துணிவு ஒரு பக்கம், இதுவும் ஒரு பக்கம் - வாரிசு படத்தால் சிக்கித்தவிக்கும் தயாரிப்பாளர் தில் ராஜு

By Rajkumar · 31/10/2022

விஜய்யின் வாரிசு படத்தால் பெரிய சிக்கலில் தயாரிப்பாளர் தில் ராஜு மாட்டிக் கொண்டிருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், பாக்ஸ் ஆபிஸிலும் இடம் பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் விஜய் அவர்கள் நெல்சன் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது.

பல எதிர்பார்ப்புடன் வெளிவந்த பீஸ்ட் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. அதோடு பெரிய அளவிலும் இந்த படம் வசூல் செய்யவில்லை. தற்போது பீஸ்ட் படத்தை தொடர்ந்து இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் விஜய் நடிக்கிறார். வம்சி தெலுங்கு சினிமா உலகில் முன்னணி இயக்குனர் ஆவார். இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இயக்குனர் வம்சி- தயாரிப்பாளர் தில் ராஜு ஆகிய இருவரும் இணைந்து பல படங்களில் பணியாற்றி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வாரிசு படம்:

மேலும், வாரிசு படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர், பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு என்று பலர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இந்த படத்திற்கு கார்த்திக் பழனி ஒளிப்பதிவாளராக இருக்கிறார். தற்போது படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. மேலும், இந்த படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி இருக்கிறது.

படம் குறித்த தகவல்:

அதேபோல் சமீபத்தில் வாரிசு படத்தின் சில எக்ஸ்குளுசீவ் புகைப்படங்களை படக்குழு வெளியிட்டு இருக்கிறது. இந்த படத்தின் முதல் பாடல் வெளிவர இருக்கிறது. இந்நிலையில் விஜய்யின் வாரிசு படத்தால் பெரிய சிக்கலில் தயாரிப்பாளர் தில் ராஜு மாட்டிக் கொண்டிருக்கும் தகவல் தற்போது வைரலாகி வருகிறது. தயாரிப்பாளர் தில் ராஜு தெலுங்கு திரையுலகில் மிகப் பிரபலமான தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர் ஆவார். இதுவரை இவர் தயாரிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. தற்போது இவர் தயாரிக்கும் வாரிசு திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.

பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் படங்கள்:

அதே பொங்கல் பண்டிகைக்கு பல முன்னணி நடிகர்களின் படங்களும் வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. தமிழில் வாரிசு படத்தின் போட்டியாக அஜித்தின் துணிவு படம் வெளியாக இருக்கிறது. இதனால் தமிழ்நாட்டில் விஜய் மற்றும் அஜித் படங்களுக்கு இடையே மிகப் பெரிய மோதல் இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. தெலுங்கு திரை உலகில் இதைவிட நிலைமை மோசமாக இருக்கிறது. அதாவது பொங்கல் பண்டிகை ஒட்டி தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களான சிரஞ்சீவியின் வால்டர் வீரய்யா, பாலகிருஷ்ணாவின் வீர சிம்மா ரெட்டி போன்ற படங்கள் வெளியாக இருக்கிறது. இப்படி மூன்று முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாக இருக்கிறது.

தயாரிப்பாளர் தில் ராஜுக்கு வந்த சோதனை:

இந்த நிலையில் வாரிசு படத்திற்கு திரையரங்குகளை ஒதுக்குவதும், படத்தை வாங்குபவர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் மிகப்பெரிய வேலையாகவே இருக்கிறது. இந்த மூன்று பெரிய ஹீரோக்களின் படங்கள் வெளியாகுவதால் விஜய்யின் வாரிசு படத்திற்கு முன்னுரை கிடைக்காது என்றும், தெலுங்கு திரை உலகில் வாரிசு படத்தின் மீது அந்த அளவிற்கு எதிர்பார்ப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது. ஆனால், தயாரிப்பாளர் தில் ராஜு தனது செல்வாக்கை பயன்படுத்தி வாரிசு படத்தை அதிக திரையரங்களில் வெளியிட்டாலும் மூன்று முன்னணி நடிகர்களின் படத்திற்கு ரசிகர்கள் காட்டும் ஆர்வம் வாரிசு படத்திற்கு இருக்காது என்று கூறப்படுகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full