என்னுடைய உயிர் சினிமா தான், ஆனா திருமணத்திற்கு பிறகு நடிப்பேனானு கேட்டா - செய்தியாளர்கள் சந்திப்பில் வரலட்சுமி சரத்குமார்
பிரபல நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது திருமணத்திற்கு பிறகு கணவருடன் பத்திரிக்கையாளர்களை சந்தித்த செய்தி தான் தற்போது வரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்பவர் வரலட்சுமி. இவர் நடிகர் சரத்குமாரின் மகள் ஆவார். தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்த 'போடா போடி' என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார் வரலட்சுமி. அதன்பின்னர் பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார்.
இந்நிலையில் நடிகை வரலட்சுமி சரத்குமார், மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரான நிக்கோலை சச்தேவ் என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர்களது திருமணம் தாய்லாந்தில் பிரம்மாண்டமாக சமீபத்தில் நடந்து முடிந்தது. அதற்குப்பின் சென்னையில் நடந்த திருமண வரவேற்பில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர். வரலட்சுமி கணவரான நிக்கோலாய் சச்தேவ் மும்பையில் ஹார்ட் கேலரி நடத்தி வருகிறார். கிட்டத்தட்ட 14 வருடங்கள் இருவரும் பழகி வந்த நிலையில், பெற்றோர் சம்மதத்துடன் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
செய்தியாளர்கள் சந்திப்பு:
அதைத்தொடர்ந்து இன்று நடிகை வரலட்சுமி சரத்குமார், தனது கணவர் மற்றும் தந்தையுடன் செய்தியாளர்களை சந்தித்தார். அதில் பேசிய வரலட்சுமி, இங்கு வந்திருக்கும் எல்லோருக்கும் நன்றி. எனது கல்யாணத்தின் போது உங்களை சந்திக்க எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இப்போதுதான் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. என்னுடைய காதல் நிக்கோலாய் சச்தேவ் தான். ஆனால், என்னுடைய உயிர் சினிமா என்பது உங்கள் எல்லாருக்கும் தெரியும். நீங்கள் கல்யாணம் செய்து கொண்டு நடிப்பீர்களா என்று நிறைய பேர் என்னிடம் கேட்டிருந்தார்கள்.
https://www.youtube.com/watch?v=b67oIxPhhJY
தொர்ந்து ஆதரவு தரவேண்டும்:
எனது கணவர் பேசியதிலிருந்து நீங்கள் அதற்கான விடையை தெரிந்து கொண்டிருப்பீர்கள். அவர் என்னை மட்டும் காதலிக்கவில்லை என்னுடைய சினிமாவையும் தான். நான் நிச்சயமாக தொடர்ந்து நடிப்பேன். நீங்கள் எனக்கு எப்போதும் ஆதரவு கொடுத்துக் கொண்டே இருக்கிறீர்கள். மேலும் என்னை பற்றி எப்போதும் நல்லவிதமாக பேசிக் கொண்டிருக்கிறீர்கள். நான் என்ன படம் நடித்தாலும் அதற்கான பாராட்டை நீங்கள் கொடுத்திருக்கிறீர்கள். இந்த உறவு இன்னும் தொடர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று பேசி உள்ளார்.
தாய்லாந்து திருமணம்:
நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு, மும்பை கேலரிஸ் நிக்கோலை சச்சு தேவுக்கும் கடந்த ஜூலை 2 ஆம் தேதி தான் திருமணம் நடந்து முடிந்தது. இவர்களது திருமணம் தாய்லாந்தில் கிராபியில் உள்ள அழகிய கடற்கரை ரிசார்ட்டில் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்றது. காலை தென்னிந்திய பாரம்பரிய முறைப்படி திருமணம் நடந்தது. அதனைத் தொடர்ந்து மாலையில் திருமண உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர். பின்பு கடற்கரையில் அழகான ரொமான்டிக் கொண்டாட்டமும் நடைபெற்றது.
சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி:
திருமணத்தில் நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். அதற்குப் பிறகு, ஜூலை 3 ஆம் தேதி இவர்களின் திருமண வரவேற்பு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதில் சினிமா பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு மணமக்களான வரலட்சுமி சரத்குமார் மற்றும் நிக்கோலாய் சச்தேவ் தம்பதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் நடிகர் சரத்குமார், மணமக்களுடன் பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறேன் என்று அறிவித்திருந்த நிலையில் இன்று அந்த சந்திப்பு நடந்தது குறிப்பிடத்தக்கது.