அடித்ததில் எனக்கு எலும்பே கிராக் விற்றுச்சி, எங்கே இதை சொன்னால் பாலா அப்படி சொல்லிடுவாரோன்னு வெளியவே சொல்லால் - பிரபல நடிகை சொன்ன விஷயம்.

By subhashini · 4/3/2024

இயக்குனர் பாலா படத்தால் என் எலும்பு நொறுங்கி விட்டது என்று பிரபல நடிகை அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது சோசியல் மீடியா முழுவதும் வணங்கான் படம் குறித்த சர்ச்சை தான் அதிமாக பகிரப்பட்டு வருகிறது. தற்போது இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவாகி வரும் படம் வணங்கான். முதலில் இந்த படத்தில் கதாநாயகனாக சூர்யா கமிட் ஆகி இருந்தார். இந்த படத்தினுடைய சூட்டிங் ஒரு மாதம் நடைபெற்ற நிலையில் திடீரென்று இந்த படத்தில் இருந்து சூர்யா விலகி விட்டார்.

https://twitter.com/VCDtweets/status/1762675285726581151?ref_src=twsrc%5Etfw

அதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. ஆனால், இது குறித்து பல சர்ச்சைகள் எழுந்தது. இந்த படத்தில் அருண் விஜய், ரோஷினி நடித்திருக்கிறார்கள். ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். சமீபத்தில் தான் இந்த படத்தினுடைய டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நடைபெற்று வரவேற்பு பெற்று இருக்கிறது. கூடிய விரைவில் இந்த படம் வெளிவர இருப்பதாக கூறப்படுகிறது. இப்படி இருக்கும் நிலையில் ஏற்கனவே வணங்கான் படத்தில் இருந்து நடிகை மமிதா பைஜு வெளியேறி இருந்தார். இது குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகை மமிதா பைஜு, வணங்கான் படத்தில் முதலில் நான் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தேன்.

https://twitter.com/VCDtweets/status/1762675285726581151?ref_src=twsrc%5Etfw

நடிகை மமிதா பைஜு பேட்டி:

அந்த படத்தில் ஒரு பாடல் இருந்தது. அதற்கு பாடிக்கொண்டே ஆட வேண்டும். அப்போது நான் அதை கற்றுக் கொண்டிருந்தேன். திடீரென்று என்னை இயக்குனர் பாலா செய்து காட்டுங்கள் என்று கூறினார். அப்போது நான் தயாராகவில்லை. இதனால் பதற்றம் ஆகிவிட்டேன். அந்த சமயம் எனக்கு பின்னாடி இருந்த பாலா என் தோள் பட்டையில் அடித்தார். பின் அவர், நான் அவ்வபோது திட்டுவேன் பெரிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள் என்று ஷெட்டிலிலேயே சொல்லிவிட்டார். சில சமயங்களில் அவரிடம் நான் அடி வாங்கி இருக்கிறேன் என்று கூறியிருந்தார். இப்படி இவர் அளித்திருந்த பேட்டி இணையத்தில் படு வைரலானதை தொடர்ந்து பலருமே பாலாவை விமர்சித்து பதிவிட்டார்கள்.

மமிதா பைஜு கொடுத்த விளக்கம்:

பின் இது தொடர்பாக நடிகை மமிதா பைஜு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மீண்டும் ஒரு விளக்கப்பதிவை போட்டிருந்தார். அதில் அவர், என்னுடைய தமிழ் சினிமா அனுபவம் குறித்து இணையத்தில் வரும் பல செய்திகள் ஆதாரம் அற்றவை. ஒரு வருடத்திற்கும் மேலாக பாலா சாருடன் வேலை பார்த்து உள்ளேன். ஒரு சிறந்த நடிகையாக மாறுவதற்கு அவர் என்னை வழிநடத்தினார். அந்த படத்தில் பணிபுரிந்த போது மனரீதியாகவோ, உடல் ரீதியாகவோ எந்தவித தவறான அனுபவங்களையும் நான் சந்திக்கவில்லை என்பதை நான் இந்த தருணத்தில் மீண்டும் வலியுறுத்திக் கொள்கிறேன். கமிட்மெண்டுகள் காரணமாகவே அந்த படத்தில் இருந்து நான் விலகி இருக்கிறேன்.

இயக்குனர் பாலா குறித்த சர்ச்சை:

தேவையில்லாத வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று கூறியிருந்தார். இருந்தாலும், இயக்குனர் பாலா குறித்து சோசியல் மீடியாவில் பலவிதமான சர்ச்சைகள் எழுந்த வண்ணம் இருக்கிறது. இந்த நிலையில் பாலா இயக்கத்தில் வெளிவந்த தாரை தப்பட்டை படத்தில் வரலட்சுமிக்கு நடந்த சம்பவம் தான் தற்போது வெளியாகி இருக்கிறது. அதாவது, வரலட்சுமி கதாநாயகியாக தாரை தப்பட்டை படத்தில் நடித்திருந்தார். அதில் ஒரு காட்சியில் வில்லன் ஆர் கே சுரேஷ் வரலட்சுமியை அடித்து மிதிப்பது போல வரும்.

ஷூட்டிங்கில் வரலட்சுமிக்கு நடந்தது:

மேலும், படப்பிடிப்பு போது ஆர் கே சுரேஷ் வரலட்சுமியை மிதிக்கும் போது அவருக்கு போனில் கிராக் ஏற்பட்டது. அந்த சத்தம் கேட்டும் எலும்பில் அடிபட்டும் தொடர்ந்து வரலட்சுமி நடித்திருந்தார். காரணம், நிறுத்திவிட்டால் திரும்ப பாலா நடிக்க சொல்வார் என்ற பயத்திலேயே வரலட்சுமி கட் சொல்லாமல் நடித்துக் கொண்டிருந்தார். அதற்கு பிறகு தான் பாலாவிடம் சொல்லி மருத்துவமனைக்கு வரலட்சுமியை அழைத்துச் சென்றார்கள். அங்கு அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்தபோது தான் எலும்பு நொறுங்கி இருப்பது தெரியவந்தது. இதை சமீபத்தில் ஒரு பேட்டியிலேயே வரலட்சுமி கூறியிருந்தார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full