உடல் எடையை படு ஒல்லியாக குறைத்த வரலக்ஷ்மி.! அவரே வெளியிட்ட புகைப்படம்.!

By Rajkumar · 4/6/2019

தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான சரத்குமாரின் மகள் நடிகை வரலட்சுமி சரத்குமார். தமிழில் சிம்பு நடித்த 'போடா போடி' படத்தில் அறிமுகமான இவர் அதன்பின்னர் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படத்தில் இவரது கதாபாத்திரம் அனைவராலும் வெகுவாக பாராட்டப்பட்டது.

https://twitter.com/varusarath/status/1135877322022608896

சமீபத்தில் இவரது நடிப்பில் நீயா 2 திரைப்படமும் வெளியாகி உள்ளது. இந்த படங்களைத் தொடர்ந்து தற்போது இவர் 'சேசிங்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார் பைக் ரைடர் ஆக நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி இருந்தது.

இந்த படத்திற்காக வரலட்சுமி சரத் குமார் ஸ்டண்ட் காட்சி ஒன்றில் நடித்துள்ளார். அதில் ஹீரோவை போல ஒரு நபரை தனது காலால் சுழட்டி அடிக்கிறார் வரலட்சுமி சரத்குமார். இந்த வீடியோவை கண்ட பலரும் வரலட்சுமி சரத்குமார் இந்த முயற்சியினை வெகுவாக பாராட்டி வருகின்றனர் .மேலும், 'சேசிங்' படத்திற்கு தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் வரலட்சுமி சமீப காலமாக உடல் எடை அதிகமாக இருக்க, அவரால் முன்பு போல் நடனமாட முடியவில்லை என்று தான் ரசிகர்கள் கூறினார்கள். ஆனால், அனைவருக்கும் தற்போது பதிலடி தரும் வகையில் தன் உடல் எடையை குறைத்து வருகின்றார்.

behindtalkies AMP · Quick view
View full