வாரிசு trailer வர தாமதமாவதற்கு இவர் தான் காரணமா ? இன்னும் 10 நாள்ல படமே வந்துடும்.

By Manikandan · 2/1/2023

புத்தாண்டு நேற்று தொடங்கிய நிலையில் இன்னமும் பொங்கல் திருவிழாவிற்கு வெறும் இரண்டு வாரங்கள் மட்டுமே இருக்கின்றது. இந்த நிலையில் ஜில்லா மற்றும் வீரம் வெளியாகி கிட்டத்தட்ட 7 வருடங்கள் கழித்து மீண்டும் தமிழ் சினிமாவின் இரு பெரும் நடிகர்கள் ஒரே நேரத்தில் மோத இருக்கின்றன. அதாவது விஜய் நடித்த வாரிசு படமும், அஜித் நடித்த துணிவு படமும் ஒரே நேரத்தில் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

இந்த நிலையில் இரு படங்களின் பாடல்களும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இப்படியிருக்கும் போது நேற்று முன்தினம் டிசம்பர் 31ஆம் நாள் துணிவு படத்தின் ட்ரைலர் நேற்று வெளியாகி அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் துணிவு படத்தின் ட்ரைலரில் விஜய் முன்னதாக நடித்த இயக்குனர் நெல்சன் இயக்கிய பீஸ்ட் படத்தை போல இருக்கிறது என்று விமர்சனங்களும் எழுந்த வண்ணம் இருக்கிறது.

இப்படி ஒரு பக்கம் அஜித் நடித்த துணிவு படத்தின் ட்ரைலர் வெளியாகிய நிலையில் விஜய்யின் வாரிசு படத்தின் ட்ரைலர் 2 ஆம் தேதி வெளியாகும் என கூறப்பட்டிருந்தது. இதனால் விஜய் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த நிலையில் வாரிசு பட குழுவினர் போஸ்டர் ஒன்றை மட்டுமே பகிர்ந்து புத்தாண்டு வாழ்த்துக்களை மட்டுமே தெரிவித்திருந்தது. இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.

இந்த நிலையில் தான் விஜய் நடித்திருக்கும் வாரிசு படத்தின் ட்ரைலர் வரும் 4ஆம் தேதி வெளியாகும் என தகவல் சோசியல் மீடியாவில் பரவலாக பேசப்படுகிறது. இதற்கு காரணம் படத்தின் சென்சார் தான் என்று கூறப்படுகிறது. அதாவது வாரிசு படத்தில் மாற்றியமைக்க வேண்டிய காட்சிகளை திருத்தம் செய்வதற்கு நேரம் ஆனதினாலும், அதனால் படத்தை முடித்து சென்சார் செல்வதற்கு தாமதமான காரணத்தினால் தான் வாரிசு படத்தின் ட்ரைலர் இன்னமும் வரவில்லை என்று கூறப்படுகிறது.

வாரிசு மற்றும் துணிவு என இரு பெரு படங்களும் ஒன்றாக வெளியாவதினால் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் துணிவு படம் 22 மணிநேரம் 23 நிமிடங்களும், வாரிசு 2 மணிநேரம் 48 நிமிடங்களும் இருக்கும் என்று தகவல் வெளியாகிய நிலையில் வாரிசு படத்தின் நிறைவு வேலைகள் முடிந்து சென்சார் வேலைகள் இன்னமும் முடிவடைய வில்லை என்று கூறப்படுகிறது. பொங்கலுக்கு சில நாட்களே இருக்கும் நிலையில் விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full