சின்ன வயதிலே இந்த கொடுமை எல்லாம் நான் அனுபவித்தேன் - மேடையில் கதறி அழுத நடிகை வரலட்சுமி
சிறு வயதில் தான் அனுபவித்த கொடுமைகளைப் பற்றி டான்ஸ் ஜோடி டான்ஸ் 3 நிகழ்ச்சியில் வரலட்சுமி சரத்குமார் கூறியிருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்பவர் வரலக்ஷ்மி. இவர் நடிகர் சரத்குமாரின் மகள் ஆவார். தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்த ‘போடா போடி' என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார் வரலக்ஷ்மி.
அதன் பின்னர் இவர் பல்வேறு படத்தில் நடித்து இருந்தார். மேலும், இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஆனால், தமிழில் இவர் நடித்த வி3, கன்னித்தீவு, கொன்றால் பாவம், மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் போன்ற படங்கள் பெரிதாக வரவேற்கப்படவில்லை. தெலுங்கில் நரசிம்மா ரெட்டி, மைக்கேல், ஏஜென்ட் கோட்டபொம்மாளி போன்ற படங்களும் இவருக்கு சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பெயரை எடுத்து தரவில்லை.
வரலக்ஷ்மி குறித்த தகவல்:
இருந்தாலும் இவர் பல படங்களில் கமிட் ஆகி நடிக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் சுந்தர் சி இயக்கத்தில் விஷால், சந்தானம் அஞ்சலி, வரலட்சுமி, மணிவண்ணன், மனோ பாலா உட்பட பல நடிகர்கள் நடிப்பில் வெளியாகி இருந்த ‘மதகஜராஜா’ படம் மிக பெரிய வரவேற்பை பெற்றது. கடந்த 2013 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக வேண்டிய படம் சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வருட பொங்கலை முன்னிட்டு வெளியாகி இருந்தது.
டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீ லோடட் 3:
அது மட்டும் இல்லாமல் தற்போது வரலக்ஷ்மி சின்னத்திரையிலும் களம் இறங்கி இருக்கிறார். அதாவது, ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீ லோடட் 3 நிகழ்ச்சியில் நடுவராக வரலட்சுமி சரத்குமார் இருக்கிறார். இவருடன் சினேகா, டான்ஸ் மாஸ்டர் பாபா பாஸ்கர் ஆகியோர் நடுவர்களாக இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. 24 போட்டியாளர்களுடன் இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. அதில் பல போட்டியாளர்கள் நடுவர்கள் மத்தியில் மட்டும் இல்லாமல் மக்கள் மத்தியிலும் பிரபலமாக இருக்கிறார்கள்.
https://www.youtube.com/watch?v=Qz2VlWH_cEg
நிகழ்ச்சியில் வரலக்ஷ்மி சொன்னது:
இந்த வாரம் இந்த நிகழ்ச்சியில் என்றென்றும் 80ஸ் சுற்றி நடைபெறவிருக்கிறது. தற்போது அது தொடர்பான வெளியான ப்ரோமோவில், போட்டியாளர் ஒருவர் நடனம் ஆடி முடித்து தன்னுடைய வாழ்க்கையில் அனுபவித்த கஷ்டங்களை பற்றி கண்ணீர் மல்க பேசி இருக்கிறார். அப்போது வரலட்சுமி சரத்குமார், நீ அனுபவித்த கஷ்டத்தை நானும் என் வாழ்க்கையில் அனுபவித்திருக்கிறேன். என்னுடைய அப்பா, அம்மா இருவருமே வேலைக்கு செல்பவர்கள்.
சிறுவயதில் பட்ட கஷ்டங்கள்:
என்னை மற்றவர்களின் வீட்டில் விட்டு பார்த்துக் கொள்ள சொல்வார்கள். அப்போது சின்ன வயதில் என்னை 5 லிருந்து 6 பேர் பாலியல் தொந்தரவு செய்திருக்கிறார்கள். நிறைய கஷ்டங்களை கடந்துதான் வந்திருக்கிறேன் என்று ரொம்ப எமோஷனலாக அழுது பேசி இருக்கிறார். தற்போது இவர் பேசியிருக்கும் வீடியோ தான் இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. கடந்த ஆண்டு வரலக்ஷ்மி அவர்கள் நிக்கோலை சச்தேவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.