குடும்பப் பிரச்னையில் ஜி.வி. பிரகாஷ் எவ்வளவு நாகரீகமா இருந்தார் - நெகிழ்ச்சியில் வசந்த பாலன்

By subhashini · 19/7/2025

ஜி.வி.பிரகாஷ் பற்றி வசந்த் பாலன் பேசி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கோலிவுட்டில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் ஜி.வி.பிரகாஷ். இவர் இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என பல துறைகளில் சாதித்து வருகிறார். இவர் இரு ஆஸ்கர் விருதுகளை அள்ளி வந்து பெருமை சேர்த்த இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானின் அக்கா மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், ஜிவி பிரகாஷ் அவர்கள் முதன்முதலாக ‘வெயில்’ என்ற படத்தில் இசை அமைத்து தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தார். அதைத் தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். குறிப்பாக, கடந்த 2024 ஆம் ஆண்டு இவருக்கு நல்ல ஆண்டாக அமைந்தது என்று தான் சொல்ல வேண்டும். கடந்த ஆண்டு இவர் இசையில் வெளிவந்த அனைத்து பாடல்களும் ஹிட் தான்.
சமீபத்தில் ஜி.வி பிரகாஷ் நடிப்பில் வெளியாகி இருந்த படம் கிங்ஸ்டன்.

ஜி.வி பிரகாஷ் குறித்த தகவல்:

இந்த படத்தின் மூலம் தான் தயாரிப்பாளராகவும் ஜி வி பிரகாஷ் சினிமாவில் அடி எடுத்து வைத்திருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருக்கிறது. இதை அடுத்து இவர் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது ஜி. பிரகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் பிளாக்மெயில். இந்த படத்தை மாறன் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் தேஜி அஸ்வினி, பிந்து மாதவி, திலக் ரமேஷ் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

விழாவில் வசந்த் பாலன்:

இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசை அமைத்து இருக்கிறார். இந்த படம் ஆகஸ்ட் 1ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தினுடைய இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றிருக்கிறது. இந்த விழாவில் கலந்து கொண்ட வசந்த் பாலன், என்னிடம் ஜிவி பிரகாஷ் வரும்போது ரொம்ப சின்ன பையனாக இருந்தார். கிட்டத்தட்ட 17 வயது தான். 17 வயதில் இருந்து நான் அவரை பார்க்கிறேன். இப்போது அவர் வளர்ச்சியை பார்க்கும்போது ரொம்ப சந்தோசமாக இருக்கிறது.

ஜி வி பிரகாஷ் பற்றி சொன்னது:

எனக்கு ஜிவியுடன் சேர்ந்து பணிபுரிய வாய்ப்பு கிடைத்ததை நினைத்து ரொம்ப பெருமையாக நினைக்கிறேன். நான் ஜிவியை வைத்து படம் எடுக்கவில்லை இருந்தாலுமே வேறு யார் மூலமாவது சேர்ந்து ஜிவி இந்த இடத்தை பிடித்திருக்கிறார். யாரையும் வெறுக்கத் தெரியாத, யாரிடமும் கோபம் கொள்ளாத, யாரிடமும் மோசமாக நடந்து கொள்ளாத குணத்தை கொண்டவர் தான் ஜி.வி. அப்படித்தான் நான் அவரை பார்த்திருக்கிறேன்.

ஜி வி பிரகாஷ் வளர்ச்சி:

சமீபத்தில் அவருடைய குடும்பப் பிரச்சனையில் எவ்வளவு நாகரிகமாக நடந்து கொண்டார் என்பதை ஒரு வீடியோவில் பார்த்தேன். அதற்குப் பிறகு நான் அவரை தொடர்பு கொண்டு பேசியிருந்தேன். ஜிவி இந்த வயதில் இவ்வளவு நாகரிகமாக நடந்து கொண்டது ஆச்சரியமாக இருந்தது என்று சொன்னேன். இந்த மாதிரியான நபர் தான் இன்டஸ்ட்ரியலுக்கு கண்டிப்பாக இருக்கவேண்டும். இந்த பேரன்பிற்காக அவர் நடிகராகவும் இசையமைப்பாளராகவும் பெரிய இடத்தை தொட வேண்டும். ஜி விக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்த படம் நிச்சயம் வெற்றி அடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full