திரில்லர் சேஸிங் பாணியில் வெளிவந்த 'இந்திரா' படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ

By subhashini · 22/8/2025

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கிறார் வசந்த் ரவி. தற்போது இவர் ஹீரோவாக நடித்திருக்கும் படம் இந்திரா. தரமணி படத்திற்கு பிறகு இவர் இந்த படத்தில் தான் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக மெஹ்ரின் பிர்சாடா நடித்திருக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் அனிதா சுரேந்திரன், கல்யாண் குமார், ராஜ்குமார், சுனில் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு அஜ்மல் இசை அமைத்திருக்கிறார். இந்த படத்தை ஜேஎஸ்எம் புரொடக்‌ஷன் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் சபரீஷ் நந்தா என்பவர் இயக்கி இருக்கிறார். திரில்லர் பாணியில் வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

கதைக்களம்:

படத்தில் ஹீரோ வசந்த் ரவி இன்ஸ்பெக்டராக இருக்கிறார். இருந்துமே இவர் போலீஸ் வண்டியிலேயே குடிக்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்படுகிறது. இதனால் இவர் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். பின் இவர் சஸ்பெண்ட் ஆக இருந்துமே குடித்துக்கொண்டே இருக்கிறார். இதனால் அவருடைய கண் பார்வை இலக்க நேரிடுகிறது. இவருடைய மனைவி தான் மெஹ்ரின் பிர்சாடா. இவர் கவனமாக தன் கணவனை பார்த்துக்கொள்கிறார்.

இந்த நேரத்தில்தான் சுனில் தன்னை வெறுப்பேற்றுபவர்கள் எல்லோரையுமே கொன்று அவர்கள் கையை மட்டும் வெட்டி வேறொரு இடத்தில் போடுகிறார். அப்படி ஒரு நாள் வசந்த் ரவி மனைவி மெஹ்ரினையும் கொன்று அவருடைய கையை அறுத்து செல்கிறார். இதனால் ஆத்திரமடைந்த ஹீரோ வசந்த் ரவி தன்னுடைய மனைவியை கொன்றவரை பிடிக்க வேண்டும் என்று தீவிரமாக செயல்படுகிறார். இவர் கண் பார்வை இல்லை என்றாலுமே தன்னுடைய நண்பனின் உதவியுடன் அந்த கொலைக்காரனை தேடிப் பிடிக்கப் போகிறார்.

ஒருவழியாக சுனிலை பிடித்து விசாரிக்கும் போது தான் உண்மை தெரிய வருகிறது. எல்லாக் கொலைகளை அவர்தான் செய்திருக்கிறார். ஆனால், வசந்த் ரவி மனைவியை அவர் கொல்லவில்லை என்பது தெரிய வருகிறது. இதனால் இன்னும் வசந்த் ரவிக்கு மன உளைச்சலும் கோபம் அதிகமாகிறது. பின் தன் மனைவியை கொன்றது யார்? என்று தேடுகிறார். இறுதியில் வசந்த் ரவி, தன் மனைவியை கொன்றவரை கண்டுபிடித்தாரா? அவர்களை பழி தீர்த்தாரா? என்பது தான் படத்தின் உடைய மீதி கதை.

படத்தில் வசந்த் ரவி அவர்கள் தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாகவும் கச்சிதமாகவும் செய்து முடித்திருக்கிறார். சோகம், கோபம், ஆக்சன் என அனைத்திலுமே ஸ்கோர் செய்து இருக்கிறார். ஆனால், சில இடங்களில் இவரப்பி நடிப்பு செயற்கை தனமாக இருந்தது போல தெரிகிறது. இவரை அடுத்து வில்லனாக வரும் சுனிலுமே தன்னுடைய சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். முதல் பாதி முழுவதுமே யார் சுனில்? எதற்காக கொலை செய்கிறார்? என்று விறுவிறுப்பாக செல்கிறது.

இடைவெளிக்கு பிறகு வரும் ட்விஸ்ட், அதனுடைய பிளாஷ்பேக், பழிவாங்குதல் ஸ்டோரி எல்லாம் கொஞ்சம் பொறுமையாக செல்கிறது. இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பை கொடுத்திருந்தால் நன்றாக இருக்கும்.
இரண்டாம் பாதியில் வரும் ட்விஸ்ட் அதிர்ச்சியை கொடுத்தாலும் ஏற்றுக் கொள்ள வகையில் இல்லை. படம் முழுவதுமே ஒரு சைக்கோ கொலையாளியை தேடி செல்வது போன்று தான் இயக்குனர் கொடுத்திருக்கிறார். இது முழுக்க முழுக்க பழிவாங்கல் கதையாக இருந்தாலும் கொஞ்சம் வித்தியாசமாக கொடுத்திருக்க இயக்குனர் முயற்சி செய்து இருக்கிறார்.

அதோடு குடி, கோபம் ஒரு மனிதனுக்கு எவ்வளவு பெரிய ஆபத்து என்பதையும் இந்த படத்தில் சுட்டி காட்டி இருப்பது பாராட்டுக்குரிய விஷயம். டெக்னிக்கல் நன்றாக இருக்கிறது. ஒளிப்பதிவு, பின்னணி இசை எல்லாமே நன்றாக இருக்கிறது. இருந்தாலும் இன்னும் கொஞ்சம் கதையை விறுவிறுப்பாக கொண்டு சென்றிருக்கலாம். மொத்தத்தில் இந்திரா ஒரு சுமாரான படமாக இருக்கிறது.

நிறை:

படத்தின் முதல் பாதி அருமை

ஹீரோ வசந்த் ரவி நடிப்பு ஓகே

நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்

பின்னணி இசை ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலத்தை கொடுத்திருக்கிறது

குறை:

இரண்டாம் பாதியில் இன்னும் கொஞ்சம் கவனத்தை செலுத்தி இருக்கலாம்

ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள்

வழக்கமான பழிவாங்கல் கதை

சில காட்சிகள் செயற்கையாக இருக்கிறது.

மொத்தத்தில் இந்திரா - திரில்லர் சேசிங் படம்

Tamil Behind Talkies AMP · Quick view
View full