ஐட்டம் பாட்டுக்கு ஆட கூப்பிட்ட வரலட்சுமி, திரிஷா அன்று கூறியுள்ள காரணம் - ஆனா இன்னிக்கு தளபதிகாக

By subhashini · 9/9/2024

தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்து இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் வெளியான நடிகர் விஜயின் ‘கோட்’ படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி இருக்கிறார். இந்த இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்து இருக்கிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரி நடித்துள்ளார்.

பின் இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரசாந்த், அஜ்மல், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி, யோகி பாபு என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள். மேலும், ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படம் சுமார் 400 கோடி பட்ஜெட்டில் உருவாக்கி உள்ளார்கள். உலகம் முழுவதும் ‘கோட்’ படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

கோட் படம்:

இந்த படத்தை பார்த்து பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி இருக்கிறார்கள். கோட் படம் வசூல் ரீதியாக நல்ல சாதனை சேர்ந்தாலும் கலவையான விமர்சனத்தை பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடிகை திரிஷா நடனமாடியிருக்கிறார். இதற்கு முன்பே நடிகை திரிஷா- விஜய் இருவரும் இணைந்து நடித்திருக்கிறார்கள்.

த்ரிஷா நடனம்:

கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி என பல படங்களில் இணைந்து நடித்து இருக்கிறார்கள். கடைசியாக விஜய் நடிப்பில் வெளியாகி இருந்த லியோ படத்திலும் திரிஷா கதாநாயகி நடித்து இருந்தார். தற்போது கோட் படத்தில் மட்ட என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருக்கிறார். விஜய்- திரிஷா காம்பினேஷனில் வெளிவந்த இந்த பாடல் நல்ல வரவேற்பு பெற்றிருக்கிறது. அதோடு இதுவரை நடிகை திரிஷா ஒரு படலுக்கு மட்டும் நடனம் ஆடியதே கிடையாது.

View this post on Instagram

A post shared by Sillarai Siruvar (@sillaraisiruvaroffl)

த்ரிஷா வீடியோ:

இது பலருக்கு ஆச்சரியம் தான். இந்நிலையில் இது தொடர்பாக வெளியான வீடியோவில், சில வருடங்களுக்கு முன்பு பேட்டியில் வரலட்சுமி, திரிஷாவிற்கு போன் செய்து, நாம் இருவரும் சேர்ந்து ஒரு பாடலுக்கு நடனம் ஆடலாமா? என்று கேட்டிருக்கிறார். அதற்கு திரிஷா, ஐட்டம் பாடலா என்று கேட்டு இருக்கிறார். அதற்கு வரலட்சுமி, இல்லை நாம் இருவரும் செய்து கரகாட்டம் போன்ற ஒரு பாடலுக்கு நடனம் ஆடலாம் என்று சொன்னவுடன், சரி ஆடலாம். நான் இந்த மாதிரி ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியது கிடையாது.

நெட்டிசன் ட்ரோல்:

எனக்கு விருப்பம் இல்லை. கேமியோ தான் பண்ணி இருக்கிறேன் என்று த்ரிஷா சொல்லியிருக்கிறார். இப்படி திரிஷா பேசியிருக்கும் வீடியோவை நெட்டிசன்கள் டேக் செய்து, ஐட்டம் பாடலுக்கு நடனம் ஆட முடியாது என்று சொல்லிவிட்டு விஜயுடன் சேர்ந்து மட்ட பாடலுக்கு மட்டும் எப்படி இவர் ஆடி இருக்கிறார்? விஜய்க்காக கொள்கையை திரிஷா மறந்து விட்டாரா? என்றெல்லாம் கிண்டல் செய்தும் கேள்வி எழுப்பியும் வருகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full