'வருஷமெல்லாம் வசந்தம்' பட இயக்குனர் எடுத்த விபரீத முடிவு. வாழ்க்கையை முடித்துக்கொண்ட சோகம்
வருஷமெல்லாம் வசந்தம் பட இயக்குனர் தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கும் சம்பவம் தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையாகி இருக்கிறது. தமிழ் சினிமா உலகின் இயக்கத்தின் இமயம் பாரதிராஜா. இவர் படைப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. மேலும், இவரின் மகன் தான் மனோஜ். இவரும் பல படங்களில் நடித்து இருக்கிறார்.
அந்த வகையில் நடிகர் மனோஜ் நடிப்பில் கடந்த 2002-ம் ஆண்டு வெளியாகி இருந்த படம் 'வருஷமெல்லாம் வசந்தம்'. இந்த படத்தில் குணால், அனிதா, எம்.என்.நம்பியார், சுகுமாரி உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இந்த படத்திற்கு சிர்பி இசையமைத்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
ரவிசங்கர் திரைப்பயணம்:
அதுமட்டுமில்லாமல் இந்த படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தவர் ரவிசங்கர். இவர் தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் இயக்குனர் விக்ரமன் இடம் உதவி இயக்குனராக பணியாற்றி இருந்தார். அதற்குப் பிறகுதான் இவர் 'வருஷமெல்லாம் வசந்தம்' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் இயக்குனராக அவதாரம் எடுத்தார்.
ரவிசங்கர் இயக்கிய படம்:
இதுதான் இவருடைய முதல் மட்டும் கடைசியும் படம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், வருஷமெல்லாம் வசந்தம் படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள் அனைத்துக்குமே பாடலாசிரியரும் இவர் தான். இவர் விக்ரமன் இடம் பணியாற்றி இருந்தபோது விக்ரமன் இயக்கிய 'சூர்ய வம்சம்' படத்தில் இடம்பெற்ற 'ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ' என்ற பாடலையும் இவர் தான் எழுதியிருந்தார். இந்த பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டு தான் வருகிறது.
ரவிசங்கர் மறைவு:
அதற்குப் பின் இவர் எந்த படத்தையும் இயக்கவில்லை. அதுமட்டுமில்லாமல் இவர் என்ன ஆனார் என்று கூட தெரியவில்லை. இவர் திருமணமும் செய்து கொள்ளவில்லை. சென்னை கே.கே நகர் பகுதியில் தான் ஒரு சிறிய வீட்டில் இவர் வசித்து வந்திருந்தார். இப்படி இருக்கும் நிலையில் இவர் தன்னுடைய அறையில் நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கும் சம்பவம் தான் தற்போது சோசியல் மீடியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ரவிசங்கர் மறைவுக்கு இரங்கல்:
தற்போது இவருக்கு 63 வயது தான். இவருடைய இறப்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். மேலும் தனிமை, சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்காதது தான் இவர் தற்கொலை செய்து கொண்டதற்கு காரணமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது இவருடைய மறைவிற்கு திரை பிரபலங்கள் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.