ஐபிஎல் Final டிக்கெட்டுன் போஸ் கொடுத்த வரலக்ஷ்மி சரத்குமார் - டிக்கெட் விலையை கண்டா ஷாக் ஆகிடுவீங்க.

By Ajju · 29/5/2023

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்- வரலட்சுமி சரத்குமாரின் ஐபிஎல் டிக்கெட் விலை குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. ஐபிஎல் 2023 லீக் போட்டிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி vs சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் எதிர்கொள்ள இருந்தது. ஆனால், போட்டி தொடங்குவதற்கு முன்னரே பலத்த மழையானது அகமதாபாத்தில் பெய்ய தொடங்கியது.

இதனால் போட்டியானது தாமதமாக தொடங்கும் என்ற அறிவிப்பே வழங்கப்பட்டது. ஆனால், தொடர்ந்து மழையானது பெய்ய தொடங்கியனதன் காரணமாகவும், மைதானம் அதிக ஈரமாக இருப்பதினாலும் சென்னை vs குஜராத் இடையே நடக்க இருந்த போட்டியானது நிறுத்தப்பட்டது. மேலும், நிறுத்தப்பட்ட இந்த போட்டியானது இன்று (29/05/2023) இரவு 7.30 மணியளவில் மீண்டும் நடைபெறும் என்று தகவல் கிடைத்துள்ளது.

ஐபிஎல் 2023 லீக் போட்டி:

இதனை IPL ட்விட்டர் பக்கமே அதிகார பூர்வமாக தெரிவித்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் போட்டி இன்று நடப்பதனால் ரசிகர்கள் டிக்கெட்டுகளை பத்திரமாக வைத்துக்கொள்ள நேற்றே போட்டி நிறுத்தப்பட போது இணையதளம் மூலமாகவும், மைதானத்திலும் ஒளிபரப்பப்பட்டது. ஒருவேளை நேற்று போட்டி நடந்து சென்னை அணி வெற்றி பெற்றிருந்தால் எம்.எஸ். தோனி கேப்டனாக சென்னை அணிக்காக தனது ஐந்தாவது ஐபிஎல் பட்டத்தை வென்று இருக்கும்.

சென்னை vs குஜராத் போட்டி:

அதோடு இறுதியில் ரோஹித் ஷர்மாவின் சாதனையை சமன் செய்ய முடியும் அல்லது குஜராத் அணி வென்றால் இவ்விரு அணிகளை தவிர்த்து மூன்றாவது பெரிய அணியாக குஜராத் டைட்டன்ஸ் உருவெடுக்கும். சென்னையை பொறுத்தவரை டெவோன் கான்வே மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் குஜராத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பார்கள். அவர்கள் இறுதியில் குவாலிஃபையர் 1 இல் குஜராத் அணியியை சொந்த மண்ணில் வீழ்த்தி வெற்றி பெற்றனர் .

போட்டியை பார்க்க வந்த பிரபலங்கள்:

மேலும், இந்த போட்டியானது இறுதி வரை இதய துடிப்பை அதிக படுத்தும் போட்டியாகவே இருக்கும் என்பதில் கண்டிப்பாக சந்தேகமே கிடையாது. அப்படிப்பட்ட நிலையில் தான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் வரலட்சிமி சரத்குமார் இருவரும் குஜராத் vs சென்னை அணி போட்டியை காண வந்திருந்தார்கள். மேலும், மைத்தனத்தில் இருந்து எடுத்த புகைப்படங்களையும் சோசியல் மீடியாவில் பகிர்ந்திருந்தனர்.

டிக்கெட் விலை:

அவர்கள் இருவரும் பகிர்ந்த ஒரு புகைப்படத்தில் நடிகை வரலட்சுமி கையில் டிக்கெட்டுகளை வைத்தவாறு நின்றிருந்தார். ஆனால், இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் வரலட்சுமி கையில் வைத்திருந்த டிக்கெட்டின் விலை ரூபாய் 50,000 என இருந்தது. இதனை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் அதிர்ந்து போனார்கள். அந்த புகைப்படம் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full