24வயது பெண்ணுடன் திருமணம்,15வயதில் ஒரு மகள் - வரலக்ஷ்மியின் வருங்கால கணவர் குறித்து வெளியான உண்மைகள்.

By Rajkumar · 3/3/2024

வரலக்ஷ்மியின் வருங்கால கணவரின் மனைவி மற்றும் மகள் குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்பவர் வரலக்ஷ்மி. இவர் நடிகர் சரத்குமாரின் மகள் ஆவார். தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்த ‘போடா போடி' என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார் வரலக்ஷ்மி. அதன் பின்னர் இவர் பல்வேறு படத்தில் நடித்து இருந்தார்.

மேலும், இவருடைய நடிப்பில் இந்த கடந்த தமிழில் வி3, கன்னித்தீவு, கொன்றால் பாவம், மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் போன்ற படங்கள் வெளியாகி இருக்கிறது. தெலுங்கில் வீரசிம்ஹா ரெட்டி, மைக்கேல், ஏஜென்ட் கோட்டபொம்மாளி போன்ற படங்கள் வெளியாகி இருக்கிறது. ஆனால், இந்த படங்கள் எதுவுமே இவருக்கு சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பெயரை எடுத்து தரவில்லை. அடுத்த வருடம் இவர் பல படங்களில் கமிட் ஆகி இருப்பதாக கூறப்படுகிறது.

இப்படி ஒரு நிலையில் வரலக்ஷ்மிக்கு திடீர் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று இருக்கிறது. நிக்கோலை சச்தேவ் என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று இருக்கிறது. கடந்த மார்ச் 1ஆம் தேதி, நடந்த இந்த நிகழ்வில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டு இருக்கின்றனர். வரலக்ஷ்மியை நிச்சயம் முடித்த நிக்கோலை சச்தேவ் ஒரு gallarist , இவர் Gallery 7 என்ற கண்காட்சி நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

வரலக்ஷ்மியையும் நிக்கோலை சச்தேவ்வும் 14 ஆண்டுகள் பழகி வந்துள்ளனர். தற்போது இரு வீட்டார் சம்மத்ததுடன் மீகவும் எளிமையாக நிச்சயதார்தம் முடிந்துள்ளது. மேலும், இவர் திருமணம் இந்த ஆண்டே நடைபெற இருப்பதாவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் வரலக்ஷ்மி திருமணம் செய்ய இருக்கும் நிக்கோலைக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இருக்கும் தகவல் வெளியாகி இருக்கிறது.

இவருக்கு ஏற்கனவே கவிதா என்ற மாடல் அழகியுடன் திருமணம் ஆகி 15 வயதில் ஒரு மகளே இருக்கின்றார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. இவரது மனைவி கவிதா Mrs Gladrags 2010 என்ற பட்டத்தையும் கலிபோர்னியாவில் 2007ஆம் ஆண்டு Mrs Globe 2011 என்ற அழகி போட்டியில் இரண்டாம் இடத்தையும் பிடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் தனது 24 வயதில் நிக்கோலையை திருமணம் செய்துள்ளார்.

முன்னாள் மனைவி கவிதா மற்றும் மகள் காஷாவுடன்

2009 ஆம் ஆண்டு திருமணம் ஆன அடுத்த ஆண்டே இவருக்கு காஷா என்ற மகளும் பிறந்துள்ளார். இவரது மகள் இளம் வயது வலு தூக்கும் போட்டிகளில் கலந்துகொண்டு பல பதக்கங்களை வென்று இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் கடந்த சில சில ஆண்டுகளுக்கு முன்னரே கவிதாவை பிரிந்து இருக்கிறார் நிக்கோலை. இதனை தொடர்ந்தே இவருக்கு வரலக்ஷ்மியுடன் பழக்கம் ஏற்பாடு இருக்கிறது.

behindtalkies AMP · Quick view
View full