சினிமாவைப் பொருத்தவரை உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் நடிகர் நடிகைகள் மட்டும்தான் சொகுசான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள். ஆனால், துணை நடிகர்களாக இருக்கும் எத்தனையோ, மக்களுக்கு பரிட்சயமான நடிகர்களின் வாழ்க்கை எப்போதும் சோகத்தில் தான் முடிகிறது. அந்த வகையில் தமிழில் எண்ணற்ற படங்களில் நடித்த நடிகர் தவசியின் நிலைமையும் தற்போது பரிதாபத்திற்கு உள்ளாகியிருக்கிறது. இவரை பார்த்ததுமே நம் நினைவிற்கு முதலில் வருவது சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் இவர் பேசிய கருப்பன் குசும்புக்காரன் என்ற வசனம் தான் நம் அனைவரின் நினைவிற்கு வரும்.

தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடிகர் சூரியின் தந்தையாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் நடிகர் தவசி. அந்த படத்திற்கு பின்னர் ரஜினிமுருகன், கொம்பன், விசுவாசம் போன்ற பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். அதேபோல சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படத்தில் கூட துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் தவசி. இவரை பெரும்பாலோருக்கு வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலமாகத்தான் தெரியும்.

Advertisement

ஆனால் கிழக்கு சீமையிலே படம் துவங்கி கடந்த 30 ஆண்டுகளாக சினிமா துறையில் இருந்து வரும் இவர் எண்ணற்ற படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படி ஒரு நிலையில் நடிகர் தவசி புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறார். சமீபத்தில் இவரது வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி இருந்தது. அதில் பேசியுள்ள தவசி தான் 30 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வருவதாகவும், தமக்கு இப்படி ஒரு நோய் ஆண்டவன் கொடுப்பான் என்று நினைத்து பார்க்க இல்லை என்றும் கூறி இருக்கிறார் நடிகர் தவசி.

கடந்த ஆண்டு விபத்தில் சிக்கிய தவசி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது

அதேபோல போதிய பணம் இல்லாததால் சிகிச்சைக்கு மிகவும் சிரமப்பட்டு வருவதாக கூறியுள்ள தவசி தனக்கு சக கலைஞர்கள் உதவி செய்யுமாறு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். படங்களில் கடா மீசை கம்பீரமான உடல் என்று மிகவும் கட்டுமஸ்தாக இருந்த தவசி தற்போது புற்றுநோய் பாதிக்கப்பட்ட ஒரே ஆண்டில் எலும்பும் தோலுமாக ஆகியிருக்கிறார். கடந்த ஆண்டு தான் தொலைக்காட்சி தொடர் ஒன்றின் படப்பிடிப்பு முடிந்து காரில் சென்றுகொண்டிருக்கும்போது விபத்தில் சிக்கிய தவசி படுகாயமடைந்த தவசி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை பெற்று குணமடைந்தார் என்பது குறிப்படத்தககது.

Advertisement

Advertisement
Advertisement