வேதாளம் படத்தின் தெலுங்கு ரீ - மேக்கின் டீஸர் - அஜித்தாக சிரஞ்சீவி, லட்சுமி மேனனாக யார் பாருங்க.

By Rajkumar · 22/8/2021

சமீப காலமாகவே தமிழ் வெளியான பல்வேறு திரைப்படங்கள் மற்ற மொழிகளிலும் ரீ - மேக் செய்யப்படுவது அதிகரித்து கொண்டு வருகிறது. அதிலும் சமீப காலமாக பல்வேரு சூப்பர் ஹிட் தமிழ் படங்களை தெலுங்கில் ரீ - மேக் செய்து வருகின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தான் தனுஷ் நடித்த 'அசுரன்' படத்தின் தெலுங்கு ரீ - மேக்கான 'நாரப்பா' திரைப்படம் வெளியாகி இருந்தது. தமிழை போலவே தெலுங்கிலும் இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது.

https://www.youtube.com/watch?v=BUk3zznmpsM

இப்படி ஒரு நிலையில் தெலுங்கு சூப்பர் ஸ்டாரான சிரஞ்சீவியும் தமிழ் ரீ - மேக்கை கையில் எடுத்துள்ளார். அதுவும் அஜித் நடித்த 'வேதாளம்' படத்தின் ரீ - மேக்கில் தான் சிரஞ்சீவி நடிக்க இருக்கிறார். தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் சிவா. இயக்குனர் சிவா இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த வேதாளம் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

இந்த படத்தில் அஜீத், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன், சூரி, கோவை சரளா உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படத்திற்கு அனிரூத் இசை அமைத்து இருந்தார். இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் தெலுங்கு ரீ - மேக்கில் சிரஞ்சீவி நடிக்க இருக்கிறார் என்ற அறிவிப்பு வெளியானது. 'வேதாளம்' படத்தில் அஜித்துக்குப் பிறகு மிக முக்கியமான கதாபாத்திரத்தில் லட்சுமி மேனன் நடித்திருப்பார்.

அவருடைய கதாபாத்திரத்தில் தெலுங்கில் யார் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தில் லட்சுமி மேனன் கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க இருக்கிறார். இன்று ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு இந்த படத்தின் டீஸர் வெளியாகி இருக்கிறது. இந்த படத்திற்கு 'போலா ஷங்கர்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

behindtalkies AMP · Quick view
View full