திற்கு ஹிப் ஆப் தமிழா இசையமைத்துள்ளார். இந்த படம் தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் சூப்பர் ஹிட் அடைந்த ‘Attarintiki Daredi’ என்ற படத்தின் ரீ மேக் ஆகும். வரும் பொங்கல் அன்று வெளியாக இருக்கும் இந்த படத்தின் டீஸர் நாளை (அக்டோபர் 1) வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் நேற்று அறிவித்தது. [embed]https://twitter.com/LycaProductions/status/1068740428940210176[/embed] இன்று (ஆக்டொபர் 1) காலை 11 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பாத்திருந்த நிலையில் தொழில் நுட்ப கோளாறால் இந்த படத்தின் டீஸர் வெளியாக தாமதமாகியுள்ளது என்று லைக்கா நிறுவனம் அறிவித்துள்ளது.
Tamil Behind Talkies AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை