அந்த படத்துல நான் அப்படி பண்ணிருக்கக்கூடாது - மேடையில் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்ட இயக்குநர் வசந்தபாலன்
வானம் கலைத் திருவிழாவில் இயக்குனர் வசந்த் பாலன் பேசி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 2025 ஆம் ஆண்டிற்கான வானம் கலைத் திருவிழா ஏப்ரல் 1ஆம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள நீலம் புத்தகம் அரங்கில் தொடங்கி இருந்தது. இந்த கலைத் திருவிழா ஏப்ரல் 1ம் தேதி முதல் ஏப்ரல் ஆறாம் தேதி வரை நடைபெற்றது.
இந்த விழாவில் உலக அளவில் விருதுகள் வாங்கிய திரைப்படங்கள், தடை செய்யப்பட்ட உலக திரைப்படங்கள் உட்பட பல முக்கியமான படைப்புகள் திரையிடப்பட்டது. இந்நிலையில் இந்த விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் வசந்த் பாலன், வெயில் படத்தில் பன்றி மேப்பவரை வில்லனாக காண்பித்திருப்பேன். அதற்காக இப்போது நான் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
வானம் கலை திருவிழா:
சினிமாவிற்கு ரஞ்சித் வருவதற்கு முன்பு தலித் பற்றிய பார்வை, ஜாதி பற்றிய பார்வை, அதிகாரம் பற்றிய பார்வை தமிழ் சினிமாவில் வேறுவாக இருந்தது. உண்மையிலேயே நாகராஜ் மஞ்சுளே, ரஞ்சித், மாரி செல்வராஜ் ஆகியோர் சினிமாவிற்கு வந்த பிறகு தான் மொத்த பார்வையுமே மாறி இருக்கிறது. நாம் சித்தரிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரமும் சிறுபான்மையினராக, தலித்தாக இருந்து விடக் கூடாது என்று கூடுதல் கவனம் இருக்க வேண்டும்.
வசந்தபாலன் பேசியது:
இரு பாலினத்தவரை மூன்றாம் பாலினத்தவர் எப்படி நடத்த வேண்டும் என்ற ஒரு விஷயத்தை தன்னுடைய படங்கள் மூலம் கூர்மையாக ரஞ்சித் எடுத்துக் காண்பித்து இருக்கிறார். இதனால் மிக முக்கியமான மாற்றம் தமிழ் சினிமாவில் ஏற்பட்டிருக்கிறது. கூகை என்ற நூலகத்தை திறந்து வைத்திருக்கிறார். இசை கச்சேரி, திரைப்பட விழா போன்றவற்றையெல்லாம் நடத்துகிறார். பார்ப்பதற்கே ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.
https://www.youtube.com/watch?v=g4L4EycDWu8
வசந்தபாலன் குறித்த தகவல்:
அரசியலை மிக கவனமாக சொல்ல வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது என்று கூறி இருக்கிறார். தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனராக திகழ்பவர் வசந்தபாலன். இவர் முதலில் இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணி புரிந்திருந்தார். ஷங்கர் இயக்கிய ஜென்டில்மேன், காதலன், இந்தியன் போன்ற படங்களில் ஷங்கருக்கு உதவி இயக்குனராக இருந்தார் வசந்தபாலன். அதன் பின் இவர் 2003 ஆம் ஆண்டு ஆல்பம் என்ற படத்தை இயக்கியிருந்தார்.
வசந்தபாலன் திரைப்பயணம்:
இந்த படம் பெரிய அளவில் பேசப்படவில்லை. பின் இவர் வெயில் என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தின் மூலம் வசந்த்பாலன் தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இந்த படத்திற்காக இவருக்கு பல விருதுகள் கிடைத்திருந்தது. இதனை தொடர்ந்து இவர் அங்காடி தெரு, அரவான், காவியத்தலைவன், ஜெயில், அநீதி போன்ற படங்களை இயக்கி இருக்கிறார். மேலும், இவர் திரைப்பட இயக்குனர் மட்டும் இல்லாமல் எழுத்தாளரும் ஆவார். இப்படி இவர் கிட்டத்தட்ட தமிழ் திரை உலகில் நுழைந்து 23 வருடங்கள் கடந்து இருக்கிறது. சமீபத்தில் இவர் தலைமைச் செயலகம் என்ற வெப் தொடரை இயக்கி வெளியிட்டு இருந்தார்.